ஷீஆக் கொள்கையை அப்துல்லாஹ் இப்னு ஸபா என்பவனா தோற்றுவித்தான்?




Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99

Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103

ஷீஆக் கொள்கையை அப்துல்லாஹ் இப்னு ஸபா என்பவனா தோற்றுவித்தான்?

பதில்: ஷீஆ கோட்பாட்டையும் அதன் தோற்றத்தையும் அறிவதற்கு, முதலில் அதன் சொல் மற்றும் நடை முறைக்கருத்தை அறிய வேண்டும். அகராதியில் ஷீஆ என்பதற்கு பின்பற்றுபவர் என்பதும் நடை முறைப் புலக்கத்தில் ஹஸரத் அலீ (அலை) அவர்களையும் அஹ்லுல் பைத்துக்களையும் பின்பற்றுபவர்கள் என்பதேயாகும். (இப்னு மன்சூர், லிஸானுல் அரப், பாகம் 7, பக் 258) அல்குர்ஆனிலும் ஷீஆ என்ற சொல் அகராதியின் கருத்திலேயே வந்துள்ளது. இப்னு கல்தூன் தனது முகத்திமா என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ஷீஆ அகராதியில் பின்பற்றுபவர், நேசம் வைப்பவர் ஆகும். நடைமுறை வழக்கத்தில் ஹஸரத் அலீ (அலை) அவர்களையும் அன்னாரது பிள்ளைகளையும் பின்பற்றுபவர்களுக்கு உபயோகிக்கப்படும். ஷீஆக்களின் கொள்கை முஸ்லிம்களின் அடிப்படை மூலாதாரங்களில் அதாவது அல்குர்ஆனிலும் நாயகத்தின் சுன்னாலிலும் இருந்து பெறப்பட்டவையே. மாறாக அவர்களுக்கென தனிப்பட்ட கொள்கை இல்லை ஆனால் ஷீஆக்களுக்கு சுன்னாக்களுக்கும் இடையில் தனியே கிலாபத் விடயத்தில் அது நஸ்ஸீ அல்லது நஸ்ஸு இல்லை என்பதில் தான் கருத்து வேறு பாடு இருக்கின்றது. இவ்விடயத்தில இரு தரப்பினரும் அதிகமாக ஹதீதுகளை அறிவித்துள்ளனர் இதில் சில முதவாத்திராகும். (அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகும்.) அதையே ஆதாரமாக முன்வைக்கின்றர். அதில் ஹதீது கதீர், ஹதீது மன்ஸிலத், ஹதீது யவ்மித்தார் போன்றவையாகும். மற்ற அடிப்படை மத்ஹபு விடயங்களில் அஹ்லுஸ் சுன்னாக்களுடன் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக அதற்கு மாற்றமான கருத்தையே சொல்கின்றனர்.

ஷீஆ என்பது ஹஸரத் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்திலே அவர்களது மூலமாக சொல்லப்பட்டது. அதில் சிலவற்றைத் தருகின்றோம்:

நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு சாலிஹான நல்லமல்கள் செய்கின்றார்களோ அவர்கள் தாம் படைப்புக்களில் மிக மேலானவர்கள். 98-7

என்ற வனம் இறங்கிய போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அலீயைப் பார்த்து  சொன்னார்கள்: சிறந்த சிருஷ்டி நீயும் உமது ஷீஆக்களுமேயாகும். மறுமையில் நீரும் உமது ஷீஆக்களும் இறைவன் உங்களோடு திருப்தியுற்ற நிலையிலும், நீங்கள் இறைவனில் திருப்தியுற்ற நிலையிலும் வருவீர்கள் என்றார்கள். (ஹாகிம் ஹிஸ்கானி, ஷவாஹிதுத் தன்ஷீல் பாகம் 2 பக்கம் 357 ஹதீது இலக்கம் 1126)

ஜலாலுத்தீன் சுயூத்தி என்பவர் துர்ருல் மன்தூர் என்ற தனது குர்ஆன் விரிவுரை நூலில் மேற்கூறிய வசனத்தின் கீழ் குறிப்பிடுகிறார்: நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் ஹஸரத் அலீயைப் பார்த்து நீயும் உமது ஷீஆக்களும் வெற்றியாளர்கள் என கூறினார்கள். (சுயூத்தி, துர்ருல் மன்தூர் பாகம் 6 பக்கம் 379) 

இதன்படி ஷீஆக் கொள்கை இஸ்லாத்தில் புதிதாக தோன்றிய பிரிவு, மத்ஹபு  இல்லை மாறாக அதை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களே  ஏற்படுத்தி, ஆரம்பித்து அதன் தலைமைத்துவத்தை ஹஸரத் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ஒப்படைத்தார்கள் என்பது தெட்டத் தெளிவாகின்றது. இதை முதலில் பெரும் நபித்தோழர்களில் அபூதர் கிப்பாரி, சல்மான் பாரிஸி, மிக்தாத், அம்மார் போன்றவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். (சுயூத்தி, துர்ருல் மன்தூர் பாகம் 6 பக்கம் 379) இவ்வாறு இருக்கையில் சிலர் இந்த கொள்கைக்கு உண்மையில் இஸ்லாத்திற்கு கெட்ட பெயர் உண்டாக்க விரும்பி அதை ஒரு யஹுதிக்கு, அவனது தோற்றத்தில் ஷீஆ இன்னும் சுன்னா அறிஞர்களுக்கு மத்தியில் சந்தேகம் இருக்கும் நிலையில் அவனை அதனுடன் சம்பந்தப்படுத்திக் கூறுகின்றனர். இதில் எதிர்ப்பு மற்றும் புரக்கணிப்பைத் தவிர வேறு உண்மையான வராலற்று ஆதாரம் ஏதுமில்லை. மறுபுறம் ஷீஆக்கள் அவர்களது எந்த கொள்கைளையும் அவனிடமிருந்து பெறாத நிலையில் மாறாக அவனுக்கு எதிராக அவனை வழி கெட்டவன் என்று கருதும் நிலையில் எவ்வாறு அவனுடன் சம்பந்தப்படுத்திக் கூறமுடியும். இன்னும் ஷீஆக்களின் ஏற்றுக் கொள்ளப்படும் நூற்களில் ஏற்றுக் கொள்ளப்படாத எந்த நூற்களிலும் அவனை புகழ்ந்து எவ்வித வசனமும் இல்லை. ஹஸரத் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமிருந்து வந்திருக்கும் சில அறிவிப்புக்களில் இமாம் அவனை முர்தத் என்றும் கொலை செய்ய வேண்டும் என திர்ப்பு வழங்கியுள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள். (அல்லாமா முர்தழா அஸ்கரி, அப்துல்லாஹ் இப்னு ஸபா வ அஸாதீரு உஹ்ரா, பாகம் 2 பக்கம் 174) மேலும் சொல்லியுள்ளார்கள்: அப்துல்லாஹ் இப்னு ஸபா யமனைச் சேர்ந்த யஹுதியாகும். மூன்றாம் கலீபாவின் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றான் பல இடங்களில் (பஸரா, ஷாம், கூபா) முஸ்லிம்களை ஏமாற்றி மக்களுக்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் திரும்ப வருவார்கள் என நன்மாராயம் சொன்னான். இன்னும் ஹஸரத் அலீயை நாயகத்தின் வசி என்றும் மூன்றாம் கலீபா, ஹஸரத் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களது உரிமையை அபகரித்துள்ளார் கருதினான். நபித்தோழல்களில் சிலரும் அவனை ஏற்று அவன் பக்கம் வந்தனர். இதனால் பெரும் படையை ஏற்பாடு செய்து கலீபாவை கொலை செய்வதற்கு தூண்டி விட்டான். (இப்னு அதீர், தாரீகு இப்னு அதீர், பாகம் 3 பக்கங்கள் 95, 96, 103) இச்சம்பவம் பொய் என்பது தெட்டத் தெளிவாகும். ஏனெனில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது பாடசாலையில் பயின்ற சஹாபாக்கள் நவ முஸ்லிமான, புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவனுடைய கருத்துக்களால் எவ்வாறு தாக்கத்திற்குள்ளாகி இருக்க முடியும்? இன்னும் எவ்வாறு இஸ்லாமிய ஆட்சியில் அதற்கு தெரியாது சுதந்திரமாக பெரும் படையைத் திரட்டி அதை அவ்வரசுக்கு எதிராக கிளரச்சி செய்ய தூண்ட முடியும்? ஆனால் சில நபித்தோழர்கள் வெறுமனே அரசை விமர்சித்த காரணத்துக்காக மட்டும் அவர்களை நாடு கடத்திய அரசு இதை எவ்வாறு விட்டு வைத்திருக்க முடியும்? இன்னும் கிரந்தங்களில் கூட இது பற்றி எதுவும் கூறவில்லை. எகிப்தின் பிரபல்யம் பெற்ற எழுத்தாளர் தனது நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: யஹுதியான அப்துல்லாஹ் இப்னு ஸபா இருந்திருந்தாலும் கூட நாம் ஷீஆ வரலாற்றின் முக்கியமாக கட்டங்களில் அவனது எவ்வகையான தாக்கத்தை மற்றும் சதித்திட்டத்தை அதில் காணவில்லை. (தாஹா ஹுஸைன், அல்பித்னதுல் குப்ரா, பாகம் 1 பக்கம் 760) அத்தோடு அஹ்லுஸ் சுன்னா அறிஞர்களில் ஒருவரான முஹம்மத் குர்த் அலி என்பவர் இவ்வாறு சொல்கிறார்: ஷீஆ என்ற பெயரில் ஒரு மத்ஹபின் தோற்றத்திற்கு அப்துல்லாஹ் இப்னு ஸபா தான் காரணம் என்ற கருத்து மர்தூத்தான (நிராகரிக்கபடக் கூடிய) கருத்து அபிப்பிராயமாகும். (முஹம்மத் ஹுஸைன் முளப்பர், தாரீகுஷ் ஷீஆ) அப்துல்லாஹ் இப்னு ஸபாவுடைய சம்பவத்தை முதல் தடவையாக இப்னு அதீர் (மரணம் ஹிஜ்ரி 630) என்பவரே எவ்வித ஸனதும் இல்லாது தனது வரலாற்று நூலில் கொண்டு வந்தார். அவரது வரலாற்று கிரந்தத்தின் முக்கிய உசாத்துணை நூல் தபரியாக இருப்பினும் தபரி அதை ஸைப் இப்னு உமர் என்பவறிடம் இருந்து அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது. ஸைப் வரலாற்றில் பொய் சம்பவங்களை உருவாக்குதில் ஷீஆ இன்னும் சுன்னா ரிஜால் அறிஞர்களிடத்தில் சந்தேகத்திற்கு இடமில்லை. (அல்லாமா முர்தழா அஸ்கரி, அப்துல்லாஹ் இப்னு ஸபா வ அஸாதீரு உஹ்ரா, பாகம் 2 பக்கம் 40)

மேலும் அஹ்லுஸ் சுன்னாக்கள் சஹாபாக்கள் அனைவரையும் நீதமானவர்கள் என்றும் அவர்களை ஷைத்தானுடைய சிந்தனைகளைப் பின்பற்றுவதை விட்டும் தூரமாக்கின்றனர். இந்நிலையில் எவ்வாறு அவர்கள் ஒரு யஹுதியை தனது தலைவனாக, வழி காட்டியாக எடுத்து மூன்றாம் கலீபாவுக்கும் முஸ்லிம்களின் நலனுக்கு எதிராகவும் கிளர்ச்சி செய்திருக்க முடியும்?

ஷீஆக் கொள்கை சகல துரைகளிலும், விடயங்களிலும் அல்குர்ஆன் மற்றும் நாயகத்தின் குடும்பத்தின் மூலமாக அறிவிக்கப் பட்டிருக்கும் நபிகளாரின் சுன்னவில் இருந்து பெறப்பட்ட விடயங்களைக் கொண்டு ஸ்தீரமாக இருக்கும் ஒரு கொள்கையாகும். தூன் ஏற்றுக் கொள்ளும் சகல விடயங்களிலும் தெளிவான ஆதாரங்கள் கொண்டுள்ளது. எனவே ஒளிமயமான இஸ்லாமிய சட்டதிட்டங்களை அது அல்லாத இடத்திருந்து பெற வேண்டும் என்ற தேவையே அதற்கு இல்லை. அஹ்லுல் பைத் அல்லாதவர்களுக்கு இதை சம்பந்தப்படுத்தி கூறுவது அதற்கு கெட்ட பெயரை எடுத்துக் கொடுப்பதற்காகவே அன்றி வேறு எந்த உண்மையும் அதில் இல்லை.

அப்துல்லாஹ் இப்னு ஸபா என்பவன் பற்றிய மேலதிய விபரத்தைப் பெற கட்டுரைப் பகுதியில் அப்துல்லாஹ் இப்னு ஸபா ஓர் கற்பனை மனிதன் என்ற கட்டுரையைப் படிக்கவும்.

 



1 next