ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.கப்ருகளை தரிசித்தல்

ஜமால்: ஷீஆக்களாகிய நீங்கள் ஏன் ஆதாரம் இல்லாத விடயங்களை தூக்கிக் கொண்டு அழைகின்றீர்கள்?

ஜவாத்: எது ஆதாரம் இல்லாத விடயம்?

ஜமால்: அதுதான் நீங்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களின் கப்ரையும் தங்களின் இமாம்களின் கப்ருகளையும் அதேபோல் நல்லடியார்களின் கப்ருகளையும் தரிசிக்கச் செல்கின்றீர்களே.

ஜவாத்: அதில் ஏதாவது தவறைக் காணுகின்றீரா?

ஜமால்: இது ஹராமான விடயமாகும். இதைச் செய்வது இறைவனுக்கு இணைவைப்பதற்கு சமம்.

ஜவாத்: அறிவிலிகள் போன்று நீங்கள் இவ்வாறு சொல்வதையிட்டு ஆச்சரியப் படுகிறேன். பிடிவாதக் கொள்கையோடு ஆதாரமில்லாது நீங்கள் பேசமாட்டீர்கள் என்றும் அன்று தொடக்கம் இன்று வரை ஒரு விடயத்தை அறிய ஆய்வை மேற்கொள்ளும் நீங்களா? இப்படி பேசுகின்றீர்?

ஜமால்: உனது கருத்துப்படி இது மத்ஹப் பிடிவாதமா?

ஜவாத்: பின்ன வேறென்ன?

ஜமால்;: எப்படி இந்த முடிவுக்கு வந்தாய்?

ஜவாத்: எனது வாதம் தெளிவாகுவதற்காக வேண்டி கப்ரகளைத் தரிசிப்பதைப் பற்றி அலசுவோம். அப்போது யார் நேர்வழியில் இருக்கின்றனர். யார் பிடிவாதத்துடன் வழிகேட்டில் இருக்கின்றனர் என புறிந்து விடும்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next