ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.ஜமால்: அப்பாக்கியமும் எனக்குக் கிடைத்தது.

ஜவாத்: அனைத்து முஸ்லிம்களும் தொழுகை;கு அதை முன்னோக்கி நிற்பதை நிச்சயம் கண்டிருப்பாய். ஒரு கூட்டத்தினர் மேற்குப் பக்கமும் இன்னும் சிலர் தெற்குப் பக்ககும் மேலும் சிலர் விடக்குப் பக்கமும் நிற்பதையும் கண்டிருப்பீர்.

ஜமால்: ஆமாம், கண்டேன். நானும் கூட தொழுகைக்கு அவ்வாறே செய்தேன். இறையில்லத்தில் எப்பக்கம் போனாலும் கஃபாவை முன்னோக்கினேன். ஏனெனில் தொழுகையின் போது கஃபாவை முன்னோக்கவே வேண்டும். இல்லாது போனால் தொழுகை பாத்திலாகி விடும். அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

ஜவாத்: இதனால் தான் அனைத்து முஸ்லிம்களும் முஷ்ரிகுகளாகும்.

ஜமால்: ஏன்?

ஜவாத்: வணக்க வழிபாடுகளின் போது கிப்லாவை முன்னோக்குவது சிலை வணங்கிகள் அவர்களது சிலையை முன்னோக்கவது போலாகும்.  அவர்கள் வணக்கத்தின் போது தங்களது கைளால் செய்யப்பட்ட சிலைகளை முண்னோக்குகின்றனர். நீயோ கல்லினால் செய்யப்பட்ட ஒரு வீட்டை முன்னோக்குகின்றீர்.

ஜமால்: நான் கஃபாவை முன்னோக்கவதற்கும் சிலை வணங்கிகள் அவர்களது சிலையை முன்னோக்குவதற்கும் மாபெரும் வித்தியாசம் இருக்கின்றது.

ஜவாத்: என்ன வித்தியாசம் இருக்கின்றது?

ஜமால்: நானும் ஏனைய முஸ்லிம்களும் தொழுகைக்காக கஃபாவை முன்னோக்கி நிற்கின்ற போது அது அந்த கட்டிடத்தை அல்லாஹ்விடத்தில் வைத்து வணங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிற்க வில்லை. மாறாக அல்லாஹ்வின் கட்டளைக்கு வழி படவே அப்படி நிற்கின்றோம். ஆனால் சிலை வணங்கிகள் அல்லாஹ்விடத்தில்  அவர்களது கைளால் செய்யப்பட்ட சிலைகளை வைத்து வணங்குகின்றனர். வணக்கத்தின் போதும் அதை முன்னோக்கி நிற்கின்றனர். இதன்படி அவர்கள் சிலையை வணங்குகின்றனர். ஆனால் நாங்களோ அல்லாஹ்வை மாத்திரமே முன்னோக்குகின்றோம். இதன்படி அவர்கள் செயல்கள் இணைவைப்பதாகும். ஆனால் இறைகட்டளையை நிறைவேற்ற நிற்கின்ற நாங்களும் முஷ்ரிகுகளா? அவர்களுக்கு எங்களுக்கும் இடையில் வித்தியாசம் வானத்திற்கும் பூமிக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைப் போலாகும்.

ஜவாத்: உனது கருத்துப் படி ஒருவருடைய செயற்பாடுகளுக்கு ஒப்பாவது ஷிர்க் இல்லை. ஆனால் அதை செய்யும் நிய்யத்தில் தான் அவர்கள் ஒப்பாக இருந்தால் தான் அது ஷிர்க் ஆகும்.  இல்லையென்றருந்தால் நீயும் அவர்களுக்கு ஒப்பாகி இருப்பாய். இன்னும் முஷ்ரிகுகள் சிலையை வணங்க அதை முன்னோக்குகின்றனர் ஆனால் நீ கஃபாவை முன்னோக்குவது அதை வணங்க வேண்டும் என்ற நிய்யத்தில் இல்லை. அப்படித்தானே?back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next