சமுகம்உலக இஸ்லாமிய வங்கியியலின் முதலாவது ஆசிய நிகழ்வை, எதிர்வரும் வருடத்தின் ஜுன் மாதத்தில் சிங்கப்பூர் நடத்தவுள்ளது.

சிங்கப்பூர் கண்காணிபபு அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹென்ங் ஸ்வீ கியாட்டினால், பஹ்ரைனில் இடம்பெற்ற பதினாறாவது றுஐடீஊ மாநாட்டில் வைத்து இச்செய்தி தெரிவிக்கப்பட்டது.

இவ்வாசிய நிகழ்வு, ஆசியாவுக்கும் மத்திய கிழக்குக்கும் இடையிலுள்ள ஆழமான உறவை வலுப்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது.

தொழில்வல்லுனர்கள் இஸ்லாமிய நிதித் துறையிலான தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு களத்தை வழங்குவது இதன் பிரதான எதிர்பார்ப்பாகும்.

WIBC என்பது, இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதித்துறைத் தலைவர்கள் இணைகின்ற, உலகின் மிகப் பெரியதும் முக்கியமானதுமான ஒன்றுகூடலாகும்.

 

புகழ்ப்பா, குழு ஓதல் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

புகழ்ப்பா மற்றும் புனித குர்ஆனை குழுவாக ஓதல் ஆகிய போட்டியின் பதினான்காவது போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு, கடந்த வியாழக்கிழமை ரஷ்த் நகரில் இடம்பெற்ற சிறப்பு வைபவத்தில் வைத்து விருதுகள் வழங்கப்பட்டன.

அதான் மற்றும் இப்திஹால் போட்டிகளில் உயர்நிலைக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களும் இவ்வைபவத்தின் போது விருதுகள் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் குர்ஆனிய, கலாசார மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஹுஸைன் பர்தியின் குர்ஆன் ஓதலைத் தொடர்ந்து ஆரம்பமான இந்நிகழ்ச்சி, சர்வதேச அவ்காப் குர்ஆன் போட்டி என பெயரிடப்பட்டிருந்தது.

புகழ்ப்பா மற்றும் இப்திஹால் நிகழ்ச்சிகளுடன் மஸன்தரான் மாகாணத்திலிருந்து வந்த ஷமிம் பெஹஷ்ட் குழுவினரால் நிகழ்த்தப்பட்ட புனித அல்குர்ஆனை குழுவாக ஓதும் நிகழ்ச்சியும் அவ்வைபவத்தில் இடம்பெற்றது.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next