ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.முஹம்மத்: ஏன் இவர்களின் மூலம் தவஸ்ஸுல் தேட முடியாது?

கமால்: ஒவ்வொரு மனிதனும் அவன் மரணித்த பிறகு அழிந்து இல்லாது போய் விடுகிறான். அவனின் மூலம் எவ்வித பிரயோசணமும் பெற முடியாது. இவ்வாறு இருக்கின்ற போது அழிந்த ஒன்றின் மூலம் எவ்வாறு தவஸ்ஸுல் தேட முடியும்?

முஹம்மத்: மரணித்தவர்கள் இல்லாது அழிந்து விடுகின்றனர் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? யார் இதைச் சொல்லுகின்றார்?

கமால்: இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் சொல்லுகிறார்: ' மரைந்த நல்லவர்களைக் கொண்டு தவஸ்ஸுல் தேடுவது உண்மையில் அது இல்லாதவற்றின் பால் செல்வதாகும். இச்செயல் சிந்தனையின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்படாத மோசமான விடயமாகும். மேலும் அவர் தனது கையில் இருக்கும் தடி (அஸா) நாயகத்தை விட பிரயோசனம் மிக்கதாகும். ஏனெனில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் அனைவருக்கும் பிரயோசணமுள்ளவாராக இருந்தார்கள். ஆனால் இப்போது மரணித்து இல்லாது போய் விட்டார். எவ்வித பிரயோசனமும் பலனும் தராத ஒரு கட்டையைப் போலாகி விட்டார். ஆனால் அவரது கையில் இருக்கும் தடி (அஸா) அவருக்கு பல வழிகளில் உதவுகின்றது. அவர் அதைக் (மண்ணில்) ஊண்டிக் கொண்டு மக்களை நேர் வழிப்படுத்துகிறார். எனவே கையில் இருக்கும் தடி மார்க்கத்திற்கு மிகவும் பலன் கொடுக்கின்றது' (அல்லாமா அமீனி சுஹதாஉல் பழீளா பக் 293-294)

எனவே மேற்கூறிய கூற்று, அது போன்றவற்றின்படி மரணித்தவர்களைக் கொண்டு தவஸ்ஸுல் தேடுவது ஏற்றுக் கொள்ள முடியாத மோசமான விடயமாகும். அது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களாக இருந்தாதலும் சரியே!

முஹம்மத்: விடயம் முற்றிலும் இதற்கு மாற்றமாகும். ஒருவர் மரணிக்கின்ற போது அவர் உயிர் வாழ்ந்த போது அவருக்கு தென்படாத பல உலகங்கள் அவருக்கு வெளிப்படுகின்றது, தென்படுகின்றது. அல்லாஹுதஆலா இதைப் பற்றி இவ்வாறு கூறுகின்றான்:

(இப்பொழுது) உன் (பார்வையை) விட்டும் உனது திரையை அகற்றி விட்டோம். எனவே, இன்று உன் பார்வை கூர்மையாக இருக்கிறது. (50:22)

' وَلاَ تَقُولُواْ لِمَنْ يُقْتَلُ فِي سَبيلِ اللّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاء وَلَكِن لاَّ تَشْعُرُونَ '  (سوره البقره 154)

இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை ''(அவர்கள்) இறந்துவிட்டார்கள்'' என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.(2:154)

' وَلاَ تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُواْ فِي سَبِيلِ اللّهِ أَمْوَاتاً بَلْ أَحْيَاء عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ '  (سوره آل عمران 169)back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next