ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.இந்த கண்ணியவான்ளைப் பின்பற்றி நடந்தால் அது நம் இம்மை மறுமை வெற்றிக்கு சிறந்தது. இன்னும் அது இறைவனின் பால் நெருங்க வைக்கின்றது. அவர்களைப் பின்பற்றாது புரக்கணிப்பது மடமையாகும் வழிகேடாகும். இப்படியானவர்கள் தற்காலிய திருமணம் (முத்ஆ) 'ஆகும்' என்றே கூறியுள்ளனர். இன்னும் அது மாற்றப்பட வில்லை எனவும் கருதுகின்றனர். இவ்விடயத்தில் ஷீஆக்களும் அவர்களைப் பினபற்றுகின்றார்கள். 

அமீருல் முஃமினீன் ஹஸரத் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டிருக்கும் ஹதீதிலே இவ்வாறு வந்துள்ளதாவது:

' لولا ان عمر نهي عن المتعة ما زني الا شقي

'உமர் முத்ஆவை (தற்காலிய திருமணத்தை) தடுக்காதிருந்திருந்தால் மூதேவியைத் தவிர எவரும் விபச்சாரம் செய்ய மாட்டார்'

அதாவது முத்ஆ இரண்டாம் கலீபாவின் மூலமே தடை செய்யப்பட்டு ஹராமாக்கப்பட்டது. அதன் காரணமாகவே மக்கள் அதைச் செய்கின்றனர் அல்ல. நிரந்தரத் திருமணம் செய்ய வசதியில்லாதவர் முத்ஆவையும் செய்ய முடியாது விபச்சாரம் செய்து தன்னை அழுக்கடையச் செய்கின்றார் என்பதையே இமாம் அலியின் இந்த வார்த்தை தெளிவூட்டுகின்றது.

முஸ்லிம்களின் தலைவர்கள் அதை சட்ட ரீதியான ஆதாரங்களை முன்வைத்து ஆகும் என கருதி அல்குர்ஆன், அல்ஹதீது மற்றும் சஹாபாக்கள், தாபியீன்கள், முஸ்லிம்கள் குர்ஆனைப் பயன் படுத்தி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் தற்காலிய திரமணம் செய்வதற்கு அனுமதித்தார்கள் அதை இரண்டாம் கலீபா தான் தடுத்தார் என கூறுகின்றனர். இப்படியிருக்கின்ற போது எப்படி முஸ்லிம்களின் ஏகோபித்த கருத்து என்று கூறமுடியும்?

இங்கே தற்காலிய திருமணம் ஆகும் என ஏற்றுக் கொண்ட சிலரை கூறிய அவர்களின் கூற்றுக்களையும் முன்வைக்கின்றோம்.

 1. இம்ரான் இப்னு ஹசீன் என்பவர் இவ்வாறு சொல்லுகிறார்:

  அல்குர்ஆனில் வந்துள்ள 'முத்ஆ'வுடைய வசனத்தை அல்;குர்ஆனின் வேறு எந்த வசனமும் மாற்றவில்லை. நாங்கள் அதை செய்வதற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். நாங்கள் அவர்களுடன் சேர்;ந்து ஹஜ்ஜு தமத்துவுவை செய்தோம். அவர்கள் மரணிக்கும் போதும் இதை விட்டும் எங்களை தடுக்க வில்லை. ஆனால் ஒருவர் (இரண்டாம் கலீபா) நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவரது சொந்த அபிப்பிராயத்தை கொண்டு விரும்பியதைக் கூறினார். (தப்ஸீர் குர்துபி பாக 2 பக் 385 ஹதீது இல 1026 இல் இந்த அறிவிப்பின் தொடரிலே இவ்வாறு குறிப்பிடுகிறார்: அல்குர்ஆனில் முத்ஆவுடைய வசனம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களுக்கு இறங்கியது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களும் அதைச் செய்யுமாறு கட்டளையிட்டார்கள். அதை வேறு எந்த வசனமும் மாற்றவில்லை. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களும் மரணிக்கின்ற வரை அதைத் தடை செய்யவுமில்லை. ஆனால் அவருக்குப் பிறகு ஒருவர் அதை தடை செய்தார்.)

2. ஜாபிர் இப்னு அப்துல்லஹ், அபூஸயீத் குத்ரிback 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next