ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.அப்துல்லாஹ்: மன்னிப்பு கேட்கிறேன். நீ சொன்ன அனைத்தையும் நான் இதற்கு முன்னரும் அறிந்திருந்தேன், கேட்டிருந்தேன். ஆனால் அது எந்தளவு உண்மை என்பதை ஆராய வில்லை. இப்போது இதுபோன்ற விடயங்களின் உண்மை நிலையை அறிய வேண்டும் என்றால் மத்ஹபின் பிடிவாதத்தை ஒதுக்கி வைத்து விட்டு நிறைய வாசிக்க வேண்டும் என அறிந்து கொண்டேன். ஏனெனில் அப்போது தான் உண்மையை அறிந்து கொள்ள முடியும்.

ரிழா: 'முத்ஆ' தற்காலிய திருமணம் செய்வது ஆகும் என ஏற்றுக் கொண்டீரா?

அப்துல்லாஹ்: ஆமாம், மேலும் அதை தடை செய்தவர்கள் தன் விருப்பத்தின் பேரில் தான் அதை செய்தார்கள் என்றும் அறிந்து கொண்டேன். அல்குர்ஆன் அது அப்படி செய்வது ஆகும் என்று கூறுகின்றது. அதை வேறு எந்த வசனமும் மாற்ற வில்லை எனவும், இரண்டாம் கலீபா என்ன அவருக்கு மேலானவரும் இறை சட்டத்தை மாற்ற முடியாது எனவும் அறிந்து கொண்டேன். இப்போது எதை நியாயப் படுத்தி இரண்டாம் கலீபா இதை தடை செய்தார் என ஆச்சரியப்படுகிறேன்.

இதுபோன்ற விடயங்கள் பற்றி அழகான முறையில் பிடிவாதக் கொள்கையில்லாது எழுதப்பட்டிருக்கும் அறிவு ரீதியான சில நூற்களை எனக்கு அறிமுகப்படுத்துங்கள்.

ரிழா: 'அல்கதீர்' அல்லாமா அமீன், 'அந்நஸ்ஸு வல் இஜ்திஹாத்', 'அல்புஸுலுல் முஹிம்மா' மர்ஹும் அல்லாமா ஷரபுத்தீன், 'அல்முத்ஆ' உஸ்தத் தௌபீக் அல்பகீகீ போன்றவை. இந்த நூற்களை பூரண நன்கு படியுங்கள்.

அப்துல்லாஹ்: அப்படியே செய்கின்றேன். உனக்கு அல்லாஹ் நல்லருல் செய்வானாக.

ரிழா: இங்கே முத்ஆவடைய விடயத்தில் இரண்டாம் கலீபாவின் பத்வை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களை நோக்கி அக்கேள்வி ஏற்படுகின்றது

அப்துல்லாஹ்: அதென்ன கேள்வி?

ரிழா: இரண்டாம் கலீபா, பெண்களுடைய முத்ஆவையும் ஹஜ்ஜுடைய முத்ஆவையுமே தடை செய்தார். ஆனால் ஏன் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினர் ஹஜ்ஜுடைய முத்ஆவை ஆகும் என்றும் பெண்களுடைய முத்ஆவை ஹராம் என்றும் கருதுகின்றனர்? இரண்டாம் கலீபாவின் பத்வா சரியானதாக இருந்தால் அவ்விரண்டு முத்ஆவும் ஹராமாகும். அவர் சொன்னது தவறு என்றிருந்தால் அவ்விரண்டு முத்ஆவும் ஆகுமானதாகவே இருக்க வேண்டும்.

அப்துல்லாஹ்: அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினர் ஹஜ்ஜுடைய முத்ஆவை 'ஜாயிஸ்' ஆகுமென கருதுகின்றனரா?back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next