ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.ரிழா: இது அனைத்து முஸ்லிம்களிடமும் ஏற்றுக் கொள்ளப் பட்ட விடயமில்லை.

அப்துல்லாஹ்: எப்படி?

ரிழா: நீங்கள் சொன்னது போன்றும் ஏற்றுக் கொண்டிருப்பது போன்றும் ஷீஆக்கள் தற்காலிய திருமணத்தை (முத்ஆவை) ஆகுமானதாக ஏற்றுக் கொள்கின்றனர்.

உலக முஸ்லிம்களில் ஷீஆக்கள் மூன்றில் ஒரு பங்கினராகும். அவர்களின எண்ணிக்கை சுமார் இருநூறு மில்லியன் ஆகும். (புதிய கணிப்பீட்டின் படி முஸ்லிம்கள் சுமார் இருநூறு கோடியாகும். அதில் அரைவாசியனவர்கள் ஷீஆக்கள் என்று எகிப்தின் முன்னால் ஜனாதிபதி 'அன்வர் சாதாத்' கெய்ரோவில் நடந்த சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் கூறினார்). இத்தொகையினர் முத்ஆவை ஹலாலா கருதும் போதும் அது எப்படி ஏகோபித்ததாக இருக்க முடியும்.

இதை விட மேலாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தில் வந்த பரிசுவான்களான இமாம்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் கப்பலுக்கு ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளார்கள்:

'مثل اهل بيتي فيكم كمثل سفينة نوح  من ركبها نجي  ومن تخل عنها غرق '

'உங்களுக்கு மத்தியில் எனது அஹ்லுல் பைத்தினர்கள் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பலைப் போலாகும். யார் அதில் ஏறிக் கொள்கிறனரோ அவர் வெற்றியடைவார். யார் அதலில் ஏறாது பின்வாங்குகினறரோ அவர் நீரில் மூழ்கி அழிந்து விடுவார்'

மேலும் சொன்னார்கள்:

اني تارك فيكم الثقلين كتاب الله وعترتي اهـل بيتي لن يفترقا حتى يردا علي الحوض

நான் உங்கள் மத்தியில் இரு விடயங்களை விட்டுச் செல்கின்றேன். ஒன்று இறை வேதம் மற்றது இரண்டு எனது குடும்பமான அஹ்லுல் பைத்துமாகும்;. இவ்விரண்டும் என்னை நோக்கி ஹவ்ழு, சுவனத்திலுள்ள நீர்த்தடாகத்திற்கு வரும் வரைக்கும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாது. (முஸ்னத் அஹ்மத் இப்னு ஹன்பல் பாக 3 பக் 17, 26, 59 , பாக 4 பக் 367)back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next