ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.என்ற திருக்குர்ஆன் வசனத்திற்கு பல முபஸ்ஸிரீன்கள், குர்ஆன் விரிவுரையாளர்கள் பின்வருமாறு வியாக்கியாணம் வழங்கியுள்ளனர்:

இவ்வசனம் அலியின் விடயத்திலும் அலியைப் பற்றும் அலியின் ஷீஆக்களின் விடயத்தில் தான் இறங்கியது. ஏனெனில் மேற்கூறிய வசனம் நபிகளாருக்கு இறங்கிய போது படைப்புக்களில் எல்லாம் மிக சிறந்த படைப்பு யார் என சஹாபாக்கள் வினவ நாயகம் (ஸல்) அவர்கள் அதற்கு அலியும், அலியுடைய ஷீஆக்களும் என்று பதிலுரைத்தார்கள். 

 மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்தையும் அதற்குறிய நபிவாக்கையும் சுயூதி என்ற அஹ்லுஸ் சுன்னத் குர்ஆன் விரிவுரையாளர் தனது துர்ருல் மன்தூர் என்ற ஏட்டிலும்இப்னு அஸாகிர் என்பவர் தனது வரலாற்று ஏட்டிலும் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழி) வாயிலாக நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார்கள்.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழி) கூறுகின்றார்கள்:- நாங்கள் சபையில் அமர்ந்திருக்கும் வேளையில் அலி சபையை நோக்கி வந்து கொண்டிருந்தார் நபிளாரின் பார்வை அவரின் மேல் விழவே பின்வருமாறு கூறினார்கள்.

والذي نفسي  بيده  ان هذا  وشيعته  لهم  الفائزون  يوم القيامة

என் ஆத்மா எவன் வசமுள்ளதோ அவன் மீது சத்தியமாக இவரும், இவரைப் பின்பற்றுபவர்களும் நாளை மறுமையில் ஜெயம் பெறுவர், வெற்றியாளர்கள் என்று கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள்,

ان الذين  آمنوا  وعملوا  الصالحات اولئكهم  خير  البرية

என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அச்சம்பவத்தின் பின் அலி சபைக்கு வரும்போதெல்லாம் சபையோர் அலியை جاء خير  البرية   , சிறந்த சிருஷ்டி வருகிறார் என கூறினார்கள். (ஆதாரம்- துர்ருல் மன்தூர் பாக-6  பக்-379)

மேற்கூறப்பட்ட சம்பவத்தை இப்னு அப்பாஸ், அபூ பர்ஸா, இப்னு மர்தவீஹ், அதிய்யா அவ்பி போன்ற ஹதீஸ் அறிவிப்பாளர்களும் பல இடங்களில் அறிவித்துள்ளார்கள்.( ரிஸாலதுல் குர்ஆன் பாக-9  பக்-259)

இப்னு ஹிஸாம் அறிவித்துள்ளதாவது: அறபு சமுகம் சகீபாவுக்குப் பிறகு ஷீஆ சுன்னா என இரண்டு பிரிவுகளாக பிரிந்தனர்....back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next