ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.ரிழா: இரண்டாம் கலீபாவின் கூற்றுப்பிரகாரம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் அதை ஹலாலாக்கி வைத்தார்கள் நாங்களும் நாயகத்தைப் பின்பற்றி அதை ஹலால் என்கின்றோம்.

அப்துல்லாஹ்: அப்படி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் என்ன சொல்லியுள்ளார்கள்?

ரிழா: ஜாஹிழ், குர்துபி, சுர்ஹுஸி ஹனபி, பஹ்ருர்ராஸி போன்ற அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தின் மேலும் பல அறிஞர்கள்கள் அறிவித்துள்ளார்கள். இரண்டாம் கலீபா ஒரு கொத்பா பிரசங்கத்தில் சொன்னார்:

متعتان كانتا علي عهد رسول الله صلي الله عليه وآله وسلم  وانا انهي عنهما واعاقب عليهما: متعة الحج ومتعة النساء

இரண்டு முத்ஆக்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் ஆகுமானதாக இருந்தது. அதை நான் இப்போது தடை செய்கிறேன். அதைச் செய்வோருக்கும் தண்டனை கொடுப்பேன் அவை ஹஜ்ஜுடைய முத்ஆவாவும்,1* பெண்களின் முத்ஆவுமாகும் (தற்காலிய திருமணமுமாகும்) என்றார். ( ஜாஹிழ், அல்பயான் வத்தப்யீன் பாக 2 பக் 223, தப்ஸீர் குர்துபி பாக 2 பக் 390-391 ஹதீது 1042, பஹ்ருர்ராஸி அத்தப்ஸீருல் கபீர் பாக 2 பக் 167, பாக 3 பக் 201-202)

 

1*.முத்அதுல் ஹஜ்: ஹஜ்ஜு செய்பவர் ஹஜ்ஜு தமத்துவுவின் உம்ராவை நிறைவேற்றிய பிறகு இஹ்ராமுடைய நிலையை விட்டு வெளிவேறி மீண்டும் ஹஜ்ஜு தமத்துவுடைய அமல்களை செய்வதற்கு புதிதாக இஹ்ராம் கட்டுகின்ற வரை இஹ்ராமுடைய நிலையில் ஹராமாக இருந்த அனைத்தும் ஹலாலாகும் அவைகளைப் பாவிப்பதும் ஆகும்.

தாரிகு இப்னு கல்லகான் என்ற நூலில் இவ்வாறு வந்துள்ளது: இரண்டாம் கலீபா சொன்னார்: 'இரண்டு முத்ஆக்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும் அபூபக்கருடைய காலத்திலும் ஆகுமானதாக இருந்தது. நான் அதைத் தடை செய்கின்றேன்' (தாரிகு இப்னு கல்லகான் பாக 2 பக் 359)

இதைப்பற்றி உனது கருத்து என்ன? இரண்டாம் கலீபா சொல்லுகின்ற இந்த இரண்டு முத்ஆக்களும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இருந்தது என்பது உண்மையா? அல்லது பொய்யா?

அப்துல்லாஹ்: உமர் உண்மையையே சொல்லுவார்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next