ஐயமும் தெளிவும்Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99 Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103 நீங்கள் ஹஸரத் அபூபக்கர் சித்தீக் இன்னும் உமர் பாரூக் (ரழி) அவர்களுக்கு ஏசுகின்றீர்களா? மற்றவர்களுக்கு ஏசுவது பெரும் பாவங்களில் ஒன்றாகும் ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் அதை தவிர்ந்து கொள்ள வேண்டும், இது மிகவும் இழிவான செயலாகவும் கருதப்படுகிறது. ஹதீதகளிலே வந்துள்ள படி எவர் ஒருவர் இந்த மோசமான செயலைச் செய்கிறாரோ அவர் மறுமை நாளில் கடும் வேதனையச் சந்திப்பார். ழூ முஸ்லிமான ஒருவர் பேச்சில் ஒழுக்கத்தையும், சுத்தத்தையும் கடைப்பிடித்து எதிரிகளுக்கு முன்னிலையிலும் அதை பேணி நடந்து கொள்ள வேண்டும். அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது: அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள்... (சூரா அன்ஆம் வசனம் 108) இதன் படி இவைவைப்பவர்களை திட்டுவது தெளிவான முறையல்ல என்று கூறியுள்ள போது முஸ்லிம் சகோதரர்களை திட்டுவது நிச்சயம் தடையாகும். அமீருல் முஃமினீன் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிப்பீன் போரில் தனது தோழர்கள் முஆவியாவை திட்டிய போது சொன்னார்கள்: நீங்கள் ஏசுபவர்களாக இருப்பதை நான் விரும்ப வில்லை மாறாக ஏசுவதற்கு மாற்றமாக அவர்களது நடத்தை இன்னும் நிலமைகளை சொன்னால் உண்மையை சொன்னதாகவும் இருக்கும் தம் கடமையை பூரணப்படுத்தியதாகவும் இருக்கும். (நஹ்ஜுல் பலாகா, கலாம் 206) முஆவியா இப்னு வஹம் என்பவரிடமிரந்து அறிவிக்கப்பட்டுள்ளதாவது: அவர் சொல்கிறார், நான் இமாம் சாதீக் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் நாங்கள் எங்களது மத்ஹபு அல்லாதவர்களுக்கு மத்தியில் வாழுகின்றோம் அவர்களோடு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என கேட்டேன் அதற்கு இமாம் அவர்கள் சொன்னார்கள்: நீங்கள் பின் பற்றும் இமாம்களைப் பாருங்கள் அவர்கள் நடப்பது போல் நடந்து கொள்ளுங்கள். இறைவன் மீது சத்தியமாக உங்கள் இமாம்கள் அவர்களது நோயாளர்களை சந்திக்கச் செல்கின்றனர். அவர்களது ஸனாஸாக்களிலும் கலந்து கொள்கின்றனர். (தேவைப்படும் போது) அவர்களுக்காக சாட்சியும் சொல்கின்றனர். இன்னும் அவர்களது அமானத்துக்களையும் அவர்களிடம் திரும்பக் கொடுகின்றனர். (குலைனி, உசூலுல் காபி, பாகம் 2 பக்கம் 608) ஷீஆக்களும் அல்குர்ஆன் பரிசுத்தவான்களைப் பின்பற்றி முஸ்லிம் சகோதரரை ஏசுவதை ஹராம் என கூறுகின்றனர். ஆனால் பாபமர மக்களில் சிலர் தனது மடமை, அறியாமைழயின் காரணத்தால் இதைச் செய்கின்றனர். இது அவர்களது மத்ஹபிலும் இல்லை இன்னும் அவர்களது தலைவர்களும் இதை விரும்புகின்றனர் அல்ல. அவரது கணக்கு ஷீஆக்களின் இன்னும் ஷீஆ மத்ஹபின் கணக்கில் இருந்து வேறாகும். ஒவ்வொரு மத்ஹபிலும் தீனிலும் தீவிரப் போக்குடைய ஒரு மடமைக் கூட்டத்தினர் இருக்கத்தான் செய்வர், ஆனால் அவர்களது இப்படியான செயற்பாடுகளை அந்த மத்ஹபுடைய செயல் பாடுகள் என்று கருத முடியாது. அமீருல் முஃமினீன் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தனது உரிமை தன் கையை விட்டுப் போனதும் அதை எடுத்தவர்களை திட்ட வில்லை ஏசவில்லை. மாறாக அவர்களது செயற் பாடுகளை விமர்சித்தார்கள். அதற்கு உதாணமாக நஹ்ஜுல் பலாகாவில் இருக்கும் கொத்பா ஷக்ஷகிய்யாவை கூறலாம். இப்னு அபில் ஹதீத் இதற்கு விளக்கம் எழுதும் போது பல வகையான விமர்சனங்களை அதன் கீழ் கொண்டு வந்துள்ளார்.
|