ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.அலி: நான் இப்போது இங்கு உன்னுடன் பேசிக் கொண்டிருக்கையில் எமது எதிரிகளால் எங்கள் மீது இட்டுக்கட்டப்பட்டிருக்கும், சுமத்தாட்டப்பட்டிருக்கும் பழிகளை உனக்கு தெளிவு படுத்தவே முனைந்து கொண்டிருந்தேன். இப்படியான செயல்களைச் செய்வதற்கு இஸ்லாத்தின் எதிரிகளால் முஸ்லிம்களில் சிலர் தயார் படுத்தப் பட்டுள்ளார்கள். அவர்கள் தான் இப்படியான பொய் தகவல்களை மக்கள் மத்தியில் பரப்புகின்றனர். எனவே இறுதியாக உன்னிடம் நான் வேண்டிக் கொள்வது இதன் பிறகு ஷீஆக்கள் பற்றியும் அவர்கள் கொள்கைகள் பற்றியும் எதிரிகளால் சொல்லப்படுகின்றவற்றை ஏற்றுக் கொள்ளாதே. அதைக் கேட்கின்ற போது உண்மையை அறிந்து கொள்ள முயற்சி செய் என வேண்டிக் கொள்கின்றேன்.

மண்ணரை கட்டுதல்

புவாத்: ஒரு விடயம் பற்றி ஷீஆக்கள் சுன்னாக்களின் கருத்தை உன்னிடம் கேட்க அனுமதி தருவாயா?1*

1* அஹ்லுஸ் சுன்னா அறிஞர்கள் ஷீஆக்களுக்கு இவ்வாறு வரைவிலக்கணம் தருகின்றனர்: ' ஷீஆக்கள் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பின் பற்றுகின்றவர்கள். வெளிரங்கமாகவும் மறைமுகமாகவும் அவரது நேசத்தை நெஞ்சினில் கொண்டிருக்கின்றனர். அவரது நஸ், வஸிய்யத்தின் அடிப்படையைக் கொண்டு இமாமத்தையும் கிலாபத்தையும் ஏற்றுக் கொள்கின்றனர். மேலும் அவர்கள் இமாமத் அவரது பிள்ளைகளுக்கு வரையருக்கப்பட்டுள்ளது என நம்புகின்றனர். இமாமத் அவர்களது கையை விட்டும் வெளியானால் அது அவர்களின் எதிரிகள் செய்த அநியாயத்தின் காரணமாகத்தான் அல்லது இமாம் தகிய்யா செய்த காரணத்தினால் தான் என நம்புகின்றனர்' (ஷஹ்ரிஸ்தானி, அல் மிலல் வன்னிஹல் பாக 1 பக் 146-147 )

அறபு அகராதியில் ஷீஆ என்ற சொல்லுக்கு பின்பற்றுதல், உறுதி செய்தல், ஒருவரின் சொல் செயலுக்கு ஒப்பாக இருத்தல் என்ற கருத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அவைகளில் சிலவற்றை இங்கே காண்போம்.

அல்காமூஸ்:- ஒருவரைப் பின்பற்றுகின்றவர்களுக்கு ஷீஆ என்று சொல்லப்படும். ஒருமை, இருமை, பன்மைக்கும் இதே சொல்லையே உபயோகிக்கப்படும். (அல்காமூஸ் அல்முஹீத்- பாக-3, பக்-47) இதே பொருளைத்தான் இப்னு அதீர், அந்நிஹாயா, என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். (பாக-2, பக்-519)

லிஸானுல் அறப்: ஒரு விடயத்தில் ஒன்றுசேரும் கூட்டத்தினருக்கு ஷீஆ எனப்படும். ஒரு விடயத்தில் ஒன்று சேறுகின்ற கூட்டத்தினருக்கும், ஒரு விடயத்தை தெரிவு செய்கின்ற கூட்டத்தினருக்கும், இன்னும் அவர்களில் சிலர் சிலரைப் பின்பற்றுகின்றபோது அவர்களை ஷீஆக்கள் எனப்படும். (லிஸானுல் அறப்- பாக-1, பக்-55)

முஃஜமுல் மகாயீஸ்: ஷீஆ என்பது உதவி செய்வதாகும். (முஃஜமுல் மகாயிஸ் பக் 545) இதே பொருளைத்தான் அக்ரபுல் மவாரித் என்ற சொல் அகராதியிலும் கூறப்பட்டுள்ளது. (பாக-1, பக்-626)

ஷீஆ என்ற சொல் எவ்வாறு தோற்றம் பெற்றது என்று சிலர் வினவலாம். இச் சொல்லை நாயகமே இயம்பி இருக்கையில் நமக்கேன் விவாதம் 'ஷீஆ' என்ற வார்த்தையை தனக்குப் பின் அலியைப் பின் பற்றும் முஸ்லிம் உம்மத்திற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களே  சூட்டிருப்பது ஆதார பூர்வமான ஒரு விடயம் என்பதால் எவராலும் அதை மறுக்க முடியாது. இவ்விஷயத்தை ஷீஆ, சுன்னி சார்ந்த ஹதீஸ், தப்ஸீர், வரலாற்றுக் கிரந்தங்களில் தாராளமாக காணலாம்.உதாரணத்திற்கு ஒன்றைத்தருகிறோம்.

ان االذين آمنوا  وعملوا  الصالحات  اولئكهم  خير البريه    :   سوره البينه

நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு சாலிஹான நல்லமல்கள் செய்கின்றார்களோ அவர்கள் தாம் படைப்புக்களில் மிக மேலானவர்கள். (98:7)back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next