ஷீஆக்களும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்.கமால்: அவர்கள் இறைவனுக்கு அடுத்தாற் போல் வேறு பல கடவுள்களையும் எடுத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு எவ்வகையிலும் பிரயோசணம் கொடுக்காதவற்றையெல்லாம் அல்லாஹ்வுடைய இடத்தில் வைத்து வணங்குகின்றனர்.

முஹம்மத்: இது எப்படி முடியும்?

கமால்: அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களைக் கொண்டும் இமாம்களைக் கொண்டும் இறைநேசர்களைக் கொண்டும் இறைவனிடம் தவஸ்ஸுல் கேட்கின்றனர். மேலும் அவர்கள் யா ரஸுலல்லாஹ், யா அலி, யா ஹுஸைன், யா சாஹிபஸ் ஸமான் போன்ற வார்த்தைகளால் அவர்களை அழைத்து அவர்களிடம் தங்கள் தேவைகளை நிறைவேற்றுமாறு வேண்டுகின்றனர். ஷீஆக்கள், அவர்கள் இறைநேசர்கள் மக்களது தேவைகளை நிறைவேற்ற முடியும் என வாதிடுகின்றனர். உனது கருத்தின் படி இவைகள் இறைவனுக்கு இணைவைப்பதைத் தவிர வேறில்லையா?

முஹம்மத்: இங்கே உனக்கு சிறியதோர் விடயத்தைக் கூற ஆசைப்படுகின்றேன்.

கமால்: சொல்லு.

முஹம்மத்: நானும் கூட ஷீஆக்களை ஏசுபவர்களில் அவர்கள் மீது பழி சுத்தபவர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவனாகவே இருந்தேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் இல்லாத நிலமையைப் பார்த்து அவர்களுக்கு ஏசிக் கொண்டிருந்தேன். இறுதியில் ஒரு முறை ஹஜ்ஜுக்கு சென்ற போது எதிர் பாராதா விதமாக ஷீஆ ஒருவருடன் அறிமுகமானேன். அப்போது பல வருட காலமாக உள்ளத்திpல் வைத்திருந்த கோபத்தையும் பகையையும் விரோதத்தையும் வார்த்தையால் மொழிந்தேன்.  ஆனால் அவர் மிகவும் பொருமையோடு அமைதியாக இருந்தார். அவருடைய முகத்தில் சந்தோசமே காணப்பட்டது அவர் என்னைப் பதார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். அவருக்கு எவ்வளவு ஏசியும் பேசியும் அவர் என்னைப் பார்த்துக் சிரித்துக் கொண்டேயிருந்தார். எனக்கு அவர் மேல் கொண்டிருந்த கோபம் சிறிதளவு கூட அணைய வில்லை. நான் பேசுவதை நிறுத்திய போது அவர் என்னைப் பார்த்து சகோதரனே உனக்கு சில விடயங்களைக் சொல்ல அனுமதி தருவாயா? என்றார்.

எனக்கும் அவருக்கும் இடையில் பலதரப்பட்ட விடயங்களில் பேச்சு வார்த்தை, வாக்கு வாதம் நடந்தது. இறுதியில் அவர்கள் உண்மையானவர்கள் என்பதை தவஸ்ஸுலுடைய விடயமே எனக்கு புரிய வைத்தது.

கமால்: நீயும் அவர்களது ஏமாற்றத்திற்கு மயங்கி அதை ஏற்றுக் கொண்டு விட்டாய்.இஸ்லாத்தையும் மார்க்கத்தையும் பற்றி உன்னிடம் சிறிதளவே அறிவு இருக்கின்றது!.

முஹம்மத்: இறைநேசர்களைக் கொண்டு தவஸ்ஸுல் கேட்பது பற்றி அல்குர்ஆனையும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவல்களின் சுன்னாவில் இருந்தும் சாலிஹான முஸ்லிம்களின் வழி முறைகளைக் கொண்டும் உன்னுடன் பேச நான் தயாராக இருக்கின்றேன்.

கமால்: அல்லாஹுதஆலா அவனது எல்லாப் படைப்புக்களையும் விட அவனது அடியார்களின் மது மிகவும் இரக்கமுடையவன். அவனுக்கும் தன் படைப்புக்களுக்கும் இடையில் எவ்வித தடையுமில்லை. இதனால் அவனது அடியார்கள் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் யாருடைய உதவியுமில்லாது அல்லாஹ்விடம் நேரடியாக கேட்க முடியும். இதனால் நபிமார்களைக் கொண்டும், இமாம்கள், மலக்குமார்கள், நல்லடியார்களைக் கொண்டு தவஸ்ஸுல் தேடுவது ஆகாது. அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் பெரும் அந்தஸ்த்து இருந்தாலும் சரியே!back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 next