சமுகம்'கலாசார சமய செயற்றிட்டங்களுக்கான ஒத்துழைப்புகள் பாராளுமன்றத்தில் உயர்ஸ்தானத்தில் வைக்கப்பட்டுள்ளன' என்று குறிப்பிட்ட அவர், 'கும் சமயப் பாடசாலை மற்றும் ஏனைய கலாசார நிலையங்களுக்கான நிதிகளை ஒதுக்குதல், அடுத்த வருடத்திலும் அவை தொடர்வதற்குத் திட்டமிடுதல் ஆகிய இரட்டைப் பணிகள் இப்போது எம்முன் இருக்கின்றன' என்றும் தெரிவித்தார்.

டிசம்பர் பத்தாம் திகதி, புனித கும் நகரிலுள்ள தாருல் ஹதீஸ் அறிவியல் கலாசார நிறுவனத்தில் இடம்பெற்ற வைபவத்தின் போது, 14 பாகங்களைக் கொண்ட, இமாம் ஹுஸைன் (அலை) அவர்களது தகவல்களடங்கிய இக்கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது. இவ்வைபவத்தில் பாராளுமன்ற சபாநாயகர் ஆயத்துல்லாஹ் சாபி குல்பைகானியும் பெருந்தொகையான பல்கலைக்கழக மற்றும் கல்லூரி விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.

 

அஹ்லுல்பைத் தொடர்பான ஆக்கங்களை உருவாக்கியோர் லெபனானில் கௌரவிக்கப்பட்டனர்

பைய்ரூத்திலுள்ள யுனெஸ்கோ மண்டபத்தில் கடந்த டிசம்பர் பத்தாம் திகதி இடம்பெற்ற வைபவத்தின் போது, அஹ்லுல்பைத் பற்றி ஆக்கங்களை உருவாக்கிய கிறிஸ்தவ எழுத்தாளர்களும் கவிஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இவ்வைபவம், குவைத்திலுள்ள ஈரான் கலாசார நிலையம் மற்றும் லெபனான் வழிகாட்டல் அமைச்சு என்பவற்றின் அனுசரணையுடன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

'இமாம் அலீ (அலை), மனித நீதியின் குரல்' எனும் நூலை எழுதிய ஜோர்ஜ் ஜோர்டாஹ், போல்ஸ் சலாமாஹ், ஷகூர், பிக்டர் அல்கக் மற்றும் ஜோசப் ஹாஷிம் ஆகிய கிறிஸ்தவ கவிஞர்களும், நபி (ஸல்) அவர்களதும், மற்றும் ஏழு ஷீயா இமாம்களதும் வாழ்க்கை பற்றி ஒன்பது பாகங்களை எழுதிய சுலைமான் கதனி என்பவரும் இவ்வைபவத்தின் போது கௌரவிக்கப்பட்டனர்.

மூவாயிரம் தவறான சமயக் குழுக்களும் கொள்கைகளும் நடைமுறையிலுள்ளன

'ஓர் ஆய்வாளர், 1965இலிருந்து மேற்கொண்ட ஆய்வுகளின் படி, தவறாக வழிநடத்தப்பட்டுள்ள 3000 சமயக் குழுக்கள், ஏழு மில்லியன் இணையத்தளங்கள் ஊடாக தமது நிகழ்ச்சி நிரல்களை மேற்கொண்டு வருகின்றன'

இஸ்லாமிய அறிவியல் மற்றும் கலாசார ஆய்வு நிலையத்தினால் நடத்தப்பட்ட 'தவறான கடவுள் நம்பிக்கையும் சமய அறிஞர்களின் கடமையும்' எனும் ஒன்றுகூடலின் போது இக்கருத்துக்களைத் தெரிவத்த ஏ. அப்ராசாயிப் பூர் மேலும் குறிப்பிடும் போது, 'தவறான கடவுள் நம்பிக்கைகள் மற்றும் தவறாக வழிநடத்தப்பட்ட சமயக் குழுக்கள் ஆகியன, ரசிகர்களையும் தம்மைப் பின்பற்றுபவர்களையும் தம்பால் ஈர்ப்பதற்கு, பாலியல் மற்றும் வன்முறை என்பவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றன' எனவும் தெரிவித்தார்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next