சமுகம்பாலியல், வன்முறை ஆகிய இவ்விரு அழிவுதரும் ஆயுதங்களுக்கும் எதிராகப் போராடுவதற்கு, உடன்பாடு காணப்பட்ட தேசியத் திட்டம் ஒன்று இல்லை என்பதைக் குறிப்பிட்ட அவர், இவ்விரு ஆயுதங்களுக்கும் எதிராகப் போராடுவது சமய அறிஞர்களினதும், கலாசார நிறுவனங்களினதும் பணியாகும்' எனவும் தெரிவித்தார்.

அப்ராசாயிப் தொடர்ந்து கூறுகையில், 'துரதிஷ்டவசமாக, மேற்கின் கலாசாரம் மனித கலாசாரத்திற்கு முற்றிலும் எதிரான ஒன்றாகவே வளர்ந்துள்ளது' எனவும் தெரிவித்தார்.

 

 

 

கல்வியியல் குர்ஆனிய நிலையம் சவூதி அரேபியாவில் திறந்து வைக்கப்படவுள்ளது

 

'அமிர் சல்மான் பின் அப்துல் அஸீஸ்' எனும், குர்ஆன் மனனம், குர்ஆன் விரிவுரை மற்றும் தஜ்வீத் கற்கைகளுக்கான விசேட கல்வி நிலையமொன்று சவூதியின் ரியாத் நகரில் திறந்து வைக்கப்படவுள்ளது. அல்இக்திசாதிய்யாஹ்வின் செய்தியின் படி, குர்ஆனிய நிலையத்திற்கான நிர்மாணச் செயற்றிட்டம் பத்து மாதங்களுக்குள் முடிவடையும். அழகியல் தொழில்நுட்பங்களினூடாக அது வளப்படுத்தப்படும்.

செயற்றிட்டத்தின் மேற்பார்வைக் குழு அங்கத்தவர் நாஸர் பின் அலி அல்காதமி குறிப்பிடும் போது, 'நிலையத்தை முழுமைப்படுத்திய பின்னர், அங்கு குர்ஆனிய கற்கைகள் நடைபெறும். நவீன தொழில்நுட்பங்களை உபயோகிக்கும் சவூதி அறிஞர்கள் மற்றும் குர்ஆனியத் துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் ஆகியோர் இங்கு கற்பித்தற் பணிகளை மேற்கொள்வர்' என்றார்.

'வகுப்பறைகளுடன், நூல்நிலையம் மற்றும் விசேட ஆய்வு மண்டபம் என்பவற்றை இந்நிலையம் கொண்டிருக்கும்' என மேலும் அவர் தெரிவித்தார்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next