ஐயமும் தெளிவும்Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99 Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103 சிலர் ஷீஆக்களின் தோற்றத்தை கலீபா உதுமான் (ரழி) அவர்களின் காலத்தில் தோற்றம் பெற்றதெனவும் இன்னும் சிலர் அதை யஹுதிகளே தோற்றுவித்தனர் எனவும் கூறுகின்றனர். இதில் எது சரியானது? பிழையெனின் அதன் ஆதாரம் என்ன? ஷீஆக்களின் தோற்றம் பற்றி இஸ்லாமிய ஆய்வாளர்கள், இது அற்ப அரசியல் இலாபங்களுக்காக தோன்றிய ஏனைய சில இயக்கங்களைப் போன்றதல்ல மாறாக இஸ்லாத்தை ஒரு நாணயம் என கருதினால் அதன் இரு பக்கங்களும் ஒரு நாணயத்தையே குறிப்பிடுகின்றது. ஆனால் ஷீஆக்களை வர்ணிக்கும் போது அதை ஆரம்ப கால இஸ்லாத்தின் உண்மைத் தோற்றம் என்றே கூறவேண்டும். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களும் அதை எத்திவைக்கும் படியே ஏவப்பட்டார்கள் இன்னும் அது எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக தலைவர் ஒருவரை நியமித்தார்கள் என கூறுகின்றனர். இன்னும் ஷீஆக்கள் கிலாபத்தை நஸ்ஸு என ஏற்றுக் கொள்கின்றனர். இக்கொள்கைகளுக்கும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் ஹதீதுகளை ஆதாரமாக வைக்கின்றனர். ஷீஆ என்பதற்கு அகராதியில் பின்பற்றுபவர், புலக்கத்தில் ஹஸரத் அலீ (அலை) அவர்களையும் அஹ்லுல் பைத்துக்களையும் பின்பற்றுபவர்கள் ஆகும். (இப்னு மன்சூர், லிஸானுல் அரப், பாகம் 7, பக் 258) அஹ்லுஸ் சுன்னா உலமாக்களில் ஒருவரான அபீ ஹாத்தம் ஸஹ்ல் இப்னு முஹம்மத் ஸஜிஸ்தானி என்பவர் தனது கிதாபுஸ் ஷீனத் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்: முதல் முதலில் இஸ்லாத்தில் வெளிளான, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்தில் இருந்த பெயர் ஷீஆ ஆகும். அக்காலத்தில் இப்பட்டப் பெயர் குறிப்பாக அபூதர் கிப்பாரி, சல்மான் பாரிஸி, மிக்தாத் இப்னு அஸ்வத் கென்தி, அம்மார் இப்னு யாஸிர் ஆகிய நான்கு நபித் தோழர்களுக்கும் சொல்லப்பட்டது. இது சிப்பீன் யுத்தத்தின் ஆரம்பப் பகுதி வரைக்கும் இந்நான்கு பேருக்கும் சொல்லப்பட்டு பின்னர் இமாம் அலீ (அலை) அவர்களின் நேசர்களுக்கும் சொல்லப்பட்டது. (ஆயதுல்லாஹ் சத்ர், தஃசீசுஷ் ஷீஆ லி உலூமில் இஸ்லாம், பக்கம் 38) அஹ்லுஸ் சுன்னாக்களின் தற்கால ஆய்வாளர்களில் ஒருவரான அஹ்மத் அமீன் மிஸ்ரி என்பவர் கூட இவ்வாறு கூறுகிறார்: ஷீஆக்களின் தோற்றத்தின் ஆரம்பம் சில நபித்தோழர்களே ஆகும். அவர்கள் ஹஸரத் அலீ (அலை) அவர்கள் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக இன்னும் அவரிடம் இருந்த தெளிவான வர்ணனை மூலம் அவரை கிலாத்திற்கு மிகவும் தகுதியானவர் என கருதினர். (பஜ்ருல் இஸ்லாம் பக்கம் 266) ஷீஆ என்ற வார்த்தை அதிகமாக ஹதீதுகளில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் நாவின் மூலமாக பல தடவைகள் கேட்கப்பட்டது. அவை ஷீஆ, சுன்னாக்களின் நூற்களிலும் வந்துள்ளது. அதில் சிலவற்றை தங்களுக்கு கூறுகின்றோம்: இப்னு அதீ என்பவர் இப்னு அப்பாஸ் என்பவரிடமிருந்து அறிவிக்கின்றார்: நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு சாலிஹான நல்லமல்கள் செய்கின்றார்களோ அவர்கள் தாம் படைப்புக்களில் மிக மேலானவர்கள். 98-7 என்ற வனம் இறங்கிய போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அலீயைப் பார்த்து சொன்னார்கள்: சிறந்த சிருஷ்டி நீயும் உமது ஷீஆக்களுமேயாகும். மறுமையில் நீரும் உமது ஷீஆக்களும் இறைவன் உங்களோடு திருப்தியுற்ற நிலையிலும், நீங்கள் இறைவனில் திருப்தியுற்ற நிலையிலும் வருவீர்கள் என்றார்கள். (ஹாகிம் ஹிஸ்கானி, ஷவாஹிதுத் தன்ஷீல் பாகம் 2 பக்கம் 357 ஹதீது இலக்கம் 1126) ஜலாலுத்தீன் சுயூத்தி என்பவர் துர்ருல் மன்தூர் என்ற தனது குர்ஆன் விரிவுரை நூலில் மேற்கூறிய வசனத்தின் கீழ் குறிப்பிடுகிறார்: நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் ஹஸரத் அலீயைப் பார்த்து நீயும் உமது ஷீஆக்களும் வெற்றியாளர்கள் என கூறினார்கள். (சுயூத்தி, துர்ருல் மன்தூர் பாகம் 6 பக்கம் 379) மேலும் இந்த வசனத்தில் கீழ் இப்னு அஸாகிரிடம் இருந்து இவ்வாறு அறிவிக்கின்றார்: ஒரு நாள் நாங்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களோடு சபையில் அமர்ந்திருக்கும் வேளையில் அலீ சபையை நோக்கி வந்து கொண்டிருந்தார் நபிளாரின் பார்வை அவரின் மேல் விழவே பின்வருமாறு கூறினார்கள். என் ஆத்மா எவன் வசமுள்ளதோ அவன் மீது சத்தியமாக இவரும், இவரைப் பின்பற்றுபவர்களும் நாளை மறுமையில் ஜெயம் பெறுவர், வெற்றியாளர்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறினார்கள். (சுயூத்தி, துர்ருல் மன்தூர் பாகம் 6 பக்கம் 379, ஹாகிம் ஹிஸ்கானி, ஷவாஹிதுத் தன்ஷீல் பாகம் 2 பக்கம் 362 ஹதீது இலக்கம் 1139) ஹாகிம் ஹிஸ்கானி என்பவர் ஐந்தார் நூற்றாண்டில் வாழ்ந்த அஹ்லுஸ் சுன்னத் மார்க்க அறிஞராகும். இவர் சுமார் இருபது ஹதீதுகளை பல வகையான வழிகளில் தனது ஷவாஹிதுத் தன்ஷீல் என்ற தனது பிரபல்யமான நூலில் கூறியுள்ளார் அவை அனைத்தும் ஷீஆ என்பது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்தில் ஹஸரத் அலீ (அலை) அவர்களின் தோழர்களில் சிலருக்கும் சொல்லப்பட்டதென நிருபிக்கின்றன. எனவே ஷீஆ மூன்றாம் கலிபாவின் காலத்தில் தோன்றியது என்பது ஆதராம் மற்ற ஒரு கருத்தாகும். ஆனால் சிலர் இதை புறக்கணிப்பதற்காக அல்லது இது விடயத்தில் எவ்வித ஆய்;வும் செய்யாது இதைக் கூறலாம். இப்படியான கருத்து வரலாற்று அறிவிப்பின் படியும் இரு தரப்பிலும் அறிவிக்கப்பட்டிருக்கும் நபி மொழிகளின் பிரகாரமும் இஸ்லாமிய ஆய்வாளர்களின் கருத்துப்படியும் நிராகரிக்க வேண்டியதாகும். இதன் படி ஷீஆக்களின் தோற்றம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலமாகும். இது விடயமாக மேலதிக விபரங்களுக்கு கட்டுரை என்ற பகுதியில் ஷீஆக்களின் தோற்றம் எப்போது? என்ற தலைப்பில் உள்ள கட்டுரையைப் படிக்கவும்.
|