ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.அலி: ஷீஆக்கின் பார்வையில் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும் நிபந்தனைகளை அது கொண்டிருக்க வில்லை என்றால் அது பாத்திலாகும். ஆதை ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது. ஆனால் அனைத்து நிபந்தனைகளும் சரியாக இருந்து நிறைவேற்றப்பட்ட தொழுகை அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும். சிலவேலை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது அதற்கு நன்மையும் இல்லை. ஆனால் இமாம் ஹுஸைன் அலைஹிஸ் ஸலாம் அவர்களது மண் மேல் சஹீஹான முறையில் தொழப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதன் கூலி இரட்டிப்பாகும். இதன்படி தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுவது ஒரு விடயம் அது சஹீஹாக இருப்பது வேறொரு விடயமாகும்.

ஷாமி: கர்பலா மண்ணு வேறு மண்கள் மக்கா மதினாவை விடவும் அதில் ஸஜதா செய்தால் அதிக சிறப்புண்டு என்று சொல்லுமளவுக்கு சிறந்ததா?

அலி: உனது அபிப்பராயத்தில் என்ன தவறுள்ளது?

ஷாமி: புனித மக்கா ஹஸரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகைளில் இருந்து ஒரு ஹரமாக, புனிதஸ்தளமாக இருக்க வில்லையா, இன்னும் மதினாவில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் புனித உடல் அங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவை கர்பலாவை விட தரத்தில் குறைந்ததா? ஹுஸைன் இப்னு அலி அலைஹிஸ் ஸலாம் தன் பாட்டனாரை விடவும் சிறந்தவரா? இது மிகவும் ஆச்சிரியமான வியக்கத்தக்க விடயமாகும்.

அலி: இல்லை இப்படி இல்லை. இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களது சிறப்பு கண்ணியம் அனைத்தும் அவர் பாட்டனார் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மூலம் கிடைக்கப் பெற்றதாகும். அப்படியானால் இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இத்தனை சிறப்பும் கண்ணியமும் தன் பாட்டனார் கொண்டு வந்து தூய மார்க்கத்தை உயிர்ப்பிப்பதற்காக தன் உயிரையும் அற்பனித்தன் காரணத்தால் கிடைத்ததாகும். ஆமாம், இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிறப்பு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் சிறப்பில் ஒரு பகுதியேயாகும். ஆனால் இமாமும் அவரது பரிசுத்த குடும்பத்தினரும் இஸ்லாத்தை உயிரோட்டமாக வைத்திக்கவும், அதன் அடிப்படையை ஸ்தீரப்படுத்தவும் இன்னும் மோகமத் பிடித்தவர்களின் கைளில் இருந்து அதை பாதுகாக்கவும் உரியபடி இருக்கச் செய்யவும் தன் உயிர்களைத் தியாகம் செய்தார்கள். இதனால் தான் அந்த ஹஸரத் இறைவனது நாட்டத்திற்குள்ளாகி அவனிடமிருந்து அவர்களுக்கு மூன்று வகையான நன்கொடை, தரிசனம் கிடைத்தது.

1.       அவரது ஹரத்தில் உள்ள மினாராவிற்று கீழ் இருந்து கேட்கப் படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படுதல்.

2.       இமாம்கள், வழிகாட்டிகள் அவரது பரம்பரையில் இருந்தார்கள்.

3.       அவர்களது மண்ணிலே சகல வித நோய்களுக்கும் நிவாரணம் கிடைக்கின்றமை போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது. ( பிஹாருல் அன்வார் பாக 36 பக் 285 ஹதீது இல 107)

ஆமாம், தூய இஸ்லாத்திற்காக மிகவும் மோசமான முறையிலே கொலை செய்யப்பட்டார்கள், அவர்களது மனைவி மக்களை கைதிகளாக பிடித்துக் கொண்டு சென்றனர், தன் தோழர்களை யுத்த களத்தில் ஷஹீதானார்கள். சுருங்கச் சொன்னால் இஸ்லாத்தைப் பாதுகாப்பதில் தனக்கு ஏற்பட்ட எல்லா கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டார்கள் இதனால் தான் அல்லாஹ் இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களது மண்ணுக்கும் இவ்வளவு சிறப்பைக் கொடுத்துள்ளான். எனவே இந்நிலையில் இவ்வளவு தியாகங்ளையும் செய்தவரின் மண்ணுக்கு  இருக்கும் சிறப்பில் வேறு ஏதும் தவறைக்காணுகிறாயா? அல்லது  கர்பலாவுடைய மண்ணை மற்ற ஏனைய இடங்களின் மண்ணை விட சிறந்ததென கருவது இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களை விட சிறந்தவர்கள் என்பதா அதன் பொருள்? பிதல்  முற்றிலும் இந்த கற்பனைக்கு மாறானதாகும். இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களது மண்ணைக் கண்ணியப்படுத்துவது இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கண்ணியப் படுத்துவது போலாகும். அவர்களைக் கண்ணியப்படுத்துவது உண்மையில் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் கண்ணியப்படுத்துவது என்பதே  பொருளாகும்.

ஷாமி: உனது இந்த சொல் முற்றிலும் சரியானதாகும். நான் இதற்கு முன் ஷீஆக்களாகிய நீங்கள் இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களை விடவும் மேன்மையானவர் என கருதுகின்றீர்கள் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது உண்மையை அறிந்து கொண்டேன். எனக்கு இது பற்றிய தகவலை எடுத்துக் கூறியதற்கு உனக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இதன் பிறகு எப்போது தொழுகைக்காக கர்பலாவுடைய மண்ணில் இருந்து செய்யப்பட்ட மொஹரையே பயன் படுத்துவேன். இன்னும் விரிப்பு, உலோகப் பொருட்களில் ஸஜதா செய்யவே மாட்டேன்இ அதை இன்றோட நிறுத்தி விடுவேன்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next