ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.'கப்ருகளைத் தரிசிக்க, சியாரத் செய்ய செல்லுங்கள். அது உங்களுக்கு மறுமையை ஞாபகப்படுத்தும்' (சுனன் இப்னு மாஜா பாக 1 பக் 1 பாபு 48 ஹதீது இல 1572, மேலும் அதில் கப்ருகளைக் தரிசிக்கச் செல்லுங்கள் நிச்சயமாக அது உங்களக்கு மரணத்தை ஞாபகப் படுத்தும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.)

5.ஹதீது நூற்களில் எவ்வாறு சியாரத் செய்ய வேண்டும் என அதிகமான அறிவிப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவைகளில் சில,

எவராகினும் பகீஃ அடக்கஸ்தளத்திற்குப் போனால் இவ்வாறு சொல்லுங்கள்:

السلام عليكم اهل الديار من المؤمنين والمسلمين ...

இதில் இருக்கின்ற முஃமின் முஸ்லிம்களே உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்... ( சுனன் இப்னு மாஜா பாக 1 பக் 494 பாபு 36 ஹதீது 1574, சஹீஹ் முஸ்லிம் பாக 2 பக் 365 ஹதீது இல 104, முன்தஹபு கன்ஸில் உம்மால் ஹாஸியா முஸ்னத் அஹ்மத் பாக 2 பக் 89)

இது வரைக்கும் கூறப்பட்டது சாலிஹானவர்களின் கப்ருகளை சியாரத் செய்வது முஸ்தஹப்பு, இன்னும் அதன் மீது ஆசையூட்டும் அறிவிப்புக்களாகும். அதேபோல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களின் கப்ரை சியாரத் செய்வது சம்பந்தமாக நிறைய ஹதீதுகள் வந்துள்ளன. அவைகளில் சிலதை இங்கே தருகின்றேன்:

1.தாரகுத்னி, கஸ்ஸாலி இன்னும் பைஹகி போன்றோர் அறிவித்துள்ளார்கள், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்கள் சொன்னார்கள்:

من زارني وجبت له شفاعتي

'எவர் என்னை சியாரத் செய்கின்றாரோ அவருக்கு என் ஷபாஅத் வாஜிபாகின்றது என்றார்கள்' (அலி இப்னு உமர் தாரகுத்னி, சுனன் பாக 2 பக் 278 ஹதீது இல 194 இல் இந்த ஹதீது இவ்வாறு அறிவிக்கப் பட்டுள்ளது. من زارقبري وجبت له شفاعتي 'எவர் எனது கப்ரை தரிசிக்கின்றாரோ அவருக்கு எனது ஷபாஅத்து வாஜிபாகின்றது. இஹ்யாஉல் உலூமித்தீன பாக 4 பக் 490-491 இல் பயானு சியாhரதில் குபூர்... என்ற பிரிவில் தாரகுத்னி அறிவித்துள்ளது போல் அறிவிக்கப் பட்டுள்ளது, அஹ்மத் இப்னு ஹுஸைன் பைஹகி, சுனனுல் குப்ரா பாக 5 பக் 254 பாபு சியாரது கப்ரிர் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  என்ற பாடத்தில் இவ்வாறு வந்துள்ளது:

من زارني   كنت له شفيعا ' او قال  من زار قبري    'back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next