சமுகம் 

சமயப் புனிதத்துவத்தைக் கெடுப்பதாகக் கருதி ஹஸ்ரத் பாத்திமா ஸஹ்ரா மஸ்ஜிதை அழிப்பதற்குத் தீர்மானம்

ஹஸ்ரத் ஸஹ்ரா மஸ்ஜிதை அழிக்கும்படியான, 'பகு' மேன்முறையீட்டு நீதி மன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்கும், இஸ்லாமிய சட்டவல்லுனர் சபையின் தவிசாளர் ஷெய்க் அல்லாஹ்ஷுகுர் பாஷா சாதேஹ் அவர்கள், இது இஸ்லாத்தை அவமதிக்கும் செயலெனக் கூறியுள்ளார்.

ஸைனபியேஹ் இணையத்தளத்தின்படி, பாஷா சாதேஹ் கூறுவதாவது, நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, அஸர்பைஜான் மக்களின் மகிழ்ச்சி மிக்க ஹஜ்ஜுப் பெருநாளை அற்பமான ஒன்றாக மாற்றிவிட்டது. இத்தீர்ப்பு இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களின் நம்பிக்கைக்கும் மிகப்பெரும் இழுக்காகும். மக்காவின் புனித மஸ்ஜிதில் முஸ்லிம்கள் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கும் வேளையில், மற்றொரு முஸ்லிம் நாட்டில் ஒரு மஸ்ஜிதை தகர்ப்பதென்பது நம்ப முடியாத அநீதியாகும்' என்றார்.

இந்தத் தீர்ப்பு பற்றிய தனது மறுப்பை அவர் வெளியிடுகின்ற போது, இஸ்லாத்தின் புனிதஸ்தலங்களை அவமதிப்பது உலக முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் செயலெனவும் அவர் கண்டித்தார்.

குறித்த மஸ்ஜித், அஸர்பைஜான் குடியரசின் தலைநகரான பகுவில் 1998ல் கட்டப்பட்டது. இம்மஸ்ஜித் கட்டப்படுவதற்கு முன், அதற்கான சட்ட ரீதியான அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி, அது தகர்க்கப்பட வேண்டுமென அந்நாட்டின் கட்டட மேற்பார்வை அலுவலகம் கடந்த வருடம் தெரிவித்திருந்தது.

அந்தத் தீர்மானம் இதுவரை அமுலுக்கு வராத போதிலும், சமய விவகாரங்கள் குறித்த அஸர்பைஜான் அரசாங்கத்தின் கடுமையான போக்கினால், மேன்முறையீட்டு நீதிமன்றம், மஸ்ஜிதை இடிப்பதற்கான அனுமதியை உறுதி செய்துள்ளது.

 

அல்முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகம் இணைய குர்ஆன் கற்கைநெறிகளை வழங்குகின்றது.

அல்முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகம் ஈரானிலும் ஈரானுக்கு வெளியிலும் வசிக்கும் மாணவர்களுக்கான இணையப் பாடநெறிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next