ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.ஜமால்: என் தந்தை, பெரிய தந்தை, நண்பர்கள் கப்ரை தரிசிப்பது பற்றி கூறியதை மட்டுமே கேட்டுள்ளேன். அவர்கள் அதிகமாக அதை விமர்சிப்பவர்களாகவே இருந்தனர். ஒரு தடவையேனும் அவர்கள் இது பற்றி ஒரு ஹதீதையேனும் சொல்லி நான் கேட்க வில்லை.

ஜவாத்: மனிதன் உண்மையை உரிய படி அறிந்து கொள்ள எப்போதும் முயற்சி செய்ய வேண்டும். அது பற்றி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.  அல்லாஹ் விரும்புகின்றவாறு நடந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் சொல்வதை மட்டும் கேட்டு விட்டு மௌனமாக இருந்து விடக் கூடாது சிலவேலை அது பழையாக இருக்கலாம்.

ஜமால்: நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் கப்ரை, இமாம்கள், சாலிஹான நல்லடியார்களின் கப்ருகளை சியாரத் செய்வது நல்ல செயல்தான் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அது சுன்னது முஸ்தஹப்பு மாத்திரம் அல்ல மாறாக அதைச் செய்யுமாறு மக்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

ஜவாத்: உன்னிடம் ஒரு வேண்டுகோல் இருக்கு.

ஜமால்: சொல்லு, கேட்பதற்கு தயாராக இருக்கின்றேன்.

ஜவாத்: தயவுடன் உன்னிடம் வேண்டுவது என்னவெனில் மக்கள் அதைப் பின்பற்றுpகின்றார்களே, மக்கள் அப்படிச் சொல்லுகின்றார்களே என்று ஒன்றையும் பின்பற்றாதே. யாராகினும் உனக்கு ஒன்றைச் சொல்லுகின்றபோது அது பற்றி நன்றாக ஆராய்ந்து பார் அப்போது அது எந்தளவு உண்மை என்றும் அறிந்து கொள்வதோடு வெற்றியும் அடைவாய்.

ஜமால்: அன்று கப்ருகளை தரிசிப்பது ஷிர்க் என்று அறிந்து வைத்திருந்தேன். ஆனால் இப்போது ஹதீதுகளின் அடிப்படையில் தகுந்த ஆதாரத்தோடு அது ஷிர்க் இல்லை. மாறாக சுன்னது முஅக்கதா என்று அறிந்து கொண்டேன். இன்னும் எந்த விடயத்தில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றதோ அது பற்றி வாசிக்க வேண்டும், ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என புரிந்து கொண்டேன். இது பற்றி படிக்க இன்ஷா அல்லாஹ் உன்னையும் சேர்;த்துக் கொண்டு உனது ஆலோசணைகளைப் பெறுவேன். இப்போது நாம் கலந்துரையாடிய விடயத்தை என் தந்தையுடனும் பேசுவேன். ஏனெனிர் அவர் தான் எனக்கு தவரான கருத்துக்களை திணித்தார். அவருக்கும் உண்மையை எடுத்துக் கூறி அவரையும் நேர் வழியின் பால் அழைப்பேன்.

ஜவாத்: மிகவும் நன்றி.

ஜமால்: உண்மையை புரியவைத்ததற்கு உனக்கும் நன்றிகள்.

தற்காலிய திருமணம்

அப்துல்லாஹ்: முஸ்லிம்கள் அனைவரும் 'முத்ஆ' எனப்படும் தற்காலிய திருமணம் ஹராம் என்று ஏகோபித்த கொள்கை கொண்டிருக்கின்ற நிலையில் ஷீஆக்களாகிய நீங்கள் என் அதை ஆகும் என்கின்றீர்கள்?back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next