ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.எவர் எனது கப்ரை அல்லது எவர் என்னை சியாரத் செய்கின்றாரோ அவருக்கும் ஷபாஅத் செய்பவனாக இருப்பேன். அதாவது ஷபாஅத் செய்வேன்.)

2.மேலும் இவ்வாறும் அறிவிக்கப் பட்டுள்ளது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

من زارني بالمدينة محتسبا كنت له شفيعا وشهيدا يوم القيامة

'எவர் ஒருவர் அல்லாஹ்வுக்காக என்னை மதினாவில் சியாரத் செய்கின்றாரோ நான் அவருக்கு மறுமை நாளில் ஷபாஅத் செய்பவனாகவும் சாட்சி கூறுபவனாகவும் இருப்பேன்'  (இஹ்யாஉ உலூமித்தீன் பாக 4 பக் 491, முன்தகபு கன்சில் உம்மால் முஸ்னத் அஹ்மதிக் அடிக்குறிப்கு பாக 2 பக் 392)

3.நாபிஃ இப்னு உமர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

من حج  ولم يزرني فقد جفاني

'எவர் ஹஜ்ஜுசெய்வதற்கு வந்து என்னை சியாரத் செய்ய வில்லை அவர் எனக்கு அநீதியிலைத்து விட்டார்' (கன்சுல் உம்மால் முஸ்னத் அஹ்மதின் அடிக்ககுறிப்பு பாக 2 பக் 392)

4.அபூஹுரைரா நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

من زارني بعد موتي فكانها زارني حيا

'எவர் உருவர் நான் மரணித்த பின என்னை சியாரத் செய்கிறாரோ அவர் என்னை நான் உயிருடன் இருக்கும் போது சந்தித்தவர் போலாவார்' (ஆதாரம் மேல் கூறியவை தான்)back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next