ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும். 

٭ لقد شيعني الحسين عليه السلام   (இமாம் ஹுஸைன் என்னை ஷீஆவாக்கினார்)

இந்நூல் மொரோக்கோ பத்திரிகை ஆசிரியரான இத்ரீஸ் அல் ஹுஸைனி என்பரால் எழுதப்பட்டது. அதில் அவர் அஹ்லுல் பைத்துக்களின் மத்ஹபைப் பற்றி ஆராய்ச்சி, ஆய்வுகளை மேற்கொண்டு அதன் உண்மையை ஏற்றுக் கொண்டு அதை பகிரங்கமாக அறிவித்து நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் குடும்பத்தினருக்கு செய்த கொடுமைகளை துணிச்சலாக எடுத்துக் கூறியுள்ளார். அவர் 'அல்மிம்பர்' சஞ்சிகைக்கு (இலக்கம் 3 ஜமாதிஉல் அவ்வல், ஹிஜ்ரி 1421) கொடுத்த பேட்டியிலிருந்து சிலவற்றை தருகின்றோம்.

   - எனக்கு பேசுவதற்கு சுதந்திரத்தைத் தாருங்கள் நான் அனைவரையும் ஷீஆவாக்கிக் காட்டுகிறேன்.

   - ஷீஆ மிஃராஜின் ரூஹ் அது எதிர் காலத்தை நன்கு கவனிக்கின்றது.

   -ஆமாம் இமாம் ஹுஸைன் என்னை ஷீஆவாக்கினார்கள். ஆனால் நான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களிடமிருந்து உரிய முறையில் சரியானவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டிருக்கும் உண்மையான சுன்னாவை, வழிமுறையை பின்பற்றி அஹ்லுஸ் சுன்னத்தைச் சேர்ந்தவனாகவே இருக்கின்றேன்.

 ٭ السلفية بين اهل السنة والامامية (அஹ்லுஸ் சுன்னா, இமாமிய்யாக்களின் கண்ணோட்டத்தில் சலபியீன்கள்)

அஹ்லுல் பைத்துக்களின் மத்ஹபை ஏற்றுக் கொண்ட மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் முஹம்மத் அல் கதீரி என்பவரே இதன் ஆசிரியர். அவர் சலபியீன்களின் தோற்றமும் அவர்கள் மூலம் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட தீங்குகள் பற்றி பல ஆண்டுகள் ஆராய்சி செய்து இந்நூலிலே சிறந்த முறையில் தகுந்த ஆதாரத்தோடு எடுத்துக் கூறியுள்ளார். மேலும் அவர் சலபியீன்கள் என தங்களைக் கூறிக் கொள்ளும் வஹாப்பிகள், ஷீஆக்கள் அவர்களை நிராகரிப்பதற்கு முன் அஹ்லுஸ் சுன்னத்தினரே அவர்களை நிராகரிக்கின்றனர் என விபரித்துக் கூறியுள்ளார்.

٭  பலஸ்தீன தலைவர்களின் ஒருவரான முஹம்மத் ஷஹாத்தா அவர்களுடனான நேர்காணல்.

முஹம்மத் ஷஹாத்தா அவர்கள் பலஸ்தீன ஜிஹாத் அமைப்பின் தலைவர் ஆகும். அவர் அஹ்லுல் பைத்துக்களுடைய மத்ஹபை அது தான் சிறந்த, வெற்றியான மத்ஹபு எற்றுக் கொண்டதன் பிறகு அவரை பல சஞ்சிகைகள் பேட்டி எடுத்தன. அதில் அவர் லண்டனில் இருந்து வெளிவரும் 'அல்மஜல்லா' என்ற சஊதி அரேபியா சஞ்சிகைக்கும் பேட்டியொன்றைக் கொடுத்திருந்தார். அதில் அவர்கள் அவரை கடுமையாக விமர்சிக்கப் பட்டார். அதே வரிசையில் 'அல்மிம்பர்' (இலக்கம் 7, ரமழான், ஹிஜ்ரி 1421) எனும் சஞ்சிகையும் அவரைப் பேட்டி கண்டது. அதன் சுருக்கத்தை தங்களின் கவனத்திற்கு தருகின்றோம்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next