சமுகம்




Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99

Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103

குர்ஆனிய கலாசாரத்தை பிரசாரம் செய்வதற்கான முதலாவது படிமுறை அது தொடர்பான பயிற்சியாகும்

குர்ஆனிய கலாசாரத்தை பிரசாரம் செய்வதிலான முதலாவது படிமுறை பயிற்சிகளை வழங்குவதில் கவனம் செலுத்துவதாகும். குறிப்பாக, தீவிர அணுகுமுறைகள் தேவைப்படும் ஏழ்மையான பிராந்தியங்களில் குர்ஆனியப் பயிற்சிகளை வழங்குவதாகும்.

இவ்வாறு தெரிவித்த, லோர்ஸ்டானிலுள்ள குர்ஆனிய நிலையங்கள் மற்றும் நிறுவனங்களின் சம்மேளணத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினரான முர்வரித் ஹஸன்வன்த் தொடர்ந்து கூறுகையில், எதிர்வரும் காலங்களில் மாகாண மட்டத்தில் குர்ஆனிய நிகழ்ச்சித் திட்டமொன்றை நடத்துவதற்கு இந்நிலையங்களினால் திட்டமிடப்பட்டுள்ளன என்றார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், இந்நிகழ்ச்சித் திட்டம் கொரம் ஆபாதிலுள்ள செய்யித் அலி காஸி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் 150 பேர் பங்குபற்றுவார்கள்.

இந்நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, குர்ஆனிய விரிவுரை தொடர்பான முறைமைகள் பற்றி விளக்கமளிக்கப்படும் என்பதைக் குறிப்பிட்ட அவர், இந்நிகழ்ச்சி மாகாணத்தில் குர்ஆனிய போதனைகளையும் கலாசாரத்தையும் பிரசாரம் செய்யும் நோக்கில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

 

ஆயத்துல்லாஹ் அலி சீஸ்தானியை அவமதித்தமைக்கு ஈரானிய எம்பிக்கள் கண்டனம்

உயர் ஆயத்துல்லாஹ் அல் அல்சீஸ்தானிக்கெதிரான சவூதி முப்தியின் அவமதிப்பு குறித்து கண்டித்து, ஈரான் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

240 எம்பிக்கள் கையொப்பமிட்டுள்ள அவ்வறிக்கை, இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது ஹஸன் கபூரியினால் வாசிக்கப்பட்டது. முஸ்லிம் உம்மாஹ்வின் இன்றைய தேவைகளாக ஒற்றுமையும் ஐக்கியமும் இனங்காணப்பட்டுள்ள நிலையில், அதனைத் தகர்ப்பது போல், சவூதி முப்தி வெள்ளிக்கிழமை குத்பாப் பேரரையின் போது ஆற்றிய உரை கண்டிக்கத்தக்கது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரபல சுன்னி அறிஞர்களான தபரி மற்றும் சுயூதி மற்றும் பல அறிஞர்களின் ஆதாரங்கள், இமாம் அலீ (அலை) அவர்கள் தொடர்பாகவும், அவர்களது ஷீயாக்கள் தொடர்பாகவும் ஹதீஸ்களை அறிவித்துள்ளன என்பதை இந்த முப்தி அறிந்து கொள்ள வேண்டும். ஷீயா முஸ்லிம்கள் முஸ்லிம் உம்மாஹ்வின் பிரதான பகுதியினர் என்பதையும், ஷீயா அறிஞர்கள் இஸ்லாமிய நாகரிகத்திற்கு மிகப் பெரும் பங்களிப்புக்களை வழங்கியுள்ளார்கள் என்பதையும் அந்த முப்தி அறிந்து கொள்ள வேண்டும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next