அல் குர்ஆன் மாற்றப்பட்டுள்ளது என்பதில் தங்களது கருத்து என்ன?




Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99

Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103

பதில்: நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்கு முன் எத்தனையோ நபிமார்கள் வந்துள்ளனர் வேதமும் கொண்டு வந்துள்ளனர். அவை பல தரப்பட்ட காரணங்களால் முற்றாக அழிந்து போய் விட்டது அல்லது அதில் சிலது மாற்றப்பட்டு மாற்றம் அடைந்துள்ளது. ஆனால் அல்குர்ஆனை உலகம் முடியும் வரை மனிதர்களின் நேர் வழிக்காக இறைவன் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் மூலமாக இறக்கி வைத்துள்ளான், உறுதியான ஆதாரங்களின் படி அது மாற்றப்படுவதில் இருந்து பாதுகாப்பாக இருக்கின்றது. ஆனால் இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும், அல்குர்ஆன் மாற்றம் அடைந்துள்ளது என்ற ரிவாயாத்துக்கள் பலவீனமாக (ழயீபாக) இருந்தாலும் ஷீஆக்களது ஹதீது கிரந்தங்களில் வந்துள்ளது அது அல்குர்ஆனில் வைத்துள்ள அவர்களது கொள்கையை காட்டுகிறது என்றால், அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினரது அதிகமான நூற்களிலும் குர்ஆன் மாற்றம் அடைந்துள்ளது என குறிப்பிடும் ஹதீதுகள் நிறைய இருக்கின்றது. இதன்படி அவர்களையும் குர்ஆன் மாற்றப்பட்டுள்ளது என்ற கொள்கையுடையவர்கள் என்றே கூறவேண்டும்!!!

அல்குர்ஆன் மாற்றப்பட வில்லை என்ற ஆதாரங்களை கூறும் முன் மாற்றம் அடைதல் (தஹ்ரீப்) சொல்லுடைய கருத்தை முன்வைப்பது சிறந்தது என கருதுகிறோம்.

தஹ்ரீப் (மாற்றம் அடைதல்) இரண்டு வகைப்படும்: முதலாவது கருத்து ரீதியான மாற்றம் இரண்டாவது: சொல் ரீதியான மாற்றம்.

அல்குர்ஆனின் மாற்றம் சம்பந்தமாக, அதாவது ஒரு வசனத்தின் கருத்தை சரியான முறையில் அறியாது அதற்குறிய உண்மையான கருத்தைப் பெறாது தனக்கு விளங்கிய கருத்தைப் பெரும் போது, இதை குருகிய சிந்தனையுடைவர்கள் செய்கின்றார்கள் என்றிருந்தாலும், கருத்து ரீதியான மாற்றம் ஏற்படுகின்றது. ஆனால் குர்ஆனின் அடிப்படை சொல்லில் எவ்வித சொல் ரீதியான மாற்றம் ஒரு போதும் ஏற்படவில்லை.

ஆனால் சொல் ரீதியான மாற்றம் என்பது அல் குர்ஆன் வசனத்தில் ஒரு சொல்லை, வசனத்தை கூட்டுதல் அல்லது குறைப்பதாகும். இது ஷீஆ, சுன்னாக்களின் ஏகோபித்த கருத்தின் படி குர்ஆனில் நடை பெற வில்லை. இன்னும் அல்குர்ஆனில் ஏதாவது ஒன்றை அதிகப்படுத்தவோ அல்லது குறைக்கவோ எவருக்கும் சக்தி இல்லை. அது எவராலும் செய்ய முடியாத ஒரு செயலாகும்.

ஷெய்குத் தாயிஃபா எனப்படும் ஷீஆக்களின் மூத்த அறிஞரான தூஸி (ரஹ்) அவர்கள் சொல்கிறார்: முஸ்லிம்களின் ஏகோபித்த கருத்தின் படி குர்ஆனின் அதிகப்படுத்தப்பட்டுள்ளது என்ற கருத்து பாத்திலாகும். (ஷெய்க் தூஸி, அத்திப்யான் ஃபீ தப்ஸீரில் குர்அன், பாகம் 1 பக்கம் 3) அல்லமா ஹில்லி அவர்கள் அல்குர்ஆன் மாற்றமடைவதை விட்டும் பாதுகாக்கப்பட்டுள்ள விடயத்தில் இவ்வாறு சொல்கிறார்: அல் குர்அனில் முற்படுத்தலோ அல்லது பிற்படுத்தலோ மாற்றம் செய்தலோ அல்லது கூட்டலோ குறைப்போ இடம் பெறவேயில்லை. இப்படியான நம்பிக்கையை விட்டும் இறைவனிடம் பாதுகாப்பு தேடுகிறோம். ( ஷெய்க் அல்லாமா ஹில்லி, அஜ்விபதுல் மஸாயிலில் ஹிந்திய்யா, விடயம் 12 - 13, பக்கம் 67)

ஷெய்க் சதூக் (ரஹ்) அவர்கள் இஃதிகாத் என்ற தனது நூலில் ஷீஆக்களுடைய கொள்கையை எழுதியுள்ளார் அதில் அவர் கூறும் போது இவ்வாறு சொல்கிறார்: அல் குர்ஆன் விடயத்தில் ஷீஆக்களின் நம்பிக்கை இதுவாகும். இன்று இரண்டு அட்டைகளுக்கு நடுவில் வைத்து முஸ்லிம்களது கைளில் இருக்கும் குர்ஆன், அன்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்கு அருளப்பட்ட அதே குர்ஆனே ஆகும். இது தவிர எங்களுக்கு எதை எல்லாம் தொடர்பு படுத்திக் கூறுகின்றரோ அவர்கள் பொய் சொல்கின்றனர். (ஷெய்க் சதூக், இழ்காருல் ஹக், பாகம் 2 பக்கம் 1215)

அதேபோல் அஹ்லுஸ் சுன்னத் அறிஞர்கள் சிலரும் இக்கருத்தை பாத்தில் என கருதி அது வெறும் கற்பனையே என்று கூறியுள்ளனர். (பஹ்ருர் ராஷி, மபாதீஹுல் கெய்ப், பாகம் 5 பக்கம் 380)

இதை விட மேலாக, இறைவனே இக்குர்ஆனை உலகம் முடியும் வரை மனிதனின் எவ்வித கைகலப்பில் இருந்து பாதுகாப்பதாக கூறியிருக்கும் போது (சூரா ஹிஜ்ர் வசனம் ஒன்பது, சூரா புஸ்ஸிலத் வசனம் 41,42) நாம் எப்படி இன்னார் இன்னார் அல்குர்ஆனை மாற்றியுள்ளனர் அல்லது மாற்றப்பட்டுள்ளதாக நம்புகின்றனர் என கூற முடியும். எனவே எவர் ஒருவர் இப்படியானவற்றை எற்றுக் கொள்கின்றாரோ அவரது ஈமான் உறுதியில்லை என்பதே அதன் கருத்து. அதாவது அவருக்கு இறை வாக்கியங்களின் மீது நம்பிக்கையில்லை. ஆகவே அல்லாஹ் இப்படியான பொய்யான நம்பிக்கையில் இருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாக.

 



1 next