ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.அலி: இறைவனது உடல் மீது ஸஜதா செய்வது கடமையா?

ஷாமி: இந்த உனது சொல் சுத்த குப்ராகும். ஏனெனில் இறைவனுக்கு உடலோ உருவமோ இல்லை. அவனை கண்ணால் பார்க்கவோ கைளால் தொடவோ முடியாது. எவர் ஒருவர் இறைவனுக்கு உருவம் உள்ளதென நம்பிக்கை கொள்கிறாரோ சந்தேகமின்றி அவர் காபிராகும். இன்னும் ஸஜதா அல்லாஹுக்காக இருக்க வேண்டும். அது அல்லாஹ் மீது இருப்பது குப்ர் ஆகும்.

அலி: இந்த உனது விளக்கத்தைக் கொண்டு நாங்கள் மொஹ்ரின் மேல் செய்யும் ஸஜதா ஷிர்க் இல்லை என தெளிவாகிறது. ஏனெனில் மொஹ்ர் மீது அது மொஹராக இருப்பதற்காக ஸஜதா செய்வதில்லை. -அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்- நாங்கள் மொஹரை இறைவன் என நம்பிக்கை கொண்டிருந்தால் கட்டாயம் அதன் மேல் ஸஜதா செய்யாது அதற்காக ஸஜதா செய்ய வேண்டும். வணங்குகின்ற ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் மேல் ஸஜதா செய்ய வில்லை. மாறாக அவர்கள் அல்லாஹுக்காகவே ஸஜதா செய்கின்றனர்.

ஷாமி: இப்படியான சிறந்ததொரு திறணாய்வை என் வாழ்வில் முதல் தடவையாக வேட்கின்றேன். உண்மையில் மொஹரை அல்லாஹ் என கருதியிருந்தால் ஒரு போதும் அதன் மேல் ஸஜதா செய்திருக்க மாட்டீர்கள். நீங்கள் அதன் மீது ஸஜதா செய்வதால் அதை நீங்கள் அல்லாஹ் என ஏற்றுக் கொள்கின்றீர்கள் இல்லை என தெரியவருகின்றது.

அப்போது அலியை நோக்கி சில விடயங்களைக் கேற்பதற்கு அனுமதி தருவாயா என்றான் ஷாமி.

அலி: உனது விருப்பத்தைக் கேள்.

ஷாமி: இதனால் நீங்கள் மொஹரில் தான் ஸஜதா செய்ய வேண்டும் என கண்டிப்பாக இருக்கின்றீர்? அது தவிரந்த வேறு ஒன்றிலும் ஸஜதா செய்கின்றீர்கள் அல்ல?

அலி: நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஆலிஹி அவர்கள் கூறிய, جعلت لي الارض مسجدا و طهـورا    என்ற ஹதிதை அனைத்து இஸ்லாமிய மத்ஹபுகளும் ஏற்றுக் கொண்டு அதில் ஒரு மித்த கருத்துடையவர்களாவும் இருக்கின்றனர். நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஆலிஹி அவர்கள் 'பூமி எனக்கு ஸஜதா செய்யும் இடமாகவும் சுத்தமாகவும் ஆக்கப் பட்டுள்ளது' என சொன்னார்கள்.

(இந்த ஹதீது சஹீஹுல் புஹாரி பாகம் 1 பக்கம் 128 ஹதீது இல 328 கிதாபுத் தயம்மும், சஹீஹுல் முஸ்லிம் பாகம் 2 பக்கம் 9 கிதாபுல் மஸாதித் வ மவாழிஉஸ் ஸலாத், சுனன் திர்மிதி பாகம் 2 பக்கம் 131 பாடம் 36 ஹதீது இல 317, பூமியில் அடக்கஸ்தளம் இன்னும் குளியலறை தவிர்ந் அனைத்து இடங்களும் ஸஜதா செய்யும் இடமாகும் என்பதில் வந்துள்ளவை, செய்க் ஸதூக் மன்லா யஹ்லுருஹுல் பகீஹ் பாகம் 1 பக்கம் 155 பாடம் 38 ஹதீது இல 1, செய்க் ஹுர் ஆமுலி  வஸாயிலுஷ் ஷீஆ பாகம் 2 பக்கம் 969-970    பாடம் 7 ஹதீது இல 2)

இதன் படி சுத்தமான மண்ணில் ஸஜதா செய்வது உண்மையாக ஜாயிஸாகும். அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் அதை ஏற்றுக் கொள்கின்றனர். எனவே சுத்தமான மண்ணில் ஸஜதா செய்வது ஆகும் என்ற ஏகோபித்த கருத்து இருக்கின்ற காரணத்தால் தான் மண்ணில் ஸஜதா செய்கின்றோம்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next