ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.'அவர் இறைவினின் முன்னிலையில் உனதும் உன் தந்தையான ஆதமினதும் வஸீலா' என்ற வாசகம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களைக் கொண்டு வஸுலாத் தேடுவது ஆகும் என்பதற்கும் அது முஸ்தஹப்பாகும் என்பதற்கும்  முக்கிய ஆதாரமாகும்.

'தாரமி' தனது சஹீஹில் அபுல் ஜவ்ஸா என்பவரைத் தொட்டும் அறிவிக்கின்றார்:

'மதினா மக்கள் கடும் வரட்சியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். இதனால் அவர்கள் தங்களின் கஷ்டங்களை அன்னை ஆயிஷா நாயகியிடம் முறையிட்டார்கள்: அதைக் கேட்ட அவர் நாகயம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களின் கப்ரைப் பார்த்தவர்களாக இடையில் ஏதும் தடையில்லாது வானத்தைப் பாருங்கள் (அவர்களை அல்லாஹ்விடம் ஷபாஅத் செய்வதற்காக கொண்டு செல்லுங்கள்)

அவர்களும் அப்படியே செய்தார்கள் இந்த தவஸ்ஸுலின் முடிவாக வானத்தில் மழை பெய்யத் தொடங்கியது. புற்கள் முலைத்தன. ஒட்டங்கள் அதை உண்டன. ஆதனால் கொழுப்புக்கள் அதிகரித்து அவைகள் குண்டாகின. இதனால் அந்த ஆண்டு 'தெளிந்த ஆண்டு' என பெயர் சூட்டப்பட்டது. (சுனன் தாரமி பாக 1 பக் 43-44 பாபு மா அக்ரமல்லாஹு பிநபிய்யஹி பஃத மௌதிஹி)

  இதைப் போன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் வரலாற்றில் நடந்துள்ளன. அவைகள் ஹதீது நூற்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்கள் மரணித்த பின் அவர்களைக் கொண்டு தவஸ்ஸுல் தேடுவது ஆகும் என்பதையே கூறுகின்றது. இதன்படி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களைக் கொண்டு தவஸ்ஸுல் தேடுவது ஆகும், அது ஹராம், ஷிர்க் இல்லை என்றிருந்தால் இமாம்களை, நல்லடியார்களைக் கொண்டு தவஸ்ஸுல் தேடுவதும் ஆகும். ஏனெனில் இது ஷிர்க் ஹராமாக இருந்தால் அது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களைக் கொண்டு கேட்பதும் ஹராமாக தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும். அது ஆகும் என்றிருந்தால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களைக் கொண்டு மாத்திரம் ஆகும் என்றிராது சாலிஹான நல்லடியார்களைக் கொண்டு கேட்பதும் ஆகுமென கருதவேண்டும்.

கமால்: ஆச்சிரியமாக இருக்கு! நீ இப்போது கூறிய ஹதீதுகளில் எந்தவொரு ஹதீதையும் இது வரைக்கும் நான் கண்டிருக்கவுமில்லை, கேட்டிருக்கவுமில்லை.

முஹம்மத்: நீங்கள் ஹதீது கிரந்தங்களைப் புரட்டிப் பார்க்கின்ற போது இது போன்ற நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களைக் கொண்டு தவஸ்ஸுல் தேட முடியும் என்று வந்துள்ள பல ஹதீதுகளைக் காண்பீர். இப்போது நான் உங்களுக்குச் சொன்னது பெரும் சமுத்திரத்திலிருந்து எடுப்பப்பட்ட ஒரு பனித்துளிளைப் போன்றதாகும். மன்னிக்கவேண்டும் இப்படியான எனது வார்த்தைக் கேட்கும் போது நீங்கள் ஹதீது கிரந்தங்கள், சாலிஹானவர்களின் வரலாறுகளை வாசிக்க வில்லையெனத் தெரிகின்றது.

கமால்: என்ன செய்வது வாசிக்க ஆசைதான். இருந்தும் வேலைப்பளுக்கள் அதற்கு நேரம் கொடுப்பதில்லை.

முஹம்மத்: உங்களுக்கோ ஹதீத் துறையில் சிறிதளவு அறிவே இருக்கின்ற நிலையில் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் சொல்வதைக் கேட்டு ஷீஆக்களையும் ஏனைய முஸ்லிம்களையும் ஏசுவது, அவர்களை ஷிர்க் உடையவர்கள் குற்றம் சாட்டுவது சரியா? நீங்கள் அனுமதித்தால் இது பற்றி சில விடயங்களை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

கமால் சிரித்தவனாக முஹம்மதை நோக்கி விரும்புதைச் சொல். நாமிருவரும் நண்பர்கள். இதனால் தான் இவ்விடயத்தை தனக்குத் தெரிந்த விடயங்களை அறிந்து கொள்ள உன்னிடம் சொன்னேன்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next