ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.   அந்த இருவரும் இவ்வாறு சொல்லுகின்றார்கள்: நாங்கள் இரண்டாம் கலீபாவின் ஆரம்ப காலத்தில் நாங்கள் முத்ஆ செய்து கொண்டிருந்தோம். ஆனால் இரண்டாம் கலீபா 'அம்ர் இப்னு ஹரீஸ்' என்பவரின் சம்பவத்தை; கண்டு மக்கள் அதை செய்வதை விட்டும் அவர் தடுத்தார்.

3. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்

    இப்னு ஹஸ்ம் 'அல்முஹல்லா' என்ற தனது நூலிலும், ஷர்கான் 'ஷர்ஹ் மஅத்தா' விலும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களை தற்காலிய திருமணம் செய்வது ஆகும் என்று உறுதியாக இருந்ததாக குறிப்பிடுகிறார்கள்.

ஹதீதை மனனம் செய்தவர்களும் அவரிடமிருந்து இவ்வாறு அறிவித்துள்ளனர். அவர் இப்படிச் சொன்னார்:

   'நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களுடன் கலந்து கொண்டு யுத்தம் செய்து கொண்டிருந்தோம். அப்போது எங்களது மனiவிமார் எங்களுடன் இருக்கவில்லை. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களிடம் (விடயத்தைக் கூறியபின்) எங்களை நாங்கள் நலமிட்டுக் கொள்ளட்டுமா? சொன்ன போது அவர்கள் அதைச் செய்வதை விட்டும் எங்களை தடுத்துவிட்டு, குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு மனைவியை எடுத்துக் கொள்ளுமாறு அனுமதி கொடுத்தார்கள். பின்னர் இந்த அல்குர்ஆன் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். ' முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமானவைகளை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்' (5:87) (சஹீஹுல் புஹாரி பாக 5 பக் 1953 பாபு 8 ஹதீது இல 4787 'சிறு மாற்றத்துடனும்', சஹீஹ் முஸ்லிம் பாக 3 பக் 192-193 பாபு நிகாஹில் முத்ஆ, சுனன் குப்ரா பாக 7 பக் 200, அத்துர்ருல் மன்தூர் பாக 2 பக் 307 5:87 வசனத்தின் விளக்கவுரையின் கீழ்...)

4. அப்துல்லாஹ் இப்னு உமர்

     அஹ்மத் இப்னு ஹன்பல் (ஹன்பலி மதஹ்பின் இமாம்) தனது ஸனதைக் கொண்டு அப்துர் ரஹ்மான் இப்னு நஃம் அல்லது நயீம் அஃரஜி என்பவரிடமிருந்து அறிவிதுள்ளார்: அவர் சொன்னார் ஒருநாள் நான் அப்துல்லாஹ் இப்னு உமரிடம் இருந்தபோது ஒருவர் வந்து முத்ஆ பற்றி அவரிடம் கேட்டார். அதற்கு அவர் இறைவன் மீது ஆணையாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் விபச்சாரம் செய்வபர் இருக்கவில்லை. (அதாவது தனது தேவையை முத்ஆ மூலம் நிறைவேற்றிக் கொண்டனர்) (முஸ்னத் அஹ்மத் பாக 2 பக் 95)

5,6. அபூ ஸயீத் குத்ரி, ஸலமதிப்னு உமையதிப்னு கலப்

       இப்னு ஹஸ்ம் 'அல்முஹல்லா' என்ற தனது நூலிலும், ஷர்கான் 'ஷர்ஹ் மஅத்தா' விலும் அவர்கள் இருவரும் தற்காலிய திருமணம் செய்வது ஆகும் என்று உறுதியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்கள்.

7. மஃபதிப்னு உமையதிப்னு கலப்back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next