ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.ஷாமி: நீங்கள் சுத்தமான மண்ணின் மீது தான் ஸஜதா செய்ய இப்படிச் செய்கின்றீர்களாயின் ஏன் தங்களுடன் சிறிதளவு மண்ணைக் கொண்டு செல்கின்றீர்கள் அல்ல?

அலி: மண்ணை தம்முடன் கொண்டு செல்கின்ற போது அது ஆடைகளை அழுக்காக்கி விடும் என்பதற்காக அதனுடன் சிறிதளவு தண்ணீரைச் சேர்த்து குழப்பி காயவைத்து தம்முடன் கொண்டு செல்கின்றோம் இதன் படி ஆடை அழுக்காவதை தடை செய்கின்றோம். மறுபுறம் காய்ந்த மண்ணில் ஸஜதா செய்வது இறைவனது முன்னிலையில் அதிக பணிவுத் தன்மையைக் குறிக்கின்றது. ஏனெனில் ஸஜதா பணிவுத்தன்மையின் உயர் நிலையாகும். அது அல்லாஹ்வுக்கு மாத்திரமே ஆகுமாகும். இதன் படி ஸஜதாவின் நோக்கம் இறைவனுக்கு பணிவதாக இருந்தால் எதன் மீது ஸஜதா செய்கின்றோமோ அது பணிவுத்தன்மையின் அடையாளமாகும். அது எந்தளவு பணிவுத்தன்மை அதிகமாக இருக்கின்றதோ அந்தளவு சிறந்ததாகும்.

இதனால் ஸஜதா செய்யும் இடம் கை, கால்களை வைக்கும் இடத்தை விட பணிந்ததாக இருக்க வேண்டும். (முஹக்கிக் ஹில்லி, ஷராயிஉல் இஸ்லாம், பாகம் 1, பிரிவு முஸ்தஹப்பாத்துஸ் ஸஜதா)  ஏனெனில் இந்த முறைப் படி ஸஜதா செய்கின்ற போது அது இறைவனுக்காக மிகுந்த பணிவுத் தன்மையைக் கொண்டிருக்கும். அதேபோல் ஸஜதா செய்கின்ற போது மூக்கு மண்ணில் படுவது முஸ்தஹப்பாகும். இதுவும் அல்லாஹ்வுக்கு பணிவதில் மிக பணிவுத்தன்மையைக் கொண்டிருக்கும். இதனால் காய்ந்த மண் ஸஜதா செய்வது ஜாயிஸான மற்றவைகளை விட மிகவும் சிறந்ததாகும். இந்நிலையில் உடலின் கண்ணியமான உறுப்பான நெற்றி மண்ணில் வைக்கப் படுகின்றது. இதுவும் அவனது இறைவனுக்கு முன பணிந்து அவனுக்கு அடங்கி நிற்பதையும் அவன் தன்னை இறைவனுக்கு முன் சிறப்புகள் ஒன்றுமில்லாதவன் என்பதைக் காட்டுகின்றது. சிறப்புகள் அனைத்தும் அல்லாஹுக்கே. ஒருவர் ஸஜதா செய்வதற்காக தன் நெற்றியை விலை உயர்ந் விரிப்பு அல்லது ஸஜ்ஜாதா அல்லது தங்கம், வெள்ளி அகீக் போன்றதில் வைக்கும் போது சில வேலை அவரது பணிவுத் தன்மை குறைந்து விடும். அல்லது இறைவனுக்கு முன்னால் தன்னை ஏதுமில்லாதவனனாக பார்க்க மாட்டான். மேலே கூறியவைகளை மையமாக் கொண்டு இறைவனுக்கு முன் பணிவுத்தன்மையை அதிகப்படுத்தும் ஒன்றில் ஸஜதா செய்வது ஷிர்க்> குப்ரா? இன்னும் அவன் முன்னிலையில் பணிவுத்தன்மையை இல்லாது செய்யும் ஒன்றில் மீது ஸஜதா செய்வது அவனின் பால் நெருங்க வைக்கும் சாதணமா? உண்மையில் இந்த கற்பனை பிழையாகும்> தவறாகும்.

ஷாமி: நீங்கள் ஸஜதா செய்யும் மொஹரின் மேல் பல வடிவங்களில் எழுத்துக்கள் சித்தரிக்கப் பட்டுள்ளன அது என்ன?

அலி: எல்லா மொஹருகளும் அப்படியில்லை. ஏன் சில மொஹருகள் இருக்கின்றன அதில் ஒரு எழுத்தேனும் எழுதப்பட வில்லை. ஆனால் சில மொஹருகள் இருக்கின்றன அதில் ஒரு பக்கம் எழுதப்பட்டுள்ளது. அது இந்த மொஹர் கர்பலாவுடைய மண்ணினால் செய்யப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகின்றது.1* உமது பார்வையில் இது ஷிர்கா? இப்படி எழுதுவதால் ஸஜதா செய்ய முடியாதா? இல்லை ஒருபோதும் இல்லை.

1*(நாயகம் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஆலிஹி அவர்கள் கூறியதாக ஒரு ஹதீது வந்துள்ளது: எனது பிள்ளை (இமாம் ஹுஸைன் அலைஹிஸ் ஸலாம்) கர்பலா என்று சொல்லப் படுகின்ற இடத்தில் அடக்கம் செய்யப் படுவார். பூமியின் இப்பகுதி இஸ்லாத்தின் கேடயம் ஆகும். அல்லாஹுதஆலா முஃமின்களை ஹஸரத் நூஹ் அலைஹிஸ்ஸலாத்துடன் அங்கிருந்தே வெள்ளத்திலிருந்து காப்பாற்றினான். இமாம் பாக்கிர் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கூட சொல்லியுள்ளார்கள்: காழிரிய்யா غاضرية (கர்பலாவின் மறுபெயர்) ஹஸரத் மூஸா இப்னு இம்ரான் இறைவனுடன் பேசிய இடமாகும். இன்னும் ஹஸரத் நூஹ் இறைவனுடன் முனாஜாத் செய்த இடமாகும். இந்த இடம் இறைவனிடத்தில் மற்ற இடங்களை விட சங்கைக் குறிய இடமாகும். இவ்வாறு இல்லை என்றிருந்தால் இறைவன் தன் தூதர்களின் பிள்ளைகளின், அவ்லியாக்களின் கப்ருகளை அங்கே ஆக்கியிருக்கமாட்டான். (இருநூறு நபிமார்களும், அவர்களின் இருநூறு பிரதிநிதிகளும் கர்பலாவில் அடக்கம் செய்யப் பட்டுள்ளார்கள்.) எனவே காழிரிய்யாவில் இருக்கும் எமது கப்ருகளை தரிசியுங்கள். கர்பலா மண்ணும் புராத் நதியும் அல்லாஹ் தூய்மையாக்கிய முதல் மண், நதியாகும். (பார்க்க இப்னு கூலவைஹி, ஜஃபர் இப்னு முஹம்மத் கும்மி (மரணம் ஹிஜ்ரி 368) பக்கம் 444 பாடம் 88 கர்பலாவின் சிறப்பு)  அத்துடன் அலா இப்னு அபீ ஆஸா என்வபர் சொல்கிறார்: ரஃசுல் ஜாலூத் தன் தந்தையிடம் இருந்து அறிவிக்கிறார் நாம் கர்பலாவுக்கு வந்தபோதெல்லாம் அங்கிருந்து எமது மிருகங்களை எடுத்துக் கொண்டு மிகவும் விரைவாக வெளியேறுவோம் என்றார். அதற்கு நான் ஏன்? என்றேன். நாம் எமது உரையாடல்களின் போது இந்த இடத்திலே நாயகத்தின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப் படுவார் என கூறிவந்தோம். அதை நான் கொலை செய்து விடுவேனோ என்ற அச்சத்தில் நாம் அங்கிருந்து வெளியேறினோம். இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் கொலை செய்யப் பட்டபோது நாம் இவ்வளவு நாளும் பேசி வந்த நிகழ்வு இது தான் என சொன்னோம் என்றார். எனது தந்தை சொன்னார் இதன் பிறகு கர்பலாவுக்கு சென்ற போதெல்லாம் அங்கே தங்கி ஓய்வெடுத்துக் கொண்ட பின்னர் அங்கிருந்து சென்றார் என்றார்.( பார்க்க தாரிகுத் தபரி பாகம் 5 பக்கம் 393 ஹிஜ்ரி 60 வது ஆண்டின் நிகழ்வுகள்அல்காமில் பித் தாரிக் பாகம் 4 பக்கம் 90, ஹிஜ்ரி 61 வது ஆண்டின் நிகழ்வுகள்)).

ஷாமி: கர்பலா மண்ணிலிருந்து செய்யப்பட்ட மொஹரில் அப்படியென்ன விசேஷம் இருக்கின்றது ஷீஆக்களாகிய நீங்கள் அதில் ஸஜதா செய்ய வேண்டும் என வழுக்கட்டாயமாக இருக்கின்றீர்கள்?

அலி: இது விடயமாக ஹதீதிவே இப்படி வந்துள்ளது.  'ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களது மண்ணில் ஸஜதா செய்வது ஏழு வானங்களையும் கிழித்து விடும்'. வேறொரு ஹதீதிலே இவ்வாறு வந்துள்ளது ' அபீ அப்தில்லாஹ் அலைஹிஸ் ஸலாம் அவர்களது மண்ணில் ஸஜதா செய்வது ஏழு வானங்களில் உள்ள திரைகளை கிழித்து விடும்' (மிஸ்பாஹுல் முஜ்தஹித் பக் 734)

இந்த மொஹரில் தொழும் போது அது தொழுகை ஏற்றுக் கொள்வதற்கும் மேல் நோக்கி செல்வதற்கும் காரணமாகின்றது டின்பNது இந்த ஹதீதுகின் கருத்தாகும். ஆனால் இந்த சிறப்பு மற்ற மண்ணுக்கும் கர்பலாவுடைய மண்ணுக்குமிடையில் இருக்கும் வித்தியாசத்தைக் காட்டுகின்றது.

ஷாமி: இமாம் ஹுஸைன் அலைஹிஸ் ஸலாம் அவர்களது மண்ணில் மீது ஸஜதா செய்கின்றபோது பாத்திலான தொழுகைகளையும் இறைவனிடத்தில் ஏற்றுக்கொள்ளச் செய்கின்றதா?back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next