ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள், மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (3:169)

சஹீஹ் புஹாரியிலே வந்துள்ளதாவது:

'நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் 'கலீபுல் பத்ர்' (பத்ர் போரில் கலந்து கொண்டு முஷ்ரிகிகளின் படையில் கொல்லப்பட்டவர்களை போட்ட கிடங்கு, இடம்) இற்கு அருகில் வந்து முஷ்ரிகுகளின் கொல்லப் பட்டோரைப் பார்த்துச் சொன்னார்கள்: எதையெல்லாம் எமது இறைவன் எங்களுக்கு வாக்களித்தானோ அதை நாம் உண்மையென கண்டு கொண்டோம். நீங்களும் தம் இறைவன் கொடுத்த வாக்குகளை உண்மையெனக் கண்டு கொண்டீர்களா?

அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து சொல்லப்பட்டது: மரணித்தவர்களைப் பார்த்தா அழைக்கின்றீர்கள்? அதற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் அவர்களை விட கூர்மையாக கேட்கக் கூடியவர்காள இல்லை.' (சஹீஹுல் புஹாரி பாக 1 பக் 462 பாபு 85 ஹதீது 1304, கிதாபுல் ஜனாயிஸ் மப்ஹது அதாபில் கப்ர். இதே ஹதீது வேறொரு விதத்திலும் அறிவிக்கப் பட்டுள்ளது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்கள் பத்ர் போரில் கொலை செய்யப்பட்ட முஷ்ரிகீன்ளைப் பார்த்துச் சொன்னார்கள் எவற்றையெல்லாமத் உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்தாளோ அவற்றை உண்மையெனக் கண்டு கொண்டீர்களா? அப்போது நாயகத்தோடு இருந்தவர்கள் மரித்தவர்களுடனா பேசுகின்றீர்கள் எனக் கேட்டார்கள்? அதற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்கள், நீங்கள் அவர்களை விட நன்கு கேட்பவர்களாக இல்லை. ஆனால் அவர்களுக்கு விடை கொடுக்கும் சக்தியில்லை என்று பதிலளித்தார்கள்)

மேலும் ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்த பெரும் அறிஞர்களில் ஒருவரான கஸ்ஸாலி என்பவர் கூட இவ்வாறு சொல்லுகிறார்;:

'சிலர் மரணம் அழிவு என கற்பனை செய்கின்றனர்... இது முல்ஹிதூன்களுடைய (காபிர்களுடைய) கற்பனையாகும்'           (அபூஹாமித் முஹம்மத் இப்னு முஹம்மத் கஸ்ஸாலி, இஹ்யாவுல் உலூமித்தீன் பாக 4 பக் 493, பாடம் 7 பஸ்லு பயானி ஹகீகத்தில் மௌத்)

கமால்: இமாம் கஸ்ஸாலியா மரணம் அழிவு என நன்புதை காபிர் இல்ஹாத் எனக் கருதுகிறார்?... இது எங்கே வந்துள்ளது?

முஹம்மத்: இஹ்யாவுல் உலூமித்தீன் என்ற நூலில் இவ்விடயம் கூறப்பட்டுள்ளது. இந்நூலைப் புரட்டிப் பார்ப்பது மூலம் இந்தக் கருத்தை அறிந்து கொள்வாய்.

கமால்: கஸ்ஸாலியுடைய இந்த வார்த்தை மிகவும் ஆச்சரியத்தைக் கொடுக்கின்றது!

முஹம்மத்: கஸ்ஸாலியுடைய இந்த வார்த்தையைக் கண்டு ஆச்சரியப்படத் தேவையில்லை. மாறாக உனக்கு தெரியாது என்பதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்ட முஷ்ரிகுகளைப் பார்த்து பேசியதை நீ கேட்க வில்லையா? உண்மையில் இறந்தவர்கள் இல்லாது அழிந்து போய் விடுகின்றார்கள், அவர்களுக்கு கேட்கவும் முடியாது, அதை விளங்கும் சக்தியும் கிடையாது என்றிருந்தால் இன்னும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்கள் ' நீங்கள் அவர்களை விட அதிகமாக கேட்க மாட்டீர்கள் என்று சொல்லியிருக்கவே மாட்டார்கள்' ( சஹீஹுல் புஹாரி பாக 1 பக் 462 பாபு 85 ஹதீது இல 1304 கிதாபுல் ஜனாயிஸ், மப்ஹதுல் அதாபில் கப்ர்)back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next