ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.இதன் ஆசிரியர் எகிப்து நாட்டின் பிரபல்யம் வாய்ந்த பத்திரிக்கை ஆசிரியர் சாலிஹ் அல் வர்தானி என்பவராகும். இவர் இந்நூலிலே அஹ்லுல் பைத்துக்கின் வழியை தெரிவு செய்வதிலும் அவர்களின் மத்ஹபை ஏற்றுக் கொள்வதிலும் சந்தித்தவைகளைப் பற்றிக் கூறியுள்ளார். மேலும் அவர் தகுந்த ஆதாரங்களோடு அஹ்லுல் பைத்துக்களது மத்ஹபே அல்லாஹ் அவனது படைப்பினங்களுக்கு ஏற்படுத்திய மத்ஹபாகும். அவர் இதுதவிரந்த வேறு பல நூற்களும் இஸ்லாமிய வரலாறு, கொள்கை, மத்ஹப் போன்ற விடயங்களில் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'அல்மிம்பர்' சஞ்சிகை (இலக்கம் 22, துல்ஹஜ், ஹிஜ்ரி 1422) அவரைப் பேட்டி கண்டது அதில் அவர் கூறியவற்றில் சிலவற்றை இங்கே தருகின்றோம்.

   -அஹ்லுஸ் சுன்னத் சமுகம் சஹாபாக்கள் விடயத்தில் இன்னும் நிறைய அறிவுக்கு தேவையுடையதாக இருக்கின்றது. அப்போது தான் அது பற்றி அவர்கள் கொண்டிருக்கும் கற்பனையில் இருந்து வெளிவர முடியும்.

   -அஹ்லுஸ் சுன்னாக்களின் சிந்தனை சமுகத்தை வழி நடாத்துவதில் நீதமாக நடந்து சமாதானத்தை, பாதுகாப்பை ஏற்படுத்த சக்தியற்றதாக இருக்கின்றது.

   -நான் அஹ்லுஸ் சுன்னாக்களின் சிந்தனையில் நன்கு சிந்தித்து, ஆராய்ச்சி செய்து அதன் மூலமே அஹ்லுல் பைத்துக்களின் மத்ஹபை அடைந்தேன். மாறாக ஷீஆக்களின் சிந்தனை மூலமாக அல்ல.

  -ஷீஆ மத்ஹபை எற்றுக் கொண்ட இளைஞர்கள் அவர்களின் குடும்பத்தாரிடமிருந்து விரட்டப்பட்டுள்ளார்கள். அவர்கள் இப்போது தங்கள் பசியைப் போக்க ஒரு துண்டு உரட்டியைத் தேடுகின்றனர்.

  -ஷீஆ மத்ஹபு சிந்தனையை, அபிப்பிராயத்தை கண்ணிய கருதுகின்றது. இஜ்திஹாதுடைய கதவை திறந்தே வைத்துள்ளது. தவறான அரசுடன் தொடர்பை வைத்துக் கொள்கின்றதல்ல. ஆனால் அஹ்லுஸ் சுன்னாக்கள் இதற்கு மாற்றமாக இருக்கின்றனர்.

  -ஷீஆ மத்ஹபின் கலாச்சாரம் எல்லா விதத்திலும் அஹ்லுஸ் சுன்னாக்களின் கலாச்சாரத்தை விட சிறந்ததாகும்.

٭ لماذا اخترت مذهب اهل البيت  (ஏன் அஹ்லுல் பைத்துக்களின் மத்ஹபை தெரிவு செய்தேன்)

இந்நூலாசியர் ஷாம் நாட்டில் நீதவான்களுக்கெல்லாம தவைலராக (காழியுல் குழாத்) இருந்த ஷெய்க் முஹம்மத் மர்யி அன்தாக்கி அவர்களாகும். அஹ்லுஸ் சுன்னாக்களின் தலை சிறந்த அறிஞரான ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்த அவர் அஹ்லுல் பைத்துக்களின் மத்ஹபை தெரிவு செய்தார். அவர் இஸ்லாமிய மத்ஹபுகள் பற்றி பரந்தளவு ஆய்வுகளை மேற்கொண்டு அதேபோல் நிறை நூற்களை வாசித்த பின்னர் ஷீஆவானார். ஏனெனில் அவர் அஹ்லுல் பைத்துக்களே இஸ்லாத்தை உரிய முறையில் அறிந்தவர்கள் இன்னும் இஸ்லாமிய சட்ட திட்டங்களை உரியபடி விபரிப்பவர்கள் என தனது ஆய்விலே முடிவாக கண்டிருந்தார்.

٭  الحقيقة الضائعة (தொலைந்த உண்மை)back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next