ஐயமும் தெளிவும்




Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99

Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103

ஷீஆக்கள் கத்துமுந் நுபுவ்வத்தை நிராகரிக்கின்றனரா?

இறைவேதங்களைப் பின்பற்றுபவர்களின் கொள்கையின் அடிப்படையில் ஒன்று நுபுவ்வத்தை ஏற்றுக் கொள்வதாகும். மனிதன் இந்த அருட் கொடையை தன்னைப் படைத்ததிலிருந்து பிரயோசணப்படுத்தி வருகின்றான். பின் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் இறுதி நபியாக அனுப்பப்பட்டு அல்குர்ஆனை கொண்டு வந்து மக்கள் நேர் வழி அடைய பெற்று சீதேவிகளாக ஆகவேண்டும் என பரிபூரணமான இஸ்லாமிய மார்க்கத்தைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். எவர் ஒருவர் இறைவன் ஒருவன் என்றும் நாயகத்தின் நபித்துவத்தை ஏற்றுக் கொள்கின்றாரோ அவர் நாயகம் கொண்டு வந்த  தீனைப் பின்பற்றுபவராக கணிக்கப்படுவார். இன்னும் அவர் இஸ்லாமிய அனைத்து பிரிவினரதும் பத்வாவின் (மார்க்கத் தீர்ப்பின்) படி முஸ்லிமாகும். நாயகத்தின் ரிஸாலத்தை (நபித்துவத்தை) ஏற்றுக் கொள்வது அவரது காத்தமிய்யத்தை (இறுதி நபி என்று)  ஏற்றுக் கொள்வதே ஆகும். ஏனெனில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது நபித்துவத்தை ஏற்றுக் கொள்வது இறைவனிடம் இருந்து அவர்கள் வந்த மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதே அதன் பொருள். இஸ்லாத்தில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் இறுதி நபியாவார்கள் என்று நம்புவது அதன் உறுதியான நம்பிக்கைகளில் ஒன்றாகும். இதைப்பற்றி அல்குர்ஆனும் தெட்டத் தெளிவாக கூறுகின்றது: 

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதியானவராகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். (அஹ்ஸாப் வசனம் 40)

எனவே எவர் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாரோ அவர், நாயகத்தோடு நபிமார்களின் வருகை முற்றுகையிடப்பட்டு விட்டது என்பதையும் நம்பி விடுகிறார். ஏனெனில் இஸ்லாத்தை ஏற்பது நபித்துவத்தின் முற்றுகையை ஏற்றுக் கொள்வதில் தான் தங்கியுள்ளது. எவர் நபித்துவத்தின் முற்றுகையை ஏற்றுக் கொள்ள வில்லையோ அவர் முஸ்லிம் இல்லை.

இதன்படி ஷீஆக்கள் இவைகளை ஏற்று இரு கலிமாக்களையும் மொழிந்து தாங்கள் முஸ்லிம் என்பதை நிருபிக்கின்றனர். இன்னும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களை காத்தமுல் அன்பியா நபிமார்களுக்கெல்லாம் இறுதியானவர் அவர் கொண்டு மார்க்கம் தீன்களுக்கெல்லாம் இறுதியானது இன்னும் அவர் கொண்டு வந்த வேதநூல் (அல்குர்ஆன்) மற்ற அனைத்து நபிமார்களது வேதங்களையும் மாற்றக் கூடியது என கருதுகின்றனர். மேலு;ம் அவர்கள் தங்களையும் மற்ற முஸ்லிம்களைப் போல் இஸ்லாத்தைப் பின்பற்றி அதன் கடமைகளை செய்து வருகின்ற அதேவேளை அவர்கள் முஸ்லிமாக இருப்பதையிட்டு பெருமைப்படுகின்றனர். ஷீஆக்கள் மற்றும் தங்களை முஸ்லிம் என்று கருத வில்லை மாறாக மற்ற இஸ்லாமிய பிரிவுகளும் அவர்களை முஸ்லிம்கள் என கருதி ஷீஆ மார்க்க அறிஞர்களின் மார்க்க சட்ட திட்டப்படி அமல் செய்து ஆகும் எனவும் கருதுகின்றனர். அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஷெய்க் ஸல்தூத் இவ்வாறு மார்க்க தீர்ப்புக் கொடுக்கிறார்: அஹ்லுஸ் சுன்னத்தின் நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றுபவர் ஷீஆவாகி ஷீஆ பிக்ஹின் படி அமல் செய்தால் அவரது அமல்களும் ஏற்றுக் கொள்ளப்படும். அது மாலிக் மத்ஹபைச் சேர்ந்த ஒருவர் ஹனபி மத்ஹபின் பிக்ஹை பின்பற்றுவது போல அல்லது அதற்கு மாற்றமாக பின்பற்றுவது போல் ஆகும். (ரிஸாலதுல் இஸ்லாம் சஞ்சியை இலக்கம் 11, பக்கம் 228)

ஷீஆக்களது நம்பிக்கைகளில் ஒன்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்குப் பிறகு சமுகத்தில் இஸ்லாமிய சட்ட திட்டங்களை நடை முறைப்படுத்த ஒரு தலைவர் தேவை அந்த தலைவரை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களே மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும் என்பதாகும். இங்கே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களை தனக்குப் பிறகுள்ள தலைவராக நியமித்தார்கள் என்பதில் ஒரு சிலதை சொல்கின்றோம்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி சொல்லும் போது இவ்வாறு சொன்னார்கள்: (அலீயே) என்னிடம் உமது அந்தஸ்து, இடம் மூஸாவிடயம் ஹாரூனுக்கு இருந்த இடம் அந்தஸ்தைப் போலாகும் ஆனால் எனக்குப் பின் நபியில்லை. (இப்னு ஹிஷாம், அஸ்ஸீரதுன் நபவிய்யா, பாகம் 2, பக்கம் 519520)  அதாவது ஹஸரத் ஹாரூன் ஹஸரத் மூஸா அலைஹிஸ்ஸலாமுக்கு வஸியாக பிரதிநிதியாக இருந்தார்கள் நீ கூட எனது பிரதிநிதியாக இருக்கின்றாய் ஆனால் என்குப் பிறகு நபிவரவே போவதில்லை.

அதேபோல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கதீர் ஹும் நிகழ்விலும் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களை தனது பிரதிநிதியாக அறிமுகப்படுத்திச் சொன்னார்கள்: இதை இங்கு கூடியிருப்பவர்கள் இங்கே சமுகம் தராதவர்களுக்குப் போய்ச் சொல்லுங்கள் எனக்குப் பிறகு எந்த நபியும் வரமாட்டார். (தப்ரஸி, இஹ்திஜாஜ், பாகம் 1 பக்கம் 7184)

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தனது பிரதிநிதியை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் போதும் கூட சிலர் இன்னும் நபித்துத்தின் கதவு திறந்துள்ளது என கற்பனை செய்யாது இருப்பதற்காக இத்தோடு நபித்துவம் முற்றுப் புள்ளி பெருகின்றது என்பதை ஞாபகப்படுத்தியே உள்ளார்கள்.

ஷீஆக்கள் முதல் கூறிய வசனத்தை ஏற்றது போல் அதன் கீழ் உள்ள கத்முன் நுபுவ்வத்தையும் ஏற்றுக் கொண்டு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களை இறைவனின் இறுதி நபியென கருதுகின்றனர். ஷீஆ மார்க்க அறிஞர்கள் எப்போதும் கத்முன் நுபுவ்வத்தை உறுதி செய்ததோடு தங்களது நூற்களில் அதை இஸ்லாத்தின் முக்கிய விடயமாகவும் கூறி அதை மறுப்பலர்களை காபிர் எனவும் கருதியுள்ளனர். இன்னும் அதிகமான ஷீஆ அறிஞர்கள் கத்முன் நுபுவ்வத் (நபித்துவம் பூரணமடைந்து விட்டது) பற்றி தனிப்பட்ட நூற்களையும் எழுதி உள்ளனர்.



1 next