ஐயமும் தெளிவும்




Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99

Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103

ஷீஆக்கள் உம்முல் முஃமினீன் அன்னை ஆயிஷா நாயகி (ரழி) அவர்கள் மீது பழி சுமத்துகின்றார்களா?

நபிமார்கள் அனைவரும் சகல விதமான பழிப்புகளை விட்டும் சுத்தமானவர்கள் ஆகும் என ஷீஆக்கள் நம்புகின்றனர். இவ்விதமான பழிப்புகள் அவர்களுடன் தொடர்பு படும் (நடத்தையில் மோசம் அல்லது உடல், புத்தியில் குறைபாடு போன்றவை) அல்லது அவர்களுடன் தொடர்பு பட்டவர்களுடைய விடயங்களுடன் தொடர்புபடும். உதாரணமாக தந்தையுடைய துர்நடத்தை, அவர்களது தாய் அல்லது மனைனவியின் துர்நடத்தை போன்றவை. இதன்படி நாம் நபிமார்களது மனைவியரின் கொள்கை மற்றும் நம்பிக்கை விடயத்தை ஆராயும் போது  அவர்களில் சிலர் காபிராக இருந்துள்ளார்கள் என காணமுடியும் இதைத்தான் அல்குர்ஆனும் ஹஸரத் லூத் மற்றும் ஹஸரத் நூஹ் அலைஹிமா ஸலாம் அவர்களது மனைவிமார் விடயத்தில் கூறுகின்றது. ஆனால் அவர்கள் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுபவர்களாக, விபச்சாரம் செய்பவர்களாக இருக்கவே முடியாது. ஏனெனில் இப்படியான செயல்கள் மனிதர்களது பார்வை, கவனம் அவர்கள் பக்கம் திரும்பாது இன்னும் அவர்களது உள்ளமும் இவர்களை கவரப்படாது இருப்பதற்கும் இன்னும் எவரும் அவர்களது சொல் செயலை ஏற்காது விடுவதற்கும் இவை  காரணமாகிவிடும்.

ஷீஆ உலகின் மாபெரும் அல்குர்ஆன் விரிவுரையாளரும் தத்துவஞானியுமான அல்லாமா தபாதபாயி (ரஹ்) அவர்கள் சொல்கிறார்: நாயகத்துடைய குடும்பத்தினர் மானக்கேடான விடயத்தால் அழுக்கடைந்திருப்பதென்பது மக்களது உள்ளங்கள் இறைத் தூதரை வெறுப்பதற்கு காரணமாகிவிடும். இதனால் இறைவன் நாயகத்துடைய குடும்பத்தை மானக்கேடான செயல்களை இன்னும் விபச்சாரத்தை விட்டும் பாதுகாப்பது அவனுக்கு அவசியமாகும். இல்லையேல் இறை அழைப்பு வீணாகி விடும். இத்தகையை புத்தி ரீதியான ஆதாரத்தின் படி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது மனைவிமார்களின் வெளிரங்கமான பரிசுத்தமான தன்மை மட்டும் உறுதிப்படுதில்லை மாறாக அவர்களது உண்மையான பரிசுத்த தன்மையும் கூட உறுதியாகின்றது, அதை மக்கள் அறியாதிருந்தாலும் சரியே. (அல்லமா தபாதபாயி, தப்ஸீருல் மீஸான் பாகம் 15, பக்கம் 102)

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது மனைவிமார் விடயத்தில் ஷீஆக்களின் கொள்கை, நம்பிக்கை, ஹதீது கலை வல்லுணர்களும் வரலாற்று ஆசிரியர்களும் ஏகோபித்துள்ள அல்குர்ஆனுடைய அதே கருத்தே ஆகும். எவர் ஒருவர் இது தவிர்ந்த வேறு விடயங்களை ஷீஆக்களும் சம்பந்தப்படுத்திக் கூறுகிறாரோ அவர் சந்தேகமின்றி தவறு செய்கிறார்.

இதன்படி ஷீஆக்கள் எவ்வகையான பழிகளையும், பேச்சுக்களையும் அன்னை ஆயிஷா நாயகி விடயத்தில் கூறுவதை ஆமோதிக்கின்றார்கள் அல்ல. அன்னை ஆயிஷா நாயகியியுடன் தொடர்பு பட்ட இஃப்க் (பழிகூறல், இட்டுக்கட்டல்) உடைய சம்பவத்தை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினரே அன்னை ஆயிஷா நாயகியுடன் தொடர்பு படுத்திக் கூறி அல்குர்ஆன் வசனத்தின் மூலம் அவர்கள் அந்தக் குற்றத்தில் ஈடுபட வில்லை என அதற்கு விளக்கம் கொடுக்கின்றனர். ஆனால் ஷீஆக்கள் அதற்கு மாற்றமாக இந்த வசனம் அன்னை ஆயிஷா நாயகி விடத்தில் இறங்கவேயில்லை எனவும் அது அன்னை மாரியதுல் கிப்திய்யா என்ற மற்றொரு நபியின் மனைவியின் விடயத்தில் தான் இறங்கியது எனக் கூறி அன்னை மாரியதுல் கிப்திய்யா அவர்கள் இச் செயலில் ஈடுபட்டவர்கள் அல்ல என்பதை அந்த அல்குர்ஆன் வசனத்தையும் அமீருல் முஃமினீன் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஆராய்ச்சியையும் வைத்து நிருபிக்கின்றனர். (தப்ஸீர் நூருஸ் ஸகலைன் பாகம் 3 பக்கம் 851)