ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.அப்துல்லாஹ்: தற்காலிய திருமணத்தை (முத்ஆவை) ப் பற்றி அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதா?

ரிழா: ஆமாம், அல்குர்ஆன் அதைப் பற்றி இவ்வாறு சொல்லுகின்றது:

فَمَا اسْتَمْتَعْتُم بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً

பெண்களை நீங்கள் முத்ஆ (தற்காலிய திருமணம்) செய்தால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்) தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். (4:24)

மர்ஹும் அல்லாமா அமீனி அவர்கள் அல்கதீர் என்ற தனது நூலில் அஹ்லுஸ் சுன்னத்து வல்ஜமாஅத்தினரின் நூற்களிலிருந்து இது பற்றிய அதகிமான விடயங்களை தொகுத்துக் கூறியுள்ளார்கள். அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் அறிஞர்களில் உதாரணமாக ஹம்பலி மத்ஹப் இஸ்தாபகர் அஹ்மத் இப்னு ஹம்பலி அவர்களைக் குறிப்பிடலாம். அவருடன் சேர்ந்து மற்ற அறிஞர்களும் இந்த வசனம் முத்ஆவுடைய விடயத்தில் தான் இறங்கியது எனவும் அதை முத்ஆவுக்கு ஆதாரமானவை எனவும் சான்று பகர்கின்றனர். (இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு அல்கதீர் பாக 6 பக் 226-236)

அப்துல்லாஹ்: இன்று வரைக்கும் இது பற்றி ஒன்றும் எனக்குத் தெரிந்திருக்க வில்லை.

ரிழா: 'அல்கதீர்' என்ற கிதாபைப் படிப்பதன் மூலம் இது பற்றி என்னென்ன விடயங்கள் வந்துள்ளனவோ அவை அனைத்தையும் அறிந்து கொள்வீர். மேலும் அல்லாஹ்வும் அவன் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களும் ஹலால் ஆக்கியவைகளை விட்டு விட்டு இரண்டாம் கலீபா ஹராம் என்று சொன்னவைகளை எடுத்துக் கொள்ள முடியுமாநாம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின உம்மத்தா அல்லது இரண்டாம் கலீபாவின் உம்மத்தா?!

அப்துல்லாஹ்: நாங்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தாகும். இரண்டாம் கலீபாவும் அந்த உம்மத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமை அவரைச் சாறும்.

ரிழா: அப்படியென்றால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் சொன்னதை ஏற்றுக் கொள்ள எது உனக்கு தடையாக இருக்கின்றது?

அப்துல்லாஹ்: அனைத்து முஸ்லிம்களின் ஏகோபித்த கருத்து என்னை அதை ஏற்றுக் கொள்ள விடாது தடுக்கின்றது.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next