ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.இந்நூலின் இறுதியில் உண்மையை விளங்கி அதைப்பற்றி நூற்களைக் எழுதியவர்களில் சில நூற்களை வாசகர்களின் கவனத்திற்கு தருகின்றோம் அவர்களும் இதைப் படித்து அல்லாஹ் அவர்களுக்கும் நேர்வழி காட்டுவானாக.

உண்மையைத் தேடி அறிந்து கொள்ள விரும்புகின்ற அனைவருக்கும் இந் நூல் பயன் மிக்கதாக அமையும் என நாம் நம்புகின்றோம்.

வெளியீட்டாளர்கள்.

முன்னுரை

இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழித்து அவர்களது ஆதிக்கத்தை உலகில் நிலை நாட்ட முயற்சி செய்தனர் செய்து கொண்டே இருக்கின்றனர். 'பிரிவினை ஏற்படுத்து ஆட்ச் செய்' என்ற அவர்களது அரசியல் கோஷத்தை இஸ்லாமிய நாடுகளிலே நடை முறைப்படுத்த முயல்கின்றனர். இந்த விரோதமான கொள்கை, இஸ்லாத்திற்கெதிரான கொள்கையை கையிலேந்திய சில முஸ்லிம்கள்  அல்குர்ஆன் அனைத்து முஸ்லிம்களையும் சகோதரர்கள் என்று அழைத்திருப்பதை மறந்து அவர்களை அறியாமலே ஷீஆக்கள் மீது பல குற்றச்சாட்டுக்களை சொல்லுகின்றனர். அது எந்தளவு உண்மை என்பது அவர்களுக்கே தெரியாது. அதாவது சொல்வது சரியா தவரா என்று சிந்திக்காது அதைப் பற்றி ஆராயாது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். அல்லது இவ்விடயத்தில் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவையும், அக்ல், பகுத்தறிவையும் உதவிக்கு எடுத்துக் கொள்ளாது முஸ்லிம்களின் மற்றக் குழுவினரை குற்றம் சாட்டுகின்றனர். ஏன் இந்த இஸ்லாமிய சமுகத்தினர் இஸ்லாத்தை விட்டும் அப்பால் பட்டவர்களா? அல்லது இஸ்லாமிய மத்ஹபு அல்லாதவைகளைப் பின்பற்றுகின்றனரா? அல்லது மார்க்க சட்டங்களை அதன் இமாம்கள், அறிஞர்கள் அல்லாதவர்களிருந்து பெருகின்றனராஇப்போது முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது அத்தியவசிய தேவையாகும். ஏனெனில் அடக்குமுறையாளர்கள் முஸ்லிம்கள் சின்னாபின்னப் படுத்தி அவர்கைள வழி கெடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இஸ்லாமிய மத்ஹபுகளுக்கிடையில பிரிவினை ஏற்படுவது இஸ்லாத்திற்கு பாதகமாகவே முடியும்.

இஸ்லாமிய மத்ஹபுகளைப் பின்பற்றுபவர்களுக்கிடையில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை அவர்கள் அமர்ந்து எவ்வித வீண் பழிகளுமின்றி அனைவரிடமும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இஸ்லாமிய அடிப்படையை வைத்து தீர்த்துக் கொள்ளவேண்டும். சில முஸ்லிம்கள் கருத்து வேறுபாடுள்ள விடயங்களை வைத்துக் கொண்டு மற்ற முஸ்லிமகளை குற்றம் சாட்டினால், அவர்கள் மேல் வீண் பழிகளைச் சுமத்தினால், ஒருவரையொருவர் காபிர் என்று சொன்னால் இஸ்லாமிய சமுக்ததின் ஒற்றுமையை புயல் வீசியடித்துக் கொண்டு போய் விடும். இதன் காரணமாக முஸ்லிம் சமுகத்திற்கு மத்தியில் பிரிவினை ஏற்படும் இறுதியில் அடக்குமுறையாளர்களின் சிந்தனை, பொருளாதாரம், சமுகம் இஸ்லாமிய பரப்பளவுகளில், மண்ணில், மக்களில் ஆட்கொள்ள எல்லா வகையான வழிவகைகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும். இதனால் தான் நாம் இச்சிறிய நூலிலே பிரிவினையை ஏற்படுத்த முயலும் கூட்டத்தினர் தங்களின் முக்கிய கோஷங்களாக எடுத்து அதை ஷீஆக்கள் மீது குற்றஞ்சாட்டும் சில விடயங்களை எடுத்து விபரிக்கப்பட்டுள்ளது. இதைப் படிக்கின்ற போது உண்மை நிலை தெளிவடைவதோடு இது விடயத்தில் முஸ்லிம்களும் தெளிவடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இறுதியாக அல்லாஹ்விடம் நம் அனைவருக்கும் மத்தியில் ஒற்றுமையை நிலை நாட்டி எதிரிகளின் சூழ்ச்சிகளில் இருந்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்கவேண்டும் என்றும் நல்லதைக் கேட்டு நல்லதைப் பின்பற்றும் உண்மை முஸ்லிம்களாக ஆக்குவதோடு நாளை மறுமையில் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களினதும் அன்னாரின் புனித குடும்பபமான அஹ்லுல் பைத்தினரின் ஷபாஅத்தையும் எங்களுக்கு நஸீபாக்குவானாக. ஆமீன்.

                                                         சாதிக் ஹுஸைனி ஷீராஸி கர்பலா.

மண்ணின் மீது ஸஜதா செய்தல்

ஷாமி: அலி ஷீஆக்களான நீங்கள் மொஹ்ர் என்று கூறப்படும் காய்ந்த களிமண்ணில் மேல் ஸஜதா செய்து அதை வணங்கி அல்லாஹுக்கு இணை வைக்கின்றீர்கள்.

அலி: இப்போது உன்னிடம் சில கேள்விகளைக் கேற்பதற்கு அனுமதி தருவாயா?

ஷாமி: கேளுங்கள்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next