ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.   - அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களை அநீதியிழைக்கபட்டவராகக் கண்டே ஷீஆவானேன்.

   -ஷீஆக்களைப் பற்றி சரிவர அறிந்திருக்காத காரணத்தினால் இது வரைக்கும் அஹ்லுஸ் சுன்னத்தைச் சேர்ந்தவனாக இருந்தேன். 'பின்பு நான் நேர் வழி அடைந்தேன்' என்று சொல்லுபவர்களில் கடைசியானவராக நான் இருக்க மாட்டேன் என எதிர் பார்க்கிறேன். (பின்பு நான் நேர்வழி அடைந்து கொண்டேன் என்பது கலாநிதி முஹம்மத் சமாவி தீஜானி அவர்கள் அஹ்லுல் பைத்துக்களுடைய மத்ஹபை ஏற்றுக் கொண்ட பிறகு எழுதிய நூலாகும். அதனால் தான் அதற்கு இப்பெயரை வைத்துள்ளார். அதாவது வழிகேட்டில் இருந்த நான் நேர்வழி அடைந்து விட்டேன் என்பது அதன் பொருள்.)

   -பலஸ்தினில் ஷீஆ இமாமிய்யாவைப் பரப்புவதற்கு முழு மூச்சாக நின்று உழைப்பேன். இத்தூய வழியைசல் சொல்ல அல்லாஹ் எனக்கு உதவி  செய்து என்னை வெற்றியச் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

   -இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மிகவும் பணிவாக வேண்டுவது: யா மஹ்தி எங்களின் அழுகைக் குரலை நிறுத்த வருவாயாக! நீங்கள் வரும் நேரம் நெருங்கி விட்டது.

٭ دفاع من وحي الشريعة ضمن دائرة السنة والشيعة (அஹ்லுஸ் சுன்னா இன்னும் ஷீஆக்களின் கண்ணோட்டத்தில் ஷரீஅத்தைப் பாதுகாத்தல்)

சிரியாவைச் சேர்ந் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தைச் சேர்ந்த அறிஞரான ஷெய்க் ஹுஸைன் அர்ரஜா அவர்களால் எழுதப்பட்டதாகும். அதில் அவர் அஹ்லுல் பைத்தினரின் மத்ஹபை ஏற்றுக் கொள்ள வைத்த காரணத்தை அழகாக விளக்கியுள்ளார். அவர் 'ஹித்லா' என்ற ஊரில் இருந்த தாடி நரைத்த தலைசிறந்த மார்க்க அறிஞராகும், இதனால் மக்கள் அவரைப் பின்பற்றினர். இவர் ஷீஆவான போது அங்கிருந்த அதிகமான மக்கள் அவருடன் சேர்ந்து அஹ்லுல் பைத்துக்களின் மத்ஹபை ஏற்றுக் கொண்டனர். வெற்றியின் கப்பலில் ஏறிக் கொண்டார்கள். அவர் ஷீஆவான பிறகு 'அல்மிம்பர்' சஞ்சிகைக்கு கொடுத்த பேட்டியின் சுருக்கத்தை இங்கே தருகின்றோம்.

   -நான்கு வருடங்கள் வாசித்து, ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே உண்மை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினர் மீதே இருக்கின்றது என்பதை அறிந்து கொண்டேன்.

   -நாங்கள் இருந்த கிராமத்தில் இருந்த ஒருவர் ஷீஆவாகி விட்டார் என அறிந்து அவரைப் பார்த்து (எனது நினைப்பில்) நேர்வழியின் பக்கம் அழைக்க (அவரின் முன்னைய மத்ஹபின் பக்கம் மீள வைக்க)ச் சென்றேன். ஆனால் அவர் என்னை உண்மையின் பக்கமே எனக்கு நேர்வழி காட்டி திருப்பி விட்டார்.

   -ஷீஆவின் உண்மையை அறிந்து கொண்ட போது அது எனது உயிருக்கு ஆபத்தாக முடிந்தாலும் ஷீஆவை ஏற்கவே வேண்டும் என முடிவு செய்தேன்.

   -ஷீஆவானதின் பிறகு அஹ்லுஸ் சுன்னாக்களின் தலை சிறந்த ஒரு அறிஞருடன் விவாதம் நடத்தினேன் அவரால் என்னைப் திருப்திப் படுத்த முடியவில்லை. அதாவது எனது கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியவில்லை. இதனால் கோபம் அடைந்து தலையில் சூடியிருந்த தலைப் பாகையை எடுத்து கிழித்து அருகில் வீசினார்.

   -வரலாற்றில் எப்போதும் ஷீஆவும், ஷீஆக்களும் அநீதியிழைப்பட்டவர்களாகவே இருந்தனர்.

٭ எகிப்தின் பெரும் அறிஞர் ஷெய்க் ஹஸன் ஷஹாத்தா அவர்களுடனான பேட்டி

அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அறிஞர் ஷெய்க் ஹஸன் ஷஹாத்தா அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் மத்ஹபை ஏற்றுக் கொண்ட போது அஹ்லுஸ் சுன்னத் அறிஞர்களுக்கு குறிப்பாக கெய்ரோவில் இருந்தவர்களுக்கு மத்தியில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பத்திரிக்கைகள் அவரைப் பற்றி அதிகமாக விமர்சித்தது, மக்களையும் அவருக்கெதிராக தூண்டி விட்டது. இறுதியான அரசு அவரை சஹாபாக்களை இழிவு படுத்தினார், தரக்குறைவாக கருதினார் என்று கூறி சிறையிலடைத்தது. ஏனெனில் ஷெய்க் ஜும்ஆப் பேருரையில் தான் கண்டு கொண்ட உண்மைகளைப் பற்றி மக்களுக்கும் எடுத்துக் கூறினார்.

'அல்மிம்பர்' சஞ்சிகை (இலக்கம் 11, முஹர்ரம், ஹிஜ்ரி 1422) அவரைப் பேட்டி கண்டது. அதில் அவர் பல விடயங்களைச் சொன்னார் அவற்றில் சுருக்கமாக சிலவற்றை இங்கே தருகின்றோம்.

   -அமீருல் முஃமினீன் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களை நேசிப்பதை, அவர்களைப் பின்பற்றுவதை அறிவிப்பதால் என்ன நடக்கும் என்று எதிர் பார்த்தேனோ அது நடந்து விட்டது. இப்போது இச்சிறிய விடயத்தை மாத்திரமே அவர்களுக்கு அற்பணம் செய்ய முடியும்.

   -எகிப்திலே ஆசூராவுடைய நாளை (முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை) பெருநாளாக அழைக்கின்றனர். அதை அவர்கள் கொண்டாட்டமாக நினைத்து கேலிக்கூத்துக்கோளு சந்தோசமாக கழிக்கின்றனர். அதைப் பற்றி என்னுல் உண்மை நிலைப்பாடுகள் தோன்றின அது இவ்வாறு எனது தொண்டையில் இருந்து இவ்வாறு வெளிப்பட்டது: நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் மகன் கொலை செய்யப்பட்ட நாளை எப்படி நீங்கள் பெருநாளாக கொண்டாடுவீர்கள், சந்தோசமாகக் கழிப்பீர்கள்?

   -வழி கெட்டவர்களின் தலைவர் முஆவியாதான் என நிரூபிக்கும் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. இந்நிலையில் தகுதியில்லாத முஆவியாவை 'எங்கள் தலைவர், வழிகாட்டி முஆவியா (ரழி)' என்று  அழைப்பவர்களை எப்படி மனிதன் என்று கருதுவது, அழைப்பது?. 

 back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57