சமுகம்'அலி (அலை), இஸ்லாமிய ஐக்கியத்தின் தெளிவான முன்மாதிரி' எனும் தலைப்பிடப்பட்ட இம்மாநாடு, நான்கு மணித்தியாலங்களாக இடம்பெற்றது. கதீர் நிகழ்வின் வரலாற்று ரீதியான பகுப்பாய்வினூடாக இமாம் அலீ (அலை) அவர்களின் தனித்துவப் பண்புகளை, கலந்து கொண்ட விரிவுரையாளர்கள் ஆய்வு செய்தனர்.

'உண்மையாகவே, நான் இரண்டு பெறுமதியான விடயங்கள் மத்தியில் வாழுகின்றேன். ஒன்று அல்லாஹ்வின் வேதம் அல்குர்ஆன். மற்றையது எனது குடும்பத்தினரான அஹ்லுல்பைத்தினர்' எனும் நபி (ஸல்) அவர்களின் ஸகலைன் ஹதீஸ் குறித்து, பெக்டஷி சமயக் குழுவின் தலைவரான ஷெய்க் முஃமின் கொராசானி அவர்கள், தனதுரையில் விளக்கினார். அஹ்லுல்பைத் தொடர்பான நபி (ஸல்) அவர்களின் அக்கறை மற்றும் கவலை பற்றியும் இதன் போது அவர் எடுத்துரைத்தார்.

இமாம் அலீ (அலை) அவர்கள் தொடர்பான புகழுரைகளும், இஸ்லாமிய கீதங்களும் இந்நிகழ்வில் பாடப்பட்டன.

ஒவ்வொரு நாகரிகமும் ஒழுக்கக் கோட்பாடுகளின் மீதே நிறுவப்பட்டுள்ளன

'இஸ்லாத்திலிருந்தும் அதன் ஒழுக்கக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தி செய்யப்பட்ட நாகரிகங்களிலிருந்துமே ஒழுக்கம் தொடர்பான கற்பித்தல்கள் உருவாக்கப்பட வேண்டும்'.

பத்திரிகையாளரும், 'சமாதானத்தின் மகாராணி', மற்றும் 'குர்ஆனிய கதைகளில் உரையாடலின் பங்கு' ஆகிய நூல்களின் ஆசிரியையுமான ஸஹ்ரா கொராசானி, தொடர்ந்து கூறுகையில், இஸ்லாம், மனிதப் பண்புகளை நேர்த்தியாக்கக் கூடிய இஸ்லாமிய ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பயிற்சிநெறியாகும். புனித அல்குர்ஆன், ஒழுக்கமும் மனிதப் பண்புகளும் இல்லாத ஒவ்வொருவரையும் கண்டிக்கின்றது' என்றார்.

'ஒழுக்கக் கற்பித்தல் மற்றும் ஒழுக்கவியல் என்பவற்றுக்கான அடித்தளம் இஸ்லாமாகும்' என்றும் அவர் கூறினார்.

மனித வாழ்விலும், நாகரிகத்திலும் ஒழுக்கத்தின் பங்கு பற்றி வலியுறுத்திய அவர், 'ஒழுக்கப் பெறுமானங்களை மதிக்காத வன்முறையும் விரோதமும் ஒரு சமூகத்தின் நாகரிக வளர்ச்சியை அனுமதிக்காது' என்று கூறினார்.

'ஒரு சமூகத்தில் இஸ்லாமிய ஒழுக்கக் கோட்பாட்டை விருத்தி செய்வதற்கு நீதியை நிலைநாட்டுவதற்காக முயற்சிக்கும் அதிகாரபூர்வமான அமைப்புகள் அவசியமாகும். அவையே சமூகத்தில் நம்பிக்கையின்மையின் வளர்ச்சியைத் தடுக்கும்' எனத் தெரிவித்த அவர், 'நீதியே, இஸ்லாமிய சமூகத்தில் ஒழுக்கத்தை மேம்படுத்துவதற்கான மிக முக்கியமான காரணி' எனவும் குறிப்பிட்டார்.

உலக இஸ்லாமிய வங்கியியல் மாநாட்டின் ஆசிய நிகழ்வை சிங்கப்பூர் நடத்துகின்றதுback 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next