ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.ஜமால்: தயவு செய்து அவைகளில் சிலதைக் கூறுவாயாக.

ஜவாத்:

1.ஒரு ஹதீதிலே வந்துள்ளது: 'நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்கள் உஹதுப் போரில ஷஹீதானவர்களை சியாரத் செய்ய போனார்கள்' (சஹீஹுல் முஸ்லிம் பாக 2 பக் 63, சுனன் நஸாயி பாக 3 பக் 76)

2. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்கள் பகீஃயில் அடக்கம் செய்யப்பட்டிருப்ப வர்களைச் சியாரத் செய்ய போனார்கள். என மற்றொரு ஹதீதில் அறிவிக்கப் பட்டுள்ளது.

3. 'சுனன் நஸாயி' இன்னும் 'சுனன் இப்னு மாஜா' மற்றும் 'இஹ்யாஉ உலூமில் தீன்' போன்றவைகளில் அபூஹுரைராவைத் தொட்டும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாவது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்கள் சொன்னார்கள்:

زوروا القبور فانها تذكركم الاخرة

'கப்ருகளைத் தரிசிக்க, சியாரத் செய்ய செல்லுங்கள். அது உங்களுக்கு மறுமையை ஞாபகப்படுத்தும்'. (சுனன் இப்னு மாஜா பாக 1 பக் 500 பாபு 4 ஹதீது இல 1569, இஹ்யாஉ உலூமித்தீன் பாக 4 பக் 490)

4. மேலும் அபூ ஹுரைராவிடமிருந்து இவ்வாறு அறிவிக்க்ப பட்டுள்ளது:

 நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்கள் தன் தாயின் (ஹஸரத் ஆமினா பின்த் அஸத் (ரழி) அவ்களின்) கப்ரை தரிசிக்கச் சென்றார்கள். தாயின் கப்ருக்கு அருகில் (நின்று) அழுதார்கள். அவர்கள் சூழந்து நின்றவர்களும் அழத் தொடங்கினர். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்கள் சொன்னார்கள்:

فزوروا القبور فانها تذكركم بالاخرةback 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next