ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.முஹம்மத்: நீங்கள் குறைஷிக் காபிர்களைப் போல் இருக்கின்றிர். அதாவது அவர்கள் தங்களது சிலை வணக்கத்தை விடாதிருக்க தங்களது மூதாதையார்களை சாட்டுப்போக்காக எடுத்து இவ்வாறு சொன்னார்கள்.

انا وجدنا ءابآءنا  علي امة وانا علي ءآثارهم مقتدون ( سورة زحرف آية 23)

''நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு மார்க்கத்தில் (ஒரு வழியில்) கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளையே பின்பற்றுகின்றோம்'' (43:23)

இவ்வாறு கூறி அவர்கள் தங்களது வழியை சிலை வணக்கத்தை நியாயப்படுத்தினர். அல்லாஹுதஆலா ஏன் அவர்களை எச்சரிக்கை செய்தான் என உனக்குத் தெரியுமாஅவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  கூறியதற்கு அவர்கள் இருப்பது சரியா அல்லது தவறா என அறிந்து கொள்வதற்கு செவி சாய்க்காது சிலை வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் இதனாலேதான் அல்லாஹ் அவர்களை எச்சரித்தான்.

எனவே உங்களிம் வேண்டுவது கண்மூடித்தனமாக தன் மூதாதையார் செய்ததை பின்பற்றாது. ஒரு விடயத்தின் உண்மையை அறிய வேண்டும் என்ற எண்ணத்துடன் சிந்தனையுடன் செயல் பட்டு தன் வாழ்க்கை அதற்கமைய அமைத்துக் கொள்வீராக.

ஹதீது கிரந்தங்களை வாசிப்பது மூலம் இறைநேசர்களைக் கொண்டு தவஸ்ஸுல் தேடுவது ஷிர்க் ஹராம் என கூறும் சிலரின் கருத்து எல்லா முஸ்லிம்களது கருத்துக்கும் ஒத்ததாக இல்லை நேர்மாற்றமாக இருக்கின்றது என்பதைக் கண்டு கொள்வாய். இதை நீ ஏற்றுக் கொள்கிறாயா?

கமால்: ஆமாம்... நிச்சயமாக உண்மை ஷீஆக்களினதும் ஏனைய முஸ்லிம்களினது பக்கம் தான்.

இது வரைக்கும் நான் ஷீஆக்களுக்கு கடுமையாக ஏசியுள்ளேன் அவர்கள் தகாத வார்த்தைகளைக் கொண்டு விமர்சித்துள்ளேன் அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

முஹம்மத்: அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு கேட்டுக் கொள். எப்போதும் உண்மையை அறியலதற்கு முயற்சி செய் அப்போது அல்லாஹ் உன்னை மன்னிப்பான். ஷீஆக்களுடைய கொள்கைகள் பற்றி கேள்விப்படும் போது அதைப் பற்றி நன்கு விசாரித்துக் கொள். ஆராய்ந்து கொள். அப்போது உனக்கு உண்மை தெளிவாகும். உண்மை தெளிவானால் பிடிவாதத்தை விட்டு விட்டு உண்மையைப் பின்பற்றி நட. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்கள் சொல்லியுள்ளார்கள்: (இடத்திற்கேற்ப அல்லாத) பிடிவாதம் நரகத்திற்கு கொண்டு சேர்க்கும்.

கமால்: அப்படியே செய்கிறேன். எனக்கு இவ்வளவு விளக்கத்தைக் கொடுத்து உண்மையை புரிய வைத்ததிற்கு மிகவும் நன்றி.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next