ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.கமால்: ஆமாம். எனது வாழ்நாளில் ஒரு தடவையேனும் இந்த வசனங்களில் அதன் உண்மையான கருத்தை உரிய முறையில் அறிந்து கொள்ளும் வகையில் நன்கு கூர்ந்து கவனிக்க வில்லை, ஒரு தடவையேனும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களின் இந்த ஹதீதை, எமது பெரியார்களின் ஒருவரான இமாம் கஸ்ஸாலி அவர்களின் இந்த வார்த்தையைக் கேட்கவில்லையென கவலையடைகின்றேன்.

முஹம்மத்: ஷீஆக்கள் மரணித்த பின் மனிதன் அழிவதில்லை என சொல்லுவது ஆதார பூர்வானதும் உண்மையானதுமாகும் இப்போது ஏற்றுக் கொண்டீரா  அல்லது இன்னமும் சந்தேகத்தில் இருக்கின்றீரா?

கமால்: இல்லை, இதில் சந்தேகம் இல்லை. ஆனால் வேறொரு விடயம் என்னைக் குழப்புகின்றது?

முஹம்மத்: எவ்விடயத்தால் குழம்பியுள்ளாய்?

கமால்: கஸ்ஸாலி இவ்வாறு நம்பிக்கை கொண்டு அதை மறுப்பவர்களை காபிர்கள் எனவும், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களும் மரணித்தவர்கள் உயிருடன் இருப்பவர்களைப் போல்  கேட்கின்றனர், விளங்குகின்றனர் என கூறியிருக்கின்ற போது ஏன் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் மாத்திரம் மனிதன் மரணித்த பின் இல்லாது போகிறான் என நம்புகிறார்?

மறுபுறம் ஏன் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ஒரு புரண மனிதரை இழிவு படுத்த வேண்டும். அதாவது அவர் இவ்வாறு கூறுகிறார்: 'அவரது கையில் இருக்கும் தடி (அஸா) நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களை விட சிறந்தாகும் ஏனெனில் அது அவருக்கு உதவுகின்றது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களோ அவருக்கு பிரயோசனமானவர் இல்லை?' (சுஹதாஉல் பளீழா பக் 294) இதன் மூலமாகத்தான் குழம்பியுள்ளேன்.

முஹம்மத்: இல்லை. ஒரு போதும் இவைகளைக் கண்டு தளரவோ அல்லது ஆச்சரியப்படவோ கூடாது. இங்கே பார், நாம் ஒவ்வொருவரையும் அல் குர்ஆன், சுன்னா (நபிவழி), முன்சென்ற நல்லவர்களின் வழிமுறை எனும் தராசில் வைத்து கவனிக்க வேண்டும். அவர்கள் சொல் செயல்கள் அல்குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் சாலிஹான நல்லடியார்களின் வழிமுறைகளுக்கும் ஒத்துப்போனால், சராசரியாக இருந்தால் அவர்கள் முஃமின்களாகும். ஒருபோதும் மார்க்கத்தை சிலரைக் கொண்டு அறியவும் கூடாது அளவிடவும் கூடாது. ஒருவரை நாம் முஃமின், முஹ்லிஸ் என கருதினால் அவரது சகல சொல் செயல் நடை முறைகளை அது அல் குர்ஆன், அல்சுன்னா, முன்சென்ற நல்லடியார்களின் வழி முறைக்கு நேரடியாக மாற்றமாக இருந்தாலும், அது குப்ரின் அடிப்படையைக் கொண்டிருந்தாதலும் சரி அதை நாங்கள் இது தான் இஸ்லாம் என கருத முடியுமா? அல்லது எடுத்துக் கொள்ளத்தான் முடியுமா?. இல்லை ஒரு போதும் எடுத்துக் கொள்ள முடியாது. மாறாக எவரிடம் வழிகேடு காணப்படுகின்றதோ அவரை தூக்கி எறிந்து விட்டு அவரை விட்டும் தூரமாகி உண்மை எவரிடத்தில் இருந்தாலும் எங்கு இருந்தாலும் அதை எடுத்து பின்பற்றுவது நம்மீது கடமையாகும்.

கமால்: உண்மைதான், அப்படித்தான். இதுவரைக்கும் நான் இந்த மனிதரின் (முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபின்) மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் இப்போது அவரது தவரான, குப்ரிய்யதின் பால் கொண்டு சேர்க்கும் பிழையான கோட்ப்பாட்டை எனக்கு புறிய வைத்து விட்டாய். இப்போது எனக்கும் அவரின் மீதிருந்த நம்பிக்கை எல்லாம் இல்லாது போய் விட்டது. இதன் பிறகு அவரை மார்க்கத்தையும் இஸ்லாமிய சட்டங்களையும் அவரிடமிருந்தும் பெறமுடியும் என்ற ஒரு அறிஞராக கருதவே மாட்டேன்.

முஹம்மத்: அவரை (முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபை) ப்பற்றி பேசுவதை விட்டுவிட்டு நமது விடயத்தைத் தொடருவோம்.

கமால்: சரி, மனிதன் மரணித்த பிறகு அழிய மாட்டான் என ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இந்த சிந்தனை கற்பனை இருப்பதுடன் அவர் சொல்கிறார்: ' இறைவனது படைப்புக்களைக் கொண்டு தவஸ்ஸுல் தேடுவது ஷிர்க் தீனை விட்டும் துண்டித்து விடும்' இந்நிலையில் எப்படி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம், இமாம்கள், சாலிஹான நல்லடியார்களைக் கொண்டு தவஸ்ஸுல் தேடமுடியும்?back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next