ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.     இப்னு ஹஸ்ம் என்பவின் அறிவிக்கின்றார்: மஃபதிப்னு உமையதிப்னு கலப் முத்ஆ செய்வது 'ஆகும்' என்று கூறுபவராக இருந்தார்.

8. சுபைர் இப்னு அவாம்

    'ராகிப்' சொல்கிறார்: அப்துல்லாஹ் இப்னு சுபைர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸை முத்ஆ செய்வதும் கூடும் என்று கூறியதற்காக கீழ்த்தரமாக இகழந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஹஸரத் அப்பாஸ் அவர்கள் உனது தாயிடம் போய் அவருக்கும் உன் தந்தைக்கும் இடையில் எப்படி பிரச்சினை ஏற்பட்டது என கேட்டுப் பார் என்றார்.

அப்துல்லாஹ் இப்னு சுபைர் தாயிடம் வந்து விசாரித்த போது அத்தாய் அப்துல்லாஹ் இப்னு சுபைரைப் பார்த்து உன்னை 'முத்ஆ' தற்காலிய திருமணம் மூலமாகவே பெற்றெடுத்தேன் என்றாள். (அல் முஹாழராத் பாக 2 பக் 94)

இச்சம்பவம் சுபைருடைய கருத்தில் முத்ஆ செய்வது ஆகும் என்பதற்கு தகுந்த  ஆதாரமாகும்.

9. காலித் இப்னு முஹாஜிர் இப்னு காலித் மஹ்ஸமி

    அவர் ஒருவருடன் அமர்;ந்து கொண்டிருந்த போது அங்கே ஒருவர் வந்து அவரிடம் முத்ஆ 'தற்காலிய திருமணத்ததைப்' பற்றி கேட்டார். காலித் அதை ஆகும் என கருதினார். இப்னு அபி உம்ரா அன்சாரி அவருக்கு ஏன் இப்படி மிகவும் சாதாரனமாக பத்வா கொடுக்கின்றாய் என்று சொன்னார். ஆதற்கு காலித் இறைவன் மீது ஆணையாக இது முன் சென்ற தலைவர்கள், வழிகாட்டிகளின் காலத்தில் நடந்தது என்றார். (சஹீஹ் முஸ்லிம் பாக 3 பக் 197-198 பாபு 3 நிகாஹுல் முத்ஆ, சுனன் குப்ரா பாக 7 பக் 205 பாபு நிகாஹுல் முத்ஆ)

10. அம்ர் இப்னு ஹரீஸ்

   ஹாபிழ் அப்துல் ரஸ்ஸாக் 'அல்முஸன்னப்' என்ற தனது நூலில் இப்னு ஜுரைஹ் என்பரைத் தொட்டும் அறிவித்துள்ளார்: ஜாபிர் சொன்னதாக 'அபூ சுபைர்' எனக்குச் சொன்னார்: அம்ர் இப்னு ஹரீஸ் கூபாவுக்கு வந்தார். அங்கே ஒரு அடிமைப் பெண்ணுடன் முத்ஆச் செய்தார். அவ்வடிமை கற்பிணியாக இருந்த நிலையில் இரண்டாம் கலீபாவிடம் கொண்டு வந்தார்கள் இரண்டாம் கலீபா நடந்தவற்றை அம்ரிடம் விசாரித்தார். இதனாலயே இரண்டாம் கலீபா முத்ஆவை தடை செய்தார் என அவர் உறுதியாக கூறுகின்றார். (பத்ஹுல் பாரி பாக 9 பக் 141)

11. உபை இப்னு கஃப்back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next