ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.மார்க்க அறிஞர் ஷெய்க் முஃதஸிம் செய்யித் அஹ்மத் அவர்களே இந்நூலின் ஆசிரியர். பவர் பாரிய அளவில் இது பற்றி ஆய்வுகளை மேற் கொண்டு இறுதியில் அஹ்லுல் பைத்துக்களுடைய மத்ஹபே உண்மையில், ஹக்கில் இருக்கின்றது என கண்டு கொண்டார். அவர் அஹ்லுல் பைத்துக்களின் மத்ஹபை எற்றுக் கொள்வதற்கு முன் தடுமாற்றத்திலும் நேர்வழியைத்  தொலைத்தவர் போலிருந்தார். இப்போது அவர் அஹ்லுல் பைத்துக்களுடைய மத்ஹயை தெரிவு செய்து பாதுகாப்பான கரையை அடைந்து விட்டதாக கருதுகின்றார்.

٭ ليالي بيشاور  (பீஷாவரின் இரவுகள்)

பீஷாவர் என்பது பாக்கிஸ்தானில் இருக்கும் ஒரு ஊரின் பெயர். அங்கே நான்கு அஹ்லுஸ் சுன்னத் அறிஞர்களுக்கும் ஷீஆ அறிஞரான 'சுல்தானுல் வாயிழீன்' என்றழைக்கப் படும் செய்யித் முஹம்மத் மூஸவி ஷீராஸி என்வருக்குமிடையில் விவாதம் நடை பெற்றது.  அதை பாக்கிஸ்தான் பத்திர்க்கைகள் தவறாது அச்சிட்டுக் கொண்டுருந்தது. இதன் காரணமாக அங்கே இருந்த மக்களில அதிகமானோர் அஹ்லுல் பைத்துக்களின் மத்ஹபை ஏற்றுக் கொண்டார்கள். பின் அவை அனைத்தும் சுல்தானுல் வாயிழீன் என்பவரால் ஒன்று திரட்டப்பட்டு பீஷாவரின் இரவுகள் என்ற பெயரில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

சுல்தான் வாயிழீன் அவர்கள் இது தவிர்ந்த மற்றொரு நூலும் எழுதியுள்ளார்கள் அதாவது அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த பல்கலைக் கழக மாணவர்களுக்கும் அவருக்கும் இடையில் வெற்றிபெற்ற கூட்டம் தலைப்பில் நடந்த விவாத்தின் அவர்கள் அனைவரும் அஹ்லுல் பைத்துக்களின் மத்ஹபை எடுத்துக் கொண்டார்கள்.

٭ المواجهة مع رسول الله وآله (நாயகத்தையும் அவர்கள் குடும்பத்தையும் நோக்கி)

கிலாபத்தையும் அரசையும் கையிலெடுப்பதற்காக உமையாக்கள் மேற் கொண்ட விடயங்களை ஆதார பூர்வமாக அவர் எடுத்துக் கூறியுள்ளார். இந்நூலின் ஆசிரியர் ஜோர்தான் நாட்டைச் சேர்ந் பிரசித்தி பெற்ற நீதிபதி அஹ்மத் ஹுஸைன் யஃகூப் ஆகும். அவர் இந்நூல் மூலமே அஹ்லுல் பைத்துக்களுடைய மத்ஹபை ஏற்றுக் கொண்டார். அவர் மேலும் பல சிறந்த ஷீஆ, சுன்னா என்ற வரையரைக்குல் இருக்கின்ற பல நூற்களையும் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் 'அல்மிம்பர்' (இலக்கம் 10 துல்ஹஜ் மாதம் ஹிஜ்ரி 1421) என்ற சஞ்சிகைக்கு அளித்த பேட்டியிலிருந்து எவ்வாறு அஹ்லுல் பைத்துக்களின் மத்ஹபை ஏற்றுக் கொண்டார் என்பது பற்றிக் கூறிய விடயங்கிள்ல சிலவற்றை சுருக்கமாக இங்கே தருகின்றோம்.

  -எந்த புத்தியுள்ள, சிந்தனையுள்ள மனிதன் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தை விட்டுவிட்டு அவர்கள் அல்லாதவர்களை பின்பற்றுவான்?

  -எனது இறைவனுடன் ஒப்பந்தம் செய்துள்ளேன் என் வாழ்க்கையின் இறுதி மூச்சு இருக்கின்ற வரை அஹ்லுல் பைத்துக்களின் உண்மையை எடுத்தக் கூறிக் கொண்டே இருப்பேன்.

  -நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் சிலைகளுக்கு குர்பானி கொடுத்து அந்த இறைச்சியை அவர்களும் உண்டார்கள் என்பதை எந்த முஸ்லிமாவது ஏற்றுக் கொள்வானா? இந்த விடயத்தை புஹாரி தனது (சஹீஹுல் புஹாரி என்ற) நூலில் குறிப்பிட்டுள்ளார்.

  -இறுதியாக நான், ஷீஆக்கள் இறை கட்டளையின் பிரகாரமும் மார்க்க சட்டங்களின் அடிப்படையிலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தைப் பின்பற்றுகின்றார்கள் என்ற முடிவைக் கண்டேன்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next