சமுகம்இந்நிகழ்வில் உரையாற்றிய, மாகாணத்தின் அவ்காப் மற்றும் அறப்பணிகளுக்கான திணைக்களத்தின் தலைவர் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் செய்யித் காஸிம் மிர்ஹுஸைனி அஸ்கவரி அவர்கள், 'அல்குர்ஆனை ஓதுவதுடன் மாத்திரம் எமது கடமை நிறவுபெற்றுவிடுவதில்லை, மாறாக, அதன் கருத்துக்களை எமது வாழ்வில் கடைப்பிடித்து நடக்கவும் வேண்டும்' எனத் தெரிவித்தார்.

'இன்று, புனித அல்குர்ஆனுக்கும் விலாயத்துக்கும் எதிராக மூர்க்கத்தனமாக தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. இச்சவால்களை நாம் முறியடிப்பதற்கு, அல்குர்ஆனின் பக்கமும் விலாயத்தின் பக்கமுமே நாம் செல்ல வேண்டியுள்ளது' என்பதை அவர் குறிப்பிட்டுக் கூறினார்.

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் அஹ்மத் ஷரப்கானி தனதுரையில், இப்போட்டி நிகழ்ச்சி பற்றிய தகவல்களை வழங்கினார். 'இப்போட்டியின் முதற்சுற்றில் 134 குர்ஆனிய குழுக்கள் பங்குபற்றி, அதில் 33 குழுக்கள் தெரிவு செய்யப்பட்டு, இறுதிச் சுற்றுக்கு அனுப்பப்பட்டன. இதில் ஐந்து குழுக்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டன. இவர்களுக்கு ஹஜ் செய்வதற்கான வாய்ப்பு பரிசாக வழங்கப்பட்டுள்ளது' என அவர் தெரிவித்தார்.

அஹ்லுல்பைத், நன்கொடை, அறக்கொடை, விலாயத்தும் தலைமைத்துவமும், நீதி, நற்செயல் மற்றும் அமீருல் முஃமினீன் இமாம் அலீ (அலை) அவர்களைப் புகழ்ந்துரைக்கும் கவிதைகள் என்பன இவ்வருட புகழ்ப்பாவின் கருப்பொருள்களாக அறிவிக்கப்பட்டிருந்தன.

அதான் போட்டியின் இரண்டாம் நிகழ்வு, புகழ்ப்பா மற்றும் குழு ஓதல் போட்டிகளின் ஓர் அங்கமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

அஹ்லுல்பைத்தினரின் பயிற்றுவிப்புகளே எமது கலாசாரத்திற்கான பாதுகாப்பு

'இன்று, அஹ்லுல் பைத்தினரின் பயிற்றுவிப்புகளினூடாக சமய கோட்பாடுகளுக்கு அதிக அவதானிப்புகளை வழங்குதன் மூலமே, எமது சமய மற்றும் தேசிய கலாசாரத்தைப் பராமரிக்க முடியும்'

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களைப் பற்றிய கலைக்களஞ்சிய வெளியீட்டு விழாவின் போது, பாராளுமன்ற பேச்சாளர் அலி லாரிஜானி இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.

இக்கலைக்களஞ்சியம், ஆஷூரா எழுச்சியின் தனித்துத்தைப் பிரதிபலிக்கும் பெறுமதியான பணி என்பதைக் குறிப்பிட்ட அவர், 'சரியாக அறிமுகப்படுத்தப்பட்டால், இமாம் ஹுஸைனின் வாழ்க்கையும், ஆஷூராவும் சமூகத்தில் மிக உயர்வு பெறும்' என்றார்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next