ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.ரிழா: இதன்பிரகாரம், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் சொன்னதை தூக்கி எறிந்து விட்டு இரண்டாம் கலீபா சொன்னதை நியாயப்படுத்த முடியுமா?

அப்துல்லாஹ்: இரண்டாம கலீபா அதைத் தடை செய்தது அதை நியாயப்படுத்துகின்றது.

ரிழா: அப்படியென்றால் 'நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஹலால் கியாம நாள் வரைக்கும் ஹலாலாகும். ஹராம் கியாம நாள் வரைக்கும் ஹராமாகும்'1 என்னத்தைச் சொல்லுது? இது அனைத்து இஸ்லாமிய அறிஞர்களாலும் எற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகும்.

 

1. قال رسول الله صلي الله عليه وآله وسلم: " حلال محمد حلال الي يوم القيامة  وحرامه حرام الي يوم القيامة" (سنن ابن داوود  سجستاني ج 1 ص 6 باب 2 حديث 12 . كافي ج 1 ص 5 حديث 19 . وسائل ج 18 ص 124 باب 12 حديث 47)

சுனன் இப்னு தாவூத் பாக 1 பக் 6 பாபு 6 ஹதீது இல 12 ...

அப்துல்லாஹ் சற்று நேரம் அமைதியா இருந்து விட்டு ரிழாவைப் பார்த்துச் சொன்னான். நீ சொல்வது சரிதான். ஆனால் இரண்டாம் கலீபா அதை எப்படி தடை செய்ய முடியும்? துடை செய்வதற்குறிய காரணம் என்ன?

ரிழா: இது அவரது தனிப்பட்ட இஜ்திஹாதாகும். எந்த இஜ்திஹாது அல்குர்ஆன் சுன்னாவுக்கு மாற்றமாக இருக்கின்றதோ அதை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, தூக்கி வீசப்படும்.

அப்துல்லாஹ்: இதுஇரண்டாம் கலீபாவைப் போன்றவர்களின் இஜ்திஹாத்தாக இருந்தாலும் சரிதானா?

ரிழா: அவரை விட பெரியவர்களுடையதாக இருந்தாலும் சரியே! ஒரு போதும் அதை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. உனது கருத்துப் படி பின்பற்றுவதற்கு அல்லாஹ் ரஸுலுடைய வார்த்தை சிறந்ததா? அல்லது இரண்டாம் கலீபாவுடைய சொல் சிறந்ததா?back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next