ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.     - நான் சஹீஹுல் புஹாரியை ஆதாரமாக வைத்து ஷீஆக்கள் தான் உண்மையானவர்கள் என நிருபித்த போது வஹ்ஹாபிகள் நான் காபிர் என்று எனக்கு எதிராக பத்வாக கொடுத்தார்கள்.

    -நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் மரணத்திற்குப் பிறகு முஸ்லிம் உம்மாவுக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை ஆதாரமாக வைத்து சரியான சிந்தனைப் போக்கு 'ஐந்தாவது மத்ஹபு' என அழைக்கப்படுகின்றார்கள்.

   -எனக்கும் என்னுடன் வேலை செய்தவர்களுக்கும் சொன்னார்கள்: இஸ்லாத்திற்கு ஷீஆக்களின் ஆபத்து யஹுதிகளின் ஆபத்துக்களை விட பெரியது. ஆனால் நான் உண்மையை அறிந்து கொண்டேன்.

   -'மன்ஸிலத்' என்ற ஹதீதில் 'எனக்குப் பின்' என்ற வார்த்தை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறகு அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கிலாபத்தை நிருபிக்கின்றது.

(ஹதீது மன்ஸிலத் இதுவாகும்: قال رسول الله عليه وأله وسلم: انت مني بمنزلة هارون من موسي  الا  انه لا نبي بعديநாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: என்னிடத்தில் உமது அந்தஸ்து தரம் ஹஸரத் மூஸாவிடம் ஹாரூன் அவர்களுக்கு இருந்த அந்தஸ்தாகும். ஆனால் எனக்குப் பிறகு நபியில்லை.)

    -ஷீஆ மத்ஹபில் தெளிவான கொள்கை உயிரோட்டமுள்ள இஸ்லாமிய சட்டதிட்டங்கள் மனிதனை புனிதனாக்கும் உயர்ந்த அஹ்லாக் இருக்கின்றது.

٭ وركبت السفينة (இன்னும் வெற்றியின் கப்பலில் ஏறினேன்.)

இது ஷீஆ மத்ஹபை ஏற்றுக் கொண்ட ஜோர்தான் ஷரீஅத் கல்லூரியில் பட்டம் பெற்று வெளியேறிய ஜோர்தான் நாட்டு பிரபல்யமான ஆராய்ச்சியாளர் 'மர்வான் கலீபாத்' என்பவரால் எழுதப்பட்டதாகும். அவர் ஷீஆவாவதற்கு முதல் அவருக்கும் அவருடன் இருந்தவர்களுக்கும் இடையில் எற்பட்ட பேச்சுவார்தையின் காரணமாகவே அவர் இது பற்றிய ஆராய்ச்சியைச் செய்தார்.

இறுதியில் ஷீஆ மத்ஹபை அதுதான் உண்மையென ஏற்று, இஸ்லாத்தின் உண்மையான பிரதிநிதி ஷீஆ மத்ஹபே எனபே என்று ஏற்று பகிரங்கப்படுத்தினார். அவர் அதிலே வஹ்ஹாபிசத்திற்கு எதிராகவும், அஹ்லுஸ் சுன்னாக்களின் மத்ரசாக்களின் பாட போதனைகளில் இருக்கும் சிக்கலை, குறைபாடுகளை எடுத்துக் கூறியுள்ளார். மேலும் அவர் மத்ரசாக்கள் கட்டாயம் இஸ்லாத்தின் உண்மையையே அசல் இஸ்லாத்தையே அங்கு வரும் மாணவர்களுக்குப் போதிக்க வேண்டும் குறிப்பிட்டுள்ளார்.

٭ الخدعة... رحلتي من السنة الي الشيعة (அஹ்லுஸ் சுன்னாவில் இருந்து ஷீஆவை நோக்கி எனது பயணம்.)back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next