ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.ஷாமி: மண்ணில் தான் ஸஜதா செய்ய வேண்டும் என்ற முஸ்லிம்களின் இந்த ஏகோபித்த கருத்து எப்படி ஏற்பட்டது?

அலி: நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஆலிஹி அவர்கள் மதினாவுக்கு சென்ற போது அங்கே பள்ளி வாயலைக் கட்டினார்கள். அதில் விருப்பு விரிக்கப் பட்டிருந்ததா?

ஷாமி: இல்லை அங்கே விரிப்பு விரிக்கப் பட்டிருக்க வில்லை.

அலி: அப்படியென்றால் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஆலிஹி அவர்களும் ஏனைய முஸ்லிம்களும் எதன் மீது ஸஜதா செய்தார்கள்?

ஷாமி: மண்ணில் ஸஜதா செய்தார்கள்.

அலி: இதன் படி நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஆலிஹி அவர்கள் அனைத்து தொழுகைகளையும் பூமியின் மேலே தொழுது கொண்டிருந்தார்கள். மண்ணின் மேல் ஸஜதா செய்து கொண்ருந்தார்கள். நாயகத்துடைய காலத்தில் இருந்த முஸ்லிம்களும் அவர்களுக்குப் பிறகு இருந்த முஸ்லிம்களும் மண்ணின் மேலே ஸஜதா செய்து கொண்டிருந்தார்கள். இதன்படி மண்ணில் மீது ஸஜதா செய்வதில் எவ்வித தவறுமில்லை அது சஹீஹாகும். இன்னும் நாமும் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஆலிஹி அவர்களைப் பின்பற்றி மண்ணின் மேல் ஸஜதா செய்கின்றோம். எமது தொழுகை எவ்வித சந்தேகமுமின்றி சஹீஹாகும்.

ஷாமி: ஷீஆக்களாகிய நீங்கள் ஏன் தாங்கள் கொண்டு செல்லாத மொஹரின் மீதும் இன்னும் எல்லா நிலப்பரப்புகளிலும்  ஸஜதா செய்வதைத் தவிர்ந்து கொள்கின்றீர்கள்?

அலி: இந்த உனது வினாவுக்கு இரண்டு வகையான விடைகள் இருக்கின்றன.

1.ஷீஆ மத்ஹபினர் பூமியின் எல்லாப் பகுதிகளிலும் ஸஜதா செய்வதை, அது மண்ணாக இருக்கட்டும் அல்லது கல்லாக  இருக்கட்டும், ஆகுமெனக் கருதுகின்றார்கள்.

2.ஸஜதா செய்யும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது தொழுகை சஹீஹாவதற்குறிய நிபந்தனை களில் ஒன்றாகும். நஜிஸான பூமி அல்லது மண்ணின் மீது ஸஜதா செய்வது ஆகாது. இதனால் நாம் போகும் இடங்களுக் கெல்லாம் ஒரு துண்டு மண் கட்டியை கொண்டு சென்று சுத்தமான மண்ணில் தான் ஸஜதா செய்கின்றொம் என்ற மன உறுதியோடு தொழுகின்றோம். ஆனால் நஜிஸானதா என்று உறுதியில்லாத இடத்தின் மேல் அல்லது மண்ணின் மீது ஸஜதா செய்வதும் ஆகும்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next