ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.ஜமால்: அவ்வாறேதான்.

ஜவாத்: ஷீஆக்களாகிய நாங்களும் ஏனைய முஸ்லிம்களும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களின் அல்லது இமாம்களின், சாலிஹான நல்லடியார்களின் கப்ரை தரிசிக்க செல்கின்றபோது அதை வணங்க வேண்டும் என்ற நிய்யத்தில் அதை சியாரத் செய்ய வில்லை. எங்களது செயற்பாடுகளுக்கும் முஷ்ரிகுகளின் செயற்பாடுகளுக்கும் இடையில் ஒப்பிட்டுப் பார்த்தால் வெறும் நடைமுறையிலே அவர்களுடன் தொடர்பு இருக்கின்றது. ஆனால் நிய்யத்தில் எவ்வித தொடர்புமே இல்லை. நடை முறைக்கு ஒப்பாகுதல் இறைவன் அல்லாததை வணங்ககுதல் என்ற நோக்கம் இல்லாதிருந்தால் அது ஹராமுமில்லை இன்னும் ஷிர்க் இணைவைப்பின் பால் கொண்டு சேர்க்கவுமாட்டாது. ஒரு ஹதீதிலே இவ்வாறு வந்துள்ளது: 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களுக்கு ஏற்பவே அமையும்' (சஹீஹுல் புஹாரி பாக 1 பக் 3 ஹதீது இல 1 பாபு 1 , கிதாபு பத்இல் வஹீ இலா ரஸுலில்லாஹ்; பஹ்குர்ராஷி, தப்ஸீருல் கபீர் பாக 4 பக் 5 விடயம் 4 சூரதுல் பகரா 112 வது வசனத்தின் விளக்கவுiர் தஹ்தீபுல் அஹ்காம் பாக 1 பக் 83 பாபு 4 ஹதீது இல 67...)  இதன்படி ஒரு அமல் அல்லாஹ் அல்லாததை வணங்க வேண்டம் என்ற எண்ணத்துடன் செய்யப்பட்டால் அது ஷிர்க் இந்த நிய்யத்து நோக்கம் இல்லாது போனால் அது ஆகுமாகும்.  உதாரணத்திற்கு ஒரு இடத்தில் நின்று தொழுகின்றாய் அங்கே உனக்கு முன் சிலையொன்று இருக்கின்றது. அப்போது அந்த சிலையை வணங்குகிறேன் என்ற நிய்யத்துடன் தொழுதால் அந்த தொழுகையின் மூலம் நீ இணைவைத்தவனாக ஆகிவிடுவாய். முhறாக அத்தொழுகையை அல்லாஹ்வுக்காக தொழுதால், உன் சிந்தனையில் அச்சிலையைப் பற்றி கற்பனை செய்யாது இருந்தால் சந்தேகமின்றி உன் தொழுகை சஹீஹானதாகும். இதன் மூலம் இணைவைப்பவானாக ஆகமாட்டாய்.

ஜமால் நீண்ட நேரம் யோசித்து விட்டுச் சொன்னான்: நீ சொல்வது அனைத்தும் உண்மைதான். அல்லாஹ் உனக்கு நல்லருல் செய்வானாக. தெரியாதிருந்த விடயங்களை ஆதாரத்துடன் புரியவைத்து விட்டாய். ஆனால் இப்போது எனக்குள்ளே கேள்வியொன்று இருக்கின்றது.

ஜவாத்: கேளுங்கள்.

ஜமால்: இப்போது கப்ருகளை தரிசிப்பது ஆகும். அது ஹராமில்லை ஆகுமானது தான் என அறிந்து கொண்டேன். ஆனால் ஷீஆக்களாகிய நீங்கள் இதற்கு மிகவும் முக்கியத்தும் கொடுக்கின்றீர்கள்? அதன் ஆதாரம், ரகசியம் என்ன?

ஜவாத்: அதாவது அது 'சுன்னது முஅக்கதா' ஆகும்.

ஜமால்: இச்செயல் முஸ்தஹப்பா?

ஜவாத்: ஆமாம், இது முஸ்தஹப்பு என்பது உறுதியான விடயம்.

ஜமால்: நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களின் கப்ரையும் சாலிஹான நல்லடியார்களின் கப்ருகளை சியாரத் செய்வது முஸ்தஹப்பு என்பதை  நிருபிக்கும் வண்ணம் ஹதீதுகள் வந்துள்ளதா?

ஜவாத்: ஆமாம், அறிவிக்கப் பட்டுள்ள ஹதீதகளுடன், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்கள் செய்து காட்டியதும் முஸ்லிம்களின் வழி முறைகளும் கப்ருகளை சியாரத் செய்வது ஆகும் என்பதை உறுதி செய்கின்றது.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next