ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.5. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

من حج وقصدني  في مسجدي كانت له حجتان مبرورتان

'எவர் ஒருவர் ஹஜ்ஜு செய்வதற்கு வந்து எனது பள்ளியிலே என்னை சியாரத் செய்ய வருகின்றாரோ அவருக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட இரண்டு ஹஜ்ஜுகள் எழுதப்படும்' (ஆதாரம் சென்றவைதான்)

இதேபோல் அதிகமான ஹதீதுகள் இருக்கின்ற அவை அனைத்தும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் கப்ரு மற்றும் ஏனைய சாலிஹான நல்லடியார்களின் கப்ருகளை சியாரத் செய்வது ஆகும் என வலியுறுத்துகிறது. இன்னும் அது முஸ்தஹப்பான காரியமுமாகும். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ள 'எவர் ஒருவர் ஹஜ்ஜுக்கு வந்து என்னை சியாரத் செய்ய வில்லையோ அவர் எனக்கு அநீதியிலைத்து விட்டார்' என்ற ஹதீது அந்நாயகத்தின் கப்ரை சியாரத் செய்வது முஸ்தஹப்பு என்பதற்கு தகுந்த ஆதாரமில்லையா? மேலும் 'நான் அவருக்கு ஷபாஅத் செய்வேன்' என்ற வாசகம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் கப்ரை சியாரத் செய்வது (சுன்னத்) முஅக்கதா என்பதைத் தெளிவு படுத்துகின்றதில்லையா?

'கப்ருகளை சியாரத் செய்ய செல்லுங்கள் அது உங்களுக்கு மறுமையை ஞாபக மூட்டும்' என்பதில் சியாரத் பன்ன செல்வதற்கு கட்டளையிடப்படவில்லையாஇந்த ஏவல் வாஜிபு இல்லை என்றிருந்தாலும் அது முஸ்தஹப்பு என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

ஜமால்: இந்த ஹதீது எங்கே வந்துள்ளது?

ஜவாத்: ஹதீது கிரந்தங்களில் தான் வந்துள்ளது. அவைகளை நீ வாசிக்கின்ற போது அதைக் கண்டு உண்மையை அறிந்து கொள்வாய்.

ஜமால்: இன்று வரைக்கும் இந்த ஹதீதுகளில் ஒன்றைக் கூட நான் படித்திருக்க வில்லை. கேட்டிருக்க வில்லை.

ஜவாத்: சஹீஹுல் புஹாரியைப் படித்துள்ளீரா?

ஜமால்: இக்கிதாபு என்னிடம் இல்லை.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next