ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.ஹஸரத் பிலால் அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களுடன் நீண்ட காலம் இருந்தார்கள். இஸ்லாமிய சட்டங்களை நேரடியாகவே நாகயம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டவர்கள் என நாம் அறிவோம். ஆகவே நாகயம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களை அழைத்தல் அவர்கள் மூலம் தவஸ்ஸுல் தேடுதல் ஷிர்க் என்றிருந்திருந்தால் நிச்சயமாக ஹஸரத் பிலால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அறிந்திருந்து செய்திரந்தால் நிச்சயமாக ஏனைய சஹாபாக்கள் அவரை இதை விட்டும் தடுத்திருப்பார்கள். இதுவே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்கள் மூலம் தவஸ்ஸுல் தேடுவது ஆகும் என்பதற்கு ஆணித்தரமான ஆதாரமாகும்.

மேலும் பைஹகி இரண்டாம் கலீபாவிடமிருந்து அறிவித்துள்ளதாவது: நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்கள் சொன்னார்கள்:

صلي الله عليه وآله وسلم    الا ما غفرت لي ...'      يا رب أسالك بحق محمد   '

ஹஸரத் ஆதம் (அலை) அவர்கள் தவறு செய்தபோது சொன்னார்கள்: இறைவா! முஹம்மதுடைய (ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்) பொருட்டால் எனது பாவத்தை மன்னிப்பாயாக. (சம்ஹுதி, குலாசதுல் கலாம் பக் 17, (எகிப்து பதிப்பு ஹிஜ்ரி 1305) , தபரானி, அல்முஃஜமுல் கபீர் பாக 9 பக் 18)

இதன்படி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களைக் கொண்டு தவஸ்ஸுல் தேடுவது ஷிர்க் என்றிருந்திருந்தால் நிச்சயம் ஹஸரத் ஆதம் (அலை) அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள்.

வேறொரு அறிவிப்பிலே வந்துள்ளதாவது:

'மன்சூர் தவானிகி ஹஜ்ஜுக்கு வந்து நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களை சியாரத், தரிசிக்கச் சென்றார். அங்கே மாலிக் மத்ஹபின் இமாம் மாலிக் அவர்களைச் சந்தித்து கேட்டார்: அபூ அப்தில்லாஹ்வே! கிப்லாவை முன்னோக்கி நின்றவனாக அல்லாஹ்விடம் துஆக் கேட்பேனா? அல்லது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களின் கப்ரை முன்னோக்கியவனாக நின்று கேட்பேனா?

அதற்கு மாலிக் அவர்கள் இவ்வாறு சொன்னார்கள்: ஏன் உனக்கும் உன் தந்தைக்கும் வஸீலாவாக இருந்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களை முன்னோக்கப் போகின்றாய்? அவர்களுக்கு அருகாமையில் போய் அவர்களை உனக்கு சபாஅத்து செய்பவர்களாக ஆக்குங்கள். (எவ்வித சந்தேகமுமின்றி) அல்லாஹ் அவர்கள் உமக்கு சபாஅத்துச் செய்வதை எற்றுக் கொள்வான் ஏனெனில் அவன் இவ்வாறு கூறுகின்றான்:

''...وَلَوْ أَنَّهُمْ إِذ ظَّلَمُواْ أَنفُسَهُمْ جَآؤُوكَ فَاسْتَغْفَرُواْ اللّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُواْ اللّهَ تَوَّاباً رَّحِيماً''  (سورة النساء آية 64)

...ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு, உம்மிடம் வந்து அல்லாஹ்விடத்தில் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக ரஸுலும் மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள். (4:64). (குலாசதுல் கலாம் பக் 17)back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next