ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.முஹம்மத்: அவர்கள் கேட்கின்றார்கள் அவர்களிம் தேவைகளைக் கேட்டல், துஆச் செய்யும் படி கூறல் அல்லது பாக்கிரே!, ஜஃபரே!, ரிழாவே! ... எனக்கு இதைத்தா, அல்லாஹ்விடம் எனது பாவத்தை மன்னிக்கும் படி துஆச் செய்யுமாறு சொல்லல், கையைப் பிடித்து பள்ளி வாயலுக்கு கொண்டு போ.. என்று கூறல் (மார்க்கத்தின் கண்ணோட்டத்தில்) ஆகுமா?

கமால்: அது ஆகும்.

முஹம்மத்: மரணித்த மனிதர் உயிருடன் இருப்பவர்களைப் போல் கேட்கின்றனர் என ஆதார பூர்வமாக நிருபித்தேன் இந்நிலையில் ஒருவர் அவரிடம் வேண்டுதல், அவரைக் கொண்டு தவஸ்ஸுல் தேடுதலில் என்ன தடையுள்ளது?

கமால் சற்று மௌனமாக இருந்து விட்டு, தலையை உயர்த்தி நீ சொல்வது போல் உண்மையதான் என்றான்.

முஹம்மத்: நாகயம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களைக் கொண்டு, சாலிஹானவர்களைக் கொண்டு தவஸ்ஸுல் தேடுவது ஆகும் என்பதற்கு வேறு ஆதாரங்களும் இருக்கின்றன.

கமால்: அது என்ன ஆதாரம்?

முஹம்மத்: நாகயம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களின் காலத்தில் இருந்த சஹாபாக்கள், நபித்தோழர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்கள் மரிணித்த பிறகு அவர்களைக் கொண்டு தவஸ்ஸுல் தேடினார்கள். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்கள் உயிர் வாழ்ந்த காலத்தில் சஹாபாக்கள் தவஸ்ஸுல் தேடியபோது அவர்கள் தன் தோழர்களைத் தடுக்க வில்லை. இன்னும் அவர்களுக்குப் பிறகும் நபித்தோழர்கள் தவஸ்ஸுல் தேடுவதை தடை செய்யவில்லை. அல்லாஹ் அல்;லாதவற்றைக் கொண்டு தவஸ்ஸுல் தேடுவது ஷிர்க் என்றிருந்தால் நிச்சயமாக எவ்வித சந்தேகமுமின்றி அவர்களே அதைத் தடுத்திருப்பார்கள்.

கமால்: நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களுக்கு பிறகு யார் அவர்களைக் கொண்டு தவஸ்ஸுல் தேடினார்கள்?

முஹம்மத்: உதாரணத்திற்காக சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.

'பைஹகி' (சுனனுல் குப்ரா, பைஹகி), இப்னு அபீ ஸைபா (அல்முசன்னப்) ஆகியோர் சஹீஹான ஸனதைக் கொண்டு அறிவித்துள்ளதாவது, இன்னும் அஹ்மத் இப்னு ஷைனி தஹ்லான்; (சீரா, அஹ்மத் இப்னு ஷைனி தஹ்லான்) என்பவரிடமிருந்தும் அறிவிக்கப்பட்டுள்ளதாவது: ' இரண்டாம் கலீபாவின் காலத்தில் மக்கள் வறுமை, பஞ்சம், வரட்சியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது செய்யிதினா பிலால் இப்னு ஹர்த் அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களின் கப்ருக்கு அருகில் சென்று சொன்னார்கள். ' யா ரஸுலல்லாஹ்! உமது உம்மத்தினருக்காக மழை பொழியச் செய்யுமாறு வேண்டுவீராக அவர்கள் (வரட்சியால் பசியினால் கடும் கஷ்டத்தை எதிர் கொண்டு) அழியும் தருவாயில் இருக்கின்றார்கள்' (அத்துரருஸ் சனிய்யா பக் 18).back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next