ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.ரிழா: ஆமாம், அவர்களின் நூற்களை வாசிப்பது கொண்டு இந்த உண்மையையும் அறிந்து கொள்வீர்.

அப்துல்லாஹ்: மிக்க நன்றிகள்.

சுப்ஹான ரப்பிக ரப்பில் இஸ்ஸதி அம்மாயெசிபூன் வஸலாமுன்

அலல் முர்ஸலீன வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்

சாதிக் முஹம்மத் ஷீராஸி

நூல் அறிமுகம்

المراجعات ٭   (அல் முராஜஆத்)

இந்நூல் மர்ஹும் அல்லாமா ஷரபுத்தீன் அவர்களுக்கும் அப்போதையை எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக் கழக தலைவரும் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின தலை சிறந்த அறிஞர்களில் ஒருவருமான 'சலீம் அல்பஷரி' அவர்களுக்குமிடையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினரின் இமாமத் பற்றி கடிதத் தொடர்புகள் மூலம் நடை பெற்ற விவாதம் ஆகும். அதன் முடிவாக அல் அஸ்ஹர் தலைவர் ஷீஆ இஸ்னா அஷ்ரிய்யாவை தேர்ந்தெடுத்து அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களிலும் அதனையொட்டி பிரிவுகளிலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தில் வந்த இமாம்களைப் பின்பற்றுகின்றார்கள் என அறிவித்தார். அவை அனைத்தையும் தொகுத்து வாசகர்களுக்கு நூல் வடிவில் இப்பெயர் கொண்டு அச்சிடப்பட்டு தரப்பட்டுள்ளது.

٭ الاثني عشرية الشيعة حقيقة (ஷீஆ இஸ்னா அஷரிய்யாக்களின் யதார்த்தம்)

பலஸ்தீன் நாட்டின் கஷ்ஷா என்ற ஊரில் பிறந்த தலைசிறந்த அறிஞர் கலாநிதி அஸ்அத் வஹீத் காஸிம் அவர்கள் ஷீஆக்கள் பற்றி எழுதியவையாகும். இந்நூலே அவர் அஹ்லுல் பைத்துக்களின் இமாமத்தை ஏற்று ஷீஆவையும் ஏற்க காரணமாகியது.

நூலாசியர் இந்நூலை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் எற்றுக் கொள்ளப் பட்ட நூற்களை உசாத்துணையாகக் கொண்டே எழுதி அதில் ஷீஆ மத்ஹபின் உண்மையை நிலை நாட்டினார். கலாநிதி அஸ்அத் அவர்கள் 'அல்மிம்பர்' என்ற சஞ்சிக்கைக்கு ( 'அல்மிம்பர்' சஞ்சிகை இலக்கம் 8 ஷவ்வால் மாதம் ஹிஜ்ரி 1421) அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிடுட்டுள்ளார்:back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next